இராஜஇராஜேஸ்வரி அவர்கள் வழங்கிய விருது

இராஜஇராஜேஸ்வரி  அவர்கள்  வழங்கிய  விருது

Saturday 31 December 2011

நாங்கள் தமிழர்கள் வரிசை 2


எங்களின் பழமையையும்
காப்பதில்லை
மொழியையும் போற்றுவதில்லை .

மலையாளப்  புத்தாண்டு
தெலுங்குப்  புத்தாண்டு
சமற்கிருத  புத்தாண்டு
ஆங்கிலப் புத்தாண்டு
எல்லாப்  புத்தாண்டையும்
மானமில்லாமல் கொண்டாடுவோம்
கண்மூடித்தனமாய் வணங்குவோம்.

எங்களின்  பாரம்பரியத்தைச்
சொன்னால்  புறக்கணிப்போம் .

பல்லாயிரத்தாண்டாய்
""தை "" முதல்நாளே
தமிழர்  புத்தாண்டு
என்றார்  பாவேந்தர் .
உண்மையை  ஏற்போமா ?

இதில்  அறிவியலுமுண்டு
கதிரவன் தென்மேற்கு
திசையிலிருந்து
வடமேற்கு  திசைநோக்கி
சாயத் தொடங்கும்
காலமான  சுறவத் (தை )
திங்களே  ஆண்டின்
தொடக்கம்  அறிஞ்சர்
சொன்னது .

தமிழரின்  தனிப்
பெரும்  அறிவியலை
நிலைநிறுத்தும்  போது
தமிழன்  உயர்வான்
சிந்திப்போமா ?

இளந்தமிழா,கண்விழிப்பாய்
இறந்தொ   ழிந்த
பண்டைநலம்  புதுப்புலமை
பழம்  பெருமை
அனைத்தையும்  நீ
படைப்பாய்! இந்நாள்
என்றார்  பாவேந்தர்
சிந்திப்போமா ?
புதிய  வரலாறை
படைப்போமா ?


     மேதகு  வேலுப்பிள்ளை  பிரபாகரன்  அவர்களின் படம் , தமிழீழ  வரைபடம் , விடுதலைப்  புலிகளின்  மலர்  விடுதலைப் புலிகளின்  கொடி ஆகியவற்றை  அஞ்சல்  தலையாக  பிரான்சு  நாடு  வெளியிட்டு  உள்ளது  அந்நாட்டை  வணங்கு வோம்  பாராட்டி மகிழ்வோம் .

Tuesday 27 December 2011

நாங்கள் தமிழர்கள்

நாங்கள்  சிலந்தி
வலைகளைக் கண்டே
அச்சப்படுகிறோம்
சிறைக்கதவம்  பற்றி
சொல்வானேன்.

நாங்கள்
கூட்டாக  வாழ்வதைப்
பற்றி  கனவு
காண்பதில்லை .

எதன்
பொருட்டும் ஒன்றுபடுவது
இல்லை .

நாங்கள்
ஒன்றானால்
பகைவன்
அச்சம் கொள்வானே .

எங்கள்
தலைவர்கள்  வளமோடு
வாழ்வதற்கே
நாங்கள்  வறுமையில்
வாடுகிறோம்.

 நாங்கள்
சிதைந்தே  கிடைப்பது
எங்களுக்கு பல
தலைவர்கள்
வேண்டும்  என்பதால்தான் .

ஒருவர் குழிபறிப்பார்

ஒருவர் கொள்கைபேசுவார்
ஒருவர் மேடையில்
வீரங் காட்டுவார்.

ஆக எல்லோருமே
எங்களின்  ஒட்டு
மொத்த  பகைவர்களுக்கே
பல்லக்கு  தூக்குவார் .

நாங்கள்
சிதறிக்  கிடப்பதொடலாமால்
சிந்திக்கவும்  செய்வதில்லை .

சிந்திப்பதை  எங்கள்
தலைவர்களிடம்  தத்து
கொடுத்துவிட்டோம் .

அப்போதுதானே 
நாங்கள்  சுமைகளைமட்டுமே
தூக்க  இயலும் ?



          எமது முந்தய  பதிவு குறித்து  சிலர்  நித்தய  கல்யாணி  பற்றி மருத்துவ  குறிப்புகளை  எழுதச்  சொன்னார்கள்  மருத்துவக்  குறிப்புகளை  மருத்துவர்கள்  மட்டுமே  எழுதப் படவேண்டும்  ஒரு மூலிகைக்கு  பல  குணம்  உண்டு  முறையான  மருத்துவர்தான்  அதனை முறையாக  வெளிப்படுத்துவார் .ஒரு மூலிகையின் சிறப்புகளை  மட்டுமே எழுதுவது  படி (காபி ) எடுத்தல் போன்றதாக இருக்கும்  ஆனால் முறையான மருத்துவர்  எல்லா  செய்திகளையும் உள்ளடக்கி  நல்லது  கெட்டது அனைத்தையும்  கூறி தெளிவாக்குவார்  என்பதால் அந்த  கோரிக்கையை  நிறைவேற்றாமல்  மருத்துவர்களிடம்  விட்டு விடுகிறேன் .

  ௧. polurdhayanithi.blogspot.com
  ௨. தோழியின்   சித்தர்கள்  இராஜ்ஜியம்  போன்றோரின்  வலைபூக்களை  கணாலாம்

Saturday 17 December 2011

மரண சாசனம் ....



இதோ ...
மரண  சாசனம் வரைகின்றேன்

என்
சடலத்தின் மேல்
பூக்களும்  வேண்டாம்
கண்ணீர்த்  துளிகளும்
வேண்டாம் .

நான்
பிறப்பெடுத் ததின்
நோக்கமே
மரித்துப்  போவதற்குத்தான் .

நான்

எதன்பொருட்டும்
கண்ணீர்  சிந்தியதில்லை .

என்
இதயம் இரும்பும்
இல்லை .

எனது
இறப்பிற்கு
சரவெடியும்  வேண்டாம்
சாப்பறையும்   வேண்டாம் .

பறவைகள்
அச்சமின்றி  வாழட்டும்
சூழல் நலன்
காக்கப் படட்டும் .

என்
கண்களும் ...

இதயமும் ...
உடலுறுப்புகளும்
அறுத்தெடுக்கப்  படட்டும் .

செப்படி  வித்தைதான் .
இருந்து விட்டுபோகட்டும்.
யாருக்கேனும்
என்னுடல் உறுப்புகள்
பயன் படட்டும்.

எனது ...
கல்லறையில்
கல்லறைப்பூக்கள்
(நித்யகல்யாணி ) மலரட்டும்.

யாரேனும்  ஒரு
புற்று  நோயாளி
நலன் பெறட்டும்.

என்
மரணத்திலேனும்
சிலர்  பாடம்
படிக்கட்டும் .

மரித்துப்  போன

நிலையிலும்  நான்
மற்றவர்களுக்காய்
வாழத்  துடிக்கிறேன் .

மரண சாசனம்
வரைகின்.......


                                    நித்யகல்யாணி  புற்று  நோய்க்கு மிக  சிறந்த மருந்து .

Saturday 3 December 2011

மலட்டுவிதை மான்சென்டோ

                                                     

முன்பு ...
இந்தியாவில்
புரட்சி  செய்கிறோம்
என்றார்கள் .

செய்தும்  காட்டினார்கள்
ஆட்சியாளர்கள் வேளாண்புரட்சி .

வீரியரக  விதைகள்
கோதுமையில் ,நெல்லில்
இதனால்
விளைநிலங்கள்
விலை நிலமாகிப்போனது .

மண்வளமே
பாழாய் போச்சுது
இரண்டாம்  உலகப்
போரின் வெடிமருந்து
சொம்மாவா ?

நம்  நாடுபோலவே
சோமாலியாவும்
வளமாகவே  இருந்தது .

அமெரிக்க மாமா
வந்தார் கோகோ
போடச்சொன்னார் .

நாங்கள்  வளமோடு
வாழ்கிறோம்  வேண்டாமென்றார்கள் .

கடன்தருகிறோம் பயிரிடு
என்றான்  மாமா .

தவறான  வழி
ஆசைதானே  அழிவிற்கு
வழி .

கோகோ  போட்டன்
சிலர்  கொழுத்தனர்
பலர் வியந்தனர் .

நாடு முழுமையும்
கோகோ  பயிரே
கோலோச்சியது .

மரபுவழி  விதையும்
பயிரும்  பாழாய்போச்சு .

காலச்  சூழலில்
கோகோ விளைச்சலின்
தரமும்  குறையலாச்சு .

உங்கள் கோகோ
எமக்கு  வேண்டாமென்றான்
மாமா .

வெட்டவும் இயலாமல்
வீழ்த்தவும்  இயலாமல்
பட்டினியின்  பிடியில்
இன்று  சோமாலியா .

இந்த ...
மான்சென்டோ  மலட்டு
விதைதான்  இப்போது
இந்திய  சந்தையில்
நெல்லில்...
கோதுமையில் ...
மக்கா சோளத்தில்...

மண்ணும் பாழாய் ...
உணவும் இல்லாமால்
நாம் மடியப்போகும்  நாள்
விரைவில்  வரும்
அப்போதாகிலும்
விழிப்போமா ?