இராஜஇராஜேஸ்வரி அவர்கள் வழங்கிய விருது

இராஜஇராஜேஸ்வரி  அவர்கள்  வழங்கிய  விருது

Saturday 21 January 2012

தோற்றுவாய்

    இப்போதெல்லாம்  காதல் 
இலக்கியங்களைக்  கற்றதனால் 
தோற்றங் கொள்ளுவதில்லை .

மாறாக மட்டரக 
திரைப்படங்களின்  வழி 
காதல்  பெறப்படுகிறது .

மட்டரக  காதல்
மாவீரர்களைத்  தோற்றங்கொள்ளச்  
செய்வதில்லை .

இலக்கியக்  காதல் 
வீரத்தையும்  வாழ்வியலையும் 
படம் பிடித்துகாட்டி 
பாடமாக  விளங்கியது . 

திரைப்படங்களுக்கு 
அங்கன மெல்லாம் 
இருக்க  தேவையில்லை .

காதல்  வெறும் 
இன  கவர்ச்சி
மட்டுமே  கவர்ச்சியை 
காட்டும்  காசுபார்க்கும் .

விரைந்தொட்டும் பசைபோல 
இன கவர்ச்சி  விரைந்துகூடி 
 விரைந்து  பிரியும் .

கற்று கொடுக்காமை 
இந்த குமுகத்தின்பிழை  
ஊடலும்  கூடலும் 
இயல்புதான்  எனினும் 
இப்போதைய  காதல் 
முறிவை  நோக்கியே 
முன்னே  நகருகிறது .

ஒன்று பட்டு  வாழ்வதற்க்கான 
சூழலை  கண்டறிவோம் 

பிணக்குகளை  புறந்தள்ளி 
ஒற்றுமைக்கான  காரணங்களை 
கண்டறிந்து  கற்ப்போம் 
புதிய  காதல்பாடம்.

Saturday 14 January 2012

தமிழர் திருநாள் வாழ்த்துகள்

இருட்டு உடையட்டும்
விடியல் பிறக்கட்டும்
தரணி போற்றிடும்
தமிழர் வாழ்வில்.


திசைமாறி உதிக்கும்
ஆதவன் திக்கெட்டும் 
தீக்கதிர் பறப்பட்டும்
போலிகள் வீழ்ந்துமடியட்டும் .


அறியாமை இருள்நீங்கி 
பகலவன் தோன்றட்டும் 
ஆர்பரிக்கும் கடலலையாய்
தமிழர்கலைகள் விண்ணைமுட்டட்டும்.


தமிழன்நீடுதுயில் நீங்கி
நிலம் கிழித்து
காட்டை வளமாக்கி 
பொன்னை விளைக்கட்டும்.


கன்நெலும் செந்நெலும் 
காடெலாம்கழனியெலாம் விளைந்து
வீடெலாம் வீதியெலாம்            
நெற்கதிர் குவியட்டும்.


கரும்புபாகாகி கட்டியாகி
நம்குருதியாகி எலும்பாகி 
தோள்கள் வலிமைபெறட்டும் 
பகைவன் ஒடிஒழியட்டும் .


நம்பழமையும் அறிவியலும் 
வானவியலும் கட்டிடக்கலைகளும்
தமிழர் மருத்துவமும் ஆனஎல்லாக் 
கலைகளும் வளம்பெறட்டும்.


சாதிமதப் பித்தொழிந்து
சமத்துவம் உதிக்கட்டும் 
உலகச்சமாதானம் தொன்றட்டுமென 
இத்தமிழர் திருநாளில் 
வணங்கி வானமாகிவாழ்த்துகிறேன் . 


கரும்பு வெல்லம் குருதியைப் பெருக்கும் எலும்பை வளர்க்கும் வளப்படுத்தும் . 


அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் நாள் வாழ்த்துகள் .     




    .... என்றும் மாலதி                                             

Sunday 8 January 2012

கலைகளைக் காப்போம்

 

தரணி போற்றிடும்
தமிழர்க்  கலைகள்
விண்ணை  முட்டி
உயர்ந்து  நின்றவை

கட்டிடக் கலைகள்
வானவியல் கலைகள்
அன்றே நம்மவர்
ஆய்ந்து  சொன்ன
அணுவைப்  பிளந்திடும்
அறிவியல்  படைப்புகள் .

அறிவில்  வேர்பிடித்து
அறிவியியலில் உயர்ந்த
தமிழரின்
சித்த மருத்துவம் ஆக
ஆய கலைகள்
அறுபத்து  நான்கும்
விண்ணை முட்ட
உயர்ந்து  நின்றவை .

நிலைத்தது நின்ற 
நீரியல்  மேலாண்மை
கனவாய் மாறிய
வேளாண் கலைகள்

சிந்து வெளியில்
சிறந்  தோங்கிய
வாழ்வியல்  முறைகள் .

எண்ணற்ற  கலைகள்
முடமாகிப்  போனது
இதனல்  தமிழர்
வாழ்வும்விடை தெரியமால்
போனது .

திக்கு  தெரியாகாட்டில்
வழிதேடிப் பயணிக்கிறான் .
கண்களைக்  கட்டிக்
காட்டில் பயணிக்கிறான்
விட்டில் பூச்சியாய்
வீழ்ந்து  மடிகிறான் .

நம் கலைகளை
வளர்க்க நாமும்
உயர்வோம்  நாடும்
உயரும் .
நம்கலைகளை  வளர்த்து
விண்ணை முட்டி
உயர்ந்து  நிற்ப்போம் .