இராஜஇராஜேஸ்வரி அவர்கள் வழங்கிய விருது

இராஜஇராஜேஸ்வரி  அவர்கள்  வழங்கிய  விருது

Thursday, 25 April 2013

பொறுப்புடன் வாழ்தலும் தான் .

உள்ளமும் உடலமும் 
உயிர்ப்போடு  இருக்கிறதென்றால் 
சூடுபற்றி  உடல் 
இருத்தல்  தேவை.

கண்ணில் கண்டவை 
எல்லாமே ...
உண்மையன்று 
மெல்ல மெல்ல ...
உள்  புகுந்து 
உண்மையரிதல் 
உயர்ந்த  பண்பு.

கண்ணே...
மணியே ...
கற்கண்டே  என்பதன்று 
வாழ்வு .

ஏற்றத்திலும்  இறக்கம் 
காணுகையிலும் 
குத்திக் கட்டாமல் 
கூடி 
வாழ்தல்தான் 
இனிமையன  வாழ்வின் 
தொடக்கமன்றோ .

அறியாமையில் 
உழலும்  மாக்கள் 
கூட்டம்  சிந்திக்க 
வைப்பதுதான் 
சீரிய சிந்தனையாளர்களின் 
உண்மையன வேலை .

உயிர்ப்போடு இருத்தல் 
தன்னலத்தோடு 
இருத்தலுமன்று 
பொது நலந்தாங்கி 
பொறுப்புடன் 
வாழ்தலும்  தான் .

 


Saturday, 6 April 2013

என் பாதைக்கு பரிதியாகி வா.

உன்னுடனான
வொவ்வொரு நொடியும்
மறக்க இயலாதவைகள் .
உன் பேச்சுகள்
வொவ்வொன்றும்
மறுதலிக்க இயலாதவைகள்.
நீ காட்டும்பாதைகள்
பழுதற்றவைகள்.

நீ செய்யும்  செய்கைகள்
எல்லாமே ...
மகிழத்தக்கவை.

நீ பொழியும்
அன்பு மாசற்றவை .


நீகாட்டும்
கருணை  கணக்கற்றவை .

காலம் காட்டிய
குன்றிலிட்ட
குலவிளக்கே ...


என்  பாதைக்கு
பரிதியாகி  வா.

என்றும் தமிழன்புடன் ....
மாலதி .