இராஜஇராஜேஸ்வரி அவர்கள் வழங்கிய விருது

இராஜஇராஜேஸ்வரி  அவர்கள்  வழங்கிய  விருது

Monday, 27 May 2013

அன்பு  உறவுகளே ,

பணிவான  வணக்கம்  நீங்கள்  என்மேல் கொண்டுள்ள அளவற்ற  மதிப்பிற்கு  தலை வணங்குகிறேன் . இருப்பினும் இன்றைய என்னுடைய தனிப்பட்ட சூழல் . உளநிலை  எல்லாமே எனக்கு எதிராக செயல் படுகிறது .

        ஒரு  தனிமனித சூழலில்  காதலின் பங்களிப்பு என்ன என்ன... பாதிப்பை  உண்டாக்குகிறது  பிரிவு எப்படிபட்டது  அது என்ன உள வாற்றளைதரும்
  என்ன பாதிப்பை  உண்டாக்கும் என்பது பற்றியும்  எனது முன்கதையும்  முடிவான கதையும்  வரும்.....  இதில்  நான் எவரைப் பற்றியும் புண் படும் படி கூறப் போவதில்லை .எனது எல்லா இடுகைகளும்  இந்த சமூகத்திற்காய்  அர்ப்பணிக்கப் பட்டவைகளாகும் . அதே அடிப்படையிலேயே  எனது  பதிவுகள் தொடரும் .....அது எப்போது  அதுதான் புரியவில்லை  ஆனாலும் உங்களை வாசித்துக்  கொண்டே  இருப்பேன் .....

பணிவான வணக்கங்களுடன்
மாலதி. 

Wednesday, 22 May 2013

விடைபெறுகிறேன் .....

இனி  வருவேனா  இல்லை வரமாட்டேனா    ஒன்றும்  புரியவில்லை
விடைபெறுகிறேன் . நன்றி  வணக்கம் .....

                உண்மையுள்ள  மாலதி

Saturday, 18 May 2013

பிழை.... செய்தேன்

 நீ  ஒரு கோணத்தில்
சிந்தித்து பேசினாய் .

நான் ஒரு கோணத்தில் புரிந்து
கொண்டேன் .
 உன்கோனத்தை
எனக்கு புரிய வைக்கவில்லை.

எல்லாமே  புரிதல் இன்மையால்
வந்த பிழை .

உன்கோணம் உனக்கு சரியென
தோன்றும் .

புரியாமையால்
எனக்கு தவறென படும் .

இதுதான் நமக்குள் காட்சி
பிழையாகிப் போனது .

சரித்திரத்திக்கும்
தரித்திரத்திற்கும்
வேறுபாடு?

பிழை செய்தேன்
மன்னித்துவிடு

சராசரியாக
இருந்தேன்
மாறுபட்டவன்
மாறுபட்டு சிந்தித்தேன்
செய்தமை தவறென
உணர்ந்தேன்
மனித்துவிடு ...