எனது அரக்கு
மாளிகைகள்
எரிக்கப் பட்ட பின்னரும்....
நான் கற்ப்பூரங்களை
தோடிக்கொண்டு இருக்கிறேன்
விளக்கேற்றிக் கொள்ள அல்ல
வீடுகட்டிக் கொள்ள .தேவையாக இருக்கிறது
எல்லாக் கதவுகளும் அடைக்கப் பட்ட பின்னரும் நான் எனக்கான பாதையை
தெரிவு செய்து விட்டேன் எதையும் ஏற்றுப் பழகுவது .... இந்த உலகில் எது
நிரந்தரம் எது தற்காலிகம் ?
எல்லாமே பிழைபட கற்றுக் கொண்டால் பாதைகள் கடினமாகத்
தோன்றும் மிகச் சரியானதை புரிந்து கொள்ளாவிட்டாலும் பாதைகள் கடினாமாகும்
. இந்த கடிதம் வரையும் எல்லா நொடிகளும் நான் மிகவும் தெளிகவகவே
இருக்கிறேன் .
ஒரு இனிய வாழ்க்கை முறை எப்படி இருக்கவேண்டும் என பல
ஆண்டுகளாக செதுக்கிச் செதுக்கிச் செய்து வைத்து இருந்தேன் அந்த இனிய
வாழ்வு கிடைத்து விட்டதாய் . உள்ளூர அகமகிழ்ந்தேன் எல்லாமே கனவுபோல
நடந்தேறிவிட்டது . எது நடக்கக் கூடாதோ அது நடந்தேறி விட்டது
சராசரிபோல பிரிவின் துயரில் மூழ்கிக் கிடந்தேன் .
நமக்கான கற்ப்பிதங்கள் நம்மைப் போலவே முரண்பட்டே
கிடக்கிறது . மூளியாக.... வாழ்க்கையும் புரிதல்களும் நான் சொல்லுவதே சரி
நீ எண்ணுவதே மிகவும் சரி என்பது எல்லாமே இங்கு பிழையானவைகள் இங்கு
எல்லோரும் எல்லாவற்றையும் கற்றுக் கொண்டு வருவதில்லை கற்றுக்
கொடுப்பதும் இல்லை .
உனதான தொடர்புகள்
எல்லாதிசைகளிலும்
அடைத்து மூடப் பட்டன
ஆனாலும் .....
என் நம்பிக்கை
துளிர்விடும் என்ற
ஆசையில் .... வாழுகிறேன் .
காதலாம் காதல் எல்லாமே இனக் கவர்ச்சி ... தேவைகள்
தீர்ந்து போனால் ஆசைகள் அருகிப் போகும் என வரட்டுத் தத்துவ வாதிகள்
கூறலாம் . கூர்மழுங்கிய வார்த்தைகளினால் .அனால் எனக்கான வாழ்க்கைப்
பாதை எனதான திட்டமிடலுன் உன்னதமான நம்பிக்கையுடன் வடிவமைக்கப்
பட்டவைகள் .
நிகழ்காலம் தான் உண்மை கடந்த காலமும் எதிர்கலாமும் நமது
கட்டுப் பாட்டில் இல்லை எனலாம் நிகழ்காலம் நமதானால் எல்லாக்
காலங்களும் நமக்கானதே .
ஏமார்ந்தோம் ....
ஏமாற்றப் பட்டோம் ...
என் நம்பிக்கைகள் வெட்டிச்
சாய்க்கப் பட்டுவிட்டன
துன்பக் கடலில்
துடிக்கிறேன் ... என்பதெல்லாம் முட்டாள் தனம் நிறைந்த சொல் விளையாட்டுக்கள்.
நாம் நாமாக இருக்கும் போது நாம் என்றுமே அழத் தேவையில்லை .
இப்போது என்னதேவை ...
என்ன இருக்கிறது ...
எப்படி பயன்படுத்தி
மகிழ்வடையப் போகிறாய்.
என்பதே எனது புதிய கற்ப்பிதம் ஆயிரம் ஆண்டுகள் கற்றுக் கொள்ளாதது
ஒரு நொடியில் கற்றுக் கொண்டு விடலாம் . கற்றுக் கொள்ளவிட்டால் இங்கு
கற்றுக் கொடுக்க வேண்டியதும் பெரியதேவையாக இருக்கிறது அனால் முறையாக
கற்றுக் கொடுக்கத்தான் . இங்கு ஆளில்லையோ என எண்ணத் தோன்றுகிறது .
ஒரு சிறிய பிழை நேர்ந்து விட்டால் அதை எவ்வளவு அழகாக
திருத்திக் கொள்ள வேண்டும் .ஒற்றை வார்த்தை பிழை செய்துவிட்டேன்
திருத்திக் கொள்ளுகிறேன் மீண்டும் பிழை நேராது இது எவ்வளவு மனிதனை மா
மனிதனாக மாற்றும் உயரிய வார்த்தை இந்த வார்த்தையை நாம் கையாளாத போது
காயங்கள் பெரிதாகும் என்ன செய்யப் போகிறோம்.?
கற்றுக் கொடுப்பவர்மேல் நம்பிக்கை இழந்து போனால்
கற்றுக் கொள்ள தேவையிருக்காது சற்று கீழிறங்கி நான் இதை செய்து
இருக்கவேண்டும் இதை செய்து விட்டேன் பிழை என்னுடையதுதான்
பொறுத்தருளுங்கள் இந்த வார்த்தைகளை நான் பயன் படுத்தவே இல்லை . பயன்
படுத்தி இருந்தால் நான் மா மனிதனாக உயர்ந்து இருப்பேன்
வாழ்க்கை சட்டையல்ல மாற்றிக் கொள்ளுவதற்கு
காலங்கடந்து நிற்க வேண்டியது பொறுமையுடன் காத்திருக்க வேண்டியதும்
பொறுமையாக நடக்க வேண்டியது இங்கு தேவையாக இருக்கிறது நான் அதையும்
சொல்லவில்லை . செய்து காட்டவும் இல்லை .
பிழை முதலில் என்னில் இருந்தே தொடங்குகிறது
இல்லையேல் இங்கு தவறு நேர்ந்து இருக்காது .பிழை செய்துவிட்டேன்
பொறுத்துக்கொள் என வேண்டிய பிறகும் மன்னிக்கவில்லை என்றால் ...
தெரிந்தே வேண்டுமென்றே தவறு செய்யவில்லை எதோ ஒருவிதமான பிழையான
புரிதல் இந்த்த சமூகம் கொடுத்த அறிவின் மிச்ச சொச்சம் என்னை பாதித்துத்
தொலைத்து விட்டது . என்னுடைய இப்போதைய நிலையை எண்ணிப் பார்த்து
இருக்கலாம் இதை அழகா கட்டிக் கட்டி இருக்கலாம் எனக்கு கற்றுக் கொடுகாதது
....
துக்கமும் சினமும் ...
கண்ணீரும் கையாலதத்தனமும் ...
ஒன்றுதான் .
விபத்து நேர்ந்து போனது
சாலையை அடைத்துக் கொண்டு
இருந்தால் எப்படி ?
அழுகையை விட்டெரிந்து
புதிய வழித்தடத்தை
செப்பனிடு ...
செப்பனிட்டு இருக்க வேண்டும் என்னுடைய அவசர புத்தி எல்லாவற்றையும் பாழ்படுத்தி அல்லவே செய்துவிட்டது .
நீ இல்லாத எனதான வாழ்க்கை சுவைக்காது நீ இல்லாத என் வானம் உதிக்காது நீ காட்டாத திசை எனக்கு புரியாது ...
எல்லாமுமாக இருந்த நீ இன்று என்னுடன் இல்லையென்றால் இந்த உடல்
உண்ணவும் உறங்கவும் மறந்துபோகிறது . மனிதம் மரித்துப் போக துடிக்கிறது.
உன்னுடலை கரைத்துக் கொண்டு என்னலனைத் தாங்கிநின்றாய்.
உரிமையானவ... உன்முகம் காட்டு ... போலித்தனமில்லா உனதன்பை இந்த பரவெளியில் வேறெங்கு தேடட்டும் .
காதலுக்கும் இல்லறத்திற்கும் இடைவெளி நீண்டதாய் உணரவில்லை நீ காட்டும்
பரிவும் பாசமும் முற்றிலும் மாறுபட்டவை இதில் காமமும் காதலும்
உன்னதமாக உயர்ந்து நிக்கிறது .
இந்த சமூகம் பற்றிய புரிதல் மாறுபட்டது ஆனால் நீ என்றும்
மாறாத அன்பை கொட்டிக் காட்டுகிறாய் . அந்த பிரதி பலனற்ற பாச வலையை ...
நேசித்துக் கொண்டிருக்க விரும்புகிறேன் .
என்றும் அன்புடன்மாலதி