இராஜஇராஜேஸ்வரி அவர்கள் வழங்கிய விருது

இராஜஇராஜேஸ்வரி  அவர்கள்  வழங்கிய  விருது

Monday 17 August 2015

டாஸ்மாக் இனிஎன்ன செய்வது



      இதைப் பற்றி தமது அறிவு எல்லைக்கு எட்டியவரை அவரவர்களின் தரத்திற்கு ஏற்றவாறு ஊளையிடுகிறார்கள். பாவம்  என எண்ணத்தோன்றுகிறது இப்படி எல்லாம் பேசி வயிறு வளர்க்க வேண்டி இருக்கிறதே என எண்ணி வேதனைப் படவேண்டி இருக்கிறது.  .சாராயக் கடையை படிப்படியாகவோ  அல்லது  கால்படி கால்படியகவோ அல்லது லிட்டர் லிட்டரகவோ முழுமையாக மூட இயலுமா?அல்லது மூட முடியுமா?

     அறிவை சற்று தீட்ட முயற்சி செய்வோம் குடிவொறிக்கு 45 ஆண்டுகளாக நாம் பழகி விட்டோம் இவர்களில் பாலர் குடிக்காமல் உயிர் வாழ இயலாது என்ற நிலையில் உள்ளார்கள் இவர்களை என்ன செய்யப் போகிறோம்? சிலர் குடிக்கவில்லை என்றால் கை நடுக்கம் முதல் பலவேறு உளவியல் சிக்கலில் சிக்கித்தவைக்கின்றனர்  இவர்களை என்ன செய்ய இயலும்?இந்த பிழைப்பை நம்பி பல குடும்பங்ககள்  வாழ்கின்றனர் இவர்களுக்கு என்ன மாற்றுத் திட்டம்? குடியை தொடவும் முடியாமல் விடவும் முடியாமல் சிக்கித்தவிக்கின்ற சுய நினைவு இல்லாமல் கிடக்கிறவர்களை என்ன செய்யப் போகிறோம்?

    இது மட்டுமா? உடனே சாராயக் கடையை மூடினால் அடுத்த நிமிடமே ஊருக்கு ஊர் சாராயம் காய்ச்சத் தொடங்கி விடுவார்கள்  விரைவாக ஈடு கட்ட இயலாமல் போகும் நிலையில் கள்ளச் சாராயம் விசச் சாராயமாக மற்றம் பெரும் காரணம் விரைவு கருதி எதை வேண்டுமானாலும் போட்டு தயாரிக்கும் போது விசமாக மாறும்  நிச்சயமாக கள்ளச் சாராய சாவுகள்  நிகழும்  இதற்க்கு யார் பொறுப்பு ஏற்ப்பது? ஆள்வோர் முதல் காவல்துறையினர் முடிய பலரின் தலை உருளும்  சாராயகடையை மூடு என்பவர்கள் அப்போதும் கூச்சலிட்டுக் கொண்டே இருப்பார்கள்  மக்களோ அறியாமையில் உழல்வார்கள். என்ன செய்யப் போகிறோம்?

      மக்கள் மீது உண்மையான அரசியல் கட்சி என்றால் மக்களை சந்தித்து குடி வெறிக்கு...  குடிக்கு அடிமையாகிப் போனவர்களை ... இளைய தலைமுறையினரிடம்  சென்று அவர்களை ஆற்றுப்  படுத்த (வழிநடத்த ) வேண்டும்  குடியால் வரும் உடலியல் உளவியல் சிக்கல்களை பட்டியலிட்டு அவர்களை வழிநடத்த வேண்டும். குடியினால் வரும் கேட்டை அறிவு அடிப்படையில் விளக்கினால் அடுத்தகட்ட தலைமுறை  குடியை வெறுக்க வைக்க இயலும்  இதைத்தான் முதலில் செய்யவேண்டும் . இதை விடுத்து எதைச் செய்தாலும் அது சாராயத்தை  வைத்து நடத்தும் மட்டரகமான அரசியல் பிழைப்புவாதமே  என்ன செய்யப் போகிறோம்?

Monday 3 August 2015

இன்றைய தேவை போராட்டம் அல்ல மனமாற்றமே !

                       

     சில நாள்களாக மதுஒழிப்பு போராட்டம் என்ற பெயரில் வன்முறையை கட்டவிழ்த்து விட்டு இருக்கிறார்கள்  இது 2016 தேர்தலுக்கு முன்பான நாடகத்தின் ஒரு முன்னோட்டம்  எனலாம் இவர்கள் உண்மையில்  அறிவு என்ற ஆயுதத்தை பயன் படுத்த வில்லையோ என சிரிக்கத்தோன்றுகிறது .
நாற்றம் வீசும் அரசியல் தன்னலம் என்றால் இதில் ஒன்றும் புதுமையோ ... ஒன்றும் இருக்கப் போவதில்லை.

     ஆளும் தலைமையை வீழ்த்தும் வியூகம் என்றாலும் இது வேடிக்கையே
ஏனெனில் இதே வியூகத்தை ஆளும் தரப்பு கையில் எடுத்துக் கொள்வதாக வைத்துக் கொள்வோம் எதிர் தரப்பின் நீலிக் கண்ணீர் கடலில் கரைத்த பெருங்காயம் ஆகிவிடும் அதாவது சாராயக்  கடையை மீண்டும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மூடுவோம் என்ற ஒற்றை வார்த்தையை வ்ளியிட்டல் எல்லாமே தவிடு பொடி  ஆகிவிடும்.இதனால்  நாட்டுக்கோ மக்களுக்கோ எதாவது பயன் உண்டா என்றால் இல்லை என பால் குடிக்கும் பப்பகூட சொல்லிவிடும் .

          உண்மையில் என்ன செய்யவேண்டும் மக்களிடம் செல்லவேண்டும் மதுவின் தீமை களையும்  அதன் கொடுமைகளையும் மக்களிடம் அறிவு பூர்வமாக  எடுத்துச் சொல்லவேண்டும்  இப்படி கொஞ்சம் கொஞ்சமாக மக்களின்  அதாவது குடிக்கு அடிமையாகிப் போனவர்களிடம் குடியின் தீமைகளை சொல்லாதவரை கடையை மூடுவதலோ அல்லது அடித்து நொறுக்கி  வன்முறையைத் தூண்டுவதலோ எந்த மாற்றமும் வரப்போவதில்லை . குடிக்கு அடிமையாகிப் போன ஒருவரால் உடனே அந்த பழக்கத்தில் இருந்து விடுபட  இயலாது குடிக்கு பழகிய ஒருவர் திடிரென குடியை விட்டுவிடவும் கூடாது இதானால் பல விரும்பத் தகாத விளைவுகளை குடிவெறியர் களுக்கு உண்டாகும் என்பது மருத்துவ அறிவு கொஞ்சமேனும் உள்ளவர்களுக்கு தெரியும் .

     அப்படியானால் குடியை ஆதரிக் கின்றீர்களா எனவினவக்   கூடும் நமது நோக்கம்  குடியை ஆதரிப்பது அல்ல மாறாக கடுமையாக எதிர்ப்பது எனவே உண்மையான மக்கள் பற்றாளர்கள் என்றால் மக்களிடம் செல்லுங்கள் அல்லது இந்த வன்முறை நாடகத்தை நிறுத்துங்கள் என்பதுதான் நமது கொள்கை .


Monday 27 July 2015

மாசற்றவனே உன் மதிமுகம் காட்டு

மாசற்றவனே  உன் மதிமுகம் காட்டு
 
 காலம் செதுக்கிய 
புதுமை  நீ.

கண்போல ...
காப்பவன்  நீ .

 வறுமையிலும் 
அறம்பிழராதவன்  நீ.

அச்சத்தை 
உடைத்தெறிபவன்  நீ.

அடக்குமுறைகளை 
மிதிப்பவன்   நீ

ஆளப்பிறந்தவன் நீ.

அறிவை ஏற்ப்பவன்  நீ.

உழைப்பை 
போற்றுகிறவன் நீ .

மறத்தமிழன் நீ.

மாறக் கோட்பாடுகளை 
உடையவன்  நீ.  

மாசற்றவனே உன் 
மதிமுகம்  கட்டு

Tuesday 14 July 2015

தனிமனித வரலாறு ....

தனிமனித வரலாற்றில்
துரோகங்களைக்
கடந்தே ....
வெற்றி
படிநிலை வளர்ச்சி
அடைந்திருக்கிறது .

இங்கு ....
கொலைகளும் ...
வல்லுறவுகளும் ....
கொள்ளைகளும் ....
ஏமாற்றுதலும் ...
இன்னபிற
குமுகக்  கேடுகளும்
தேசிய  வீர விளையாட்டுகளாகவே ...
பாவிக்கப்  படுகிறது  .

அனால் ...
உண்மை ...
நேர்மை ...
நாட்டின் வளம்...
மொழி ...
பண்பாடு ...
 அடிதட்டுமக்களின்
வாழ்வாதாரம்
இவை எல்லாம்
தீவிரவியம் .
பேசக்கூடதவைகள் .
இவர்கள்
அருவருக்கத்
தக்கவர்கள் .

இப்படிப்
பட்டவர்களைக்
இந்தக் குமுகம்
கையாளும் விதமேதனி ...


பித்தானாக்கி
மலட்டை
மாலையிட வைப்பார்கள் .
கோள்மூட்டி ...
பொறுக்கித்  தனம்
புரிவோரிடம்
மண்டியிடச்  செய்வார்கள் .


பிசாசிடம்  வாழவிட்டு
வேடிக்கைப்  பார்ப்பார்கள் .

 நாசக்கரர்களே .
உங்களின் வாழ்வு
நிலைத்துவிடுமா  என்ன?





Sunday 5 July 2015

இனி நான் உங்களோடு .....


 நீண்ட நாட்களுக்குப்
 பின்னர் உங்களோடு
 காற்றில்  கைகுலுக்குகிறேன் ...

 காலம்  தந்த  சிறப்புப்
 பரிசு  2013 இன் பிற்ப்பகுதியில்
 நடந்தவை  எல்லாமே ...
 என்  நினைவுப்  பெட்டகத்தில்
 இருந்து  காணமல்  போய்விட்டது ....
  கூடா நட்பு  கேடாய்  முடியும்
 முடியும்  என்பார்கள் ....
 அப்படியே  ஆனது ...

 என்னுள் நடந்தவை
 என்னோடு போகட்டும் ...
 இனி  நான்  உங்களோடு
 வருகிறேன் .