இராஜஇராஜேஸ்வரி அவர்கள் வழங்கிய விருது

இராஜஇராஜேஸ்வரி  அவர்கள்  வழங்கிய  விருது

Saturday 27 August 2011

என்றும் ஆயத்தமாகவே காத்திருக்கிறேன் அன்பனே

உன் ...
வறுமைக்கான
காரணம்  நேர்மை
என்பதை  நானறிவேன்.

இருப்பினும்-உன்
வறுமையை  நான்
பழிக்கவில்லை.

நான்
சாடுவது இந்த
போலி  சமூகத்தைதான் .

ஓரிடத்தில்
செல்வம் குவிமையம்
கொண்டிருப்பதும்
மற்றோர்இடத்தில்   வறுமை
வேட்டையாடுவதும்
பிழையான சமூகத்தின்
எச்சங்கள் தானே?

காலங்கடந்து
நிற்கவேண்டிய மெய்ம்மங்கள்
நம்  பழமைவாய்ந்த
பண்பாட்டின் மீட்டுரு
வாக்கத்தேவை  ஒட்டியே
உனக்கான
போராட்டக்  கலங்கலாக
தொடர்கிறது.

வறுமை நம்
வாழ்க்கையில்
போராட்டமாக
இருக்காது -ஆனால்
போராட்டமே  வாழ்கையாக
மாறிவிடக்கூடாது  என்பதான
உன்  இலக்கை
தலைவணங்கி  ஏற்கிறேன்.

வீண் செலவிற்கும்
சிக்கனத்  திற்க்குமான
வேறுபாட்டை  நானறிவேன்.

சிக்கனம்  தேவையை
ஒட்டி நிறைவேற்றிகொள்ளுவது
வீண் செலவு
இதுதான்  தேவைஎன
அடம்பிடித்து அழிவது
நான் அங்கனமில்லை .

நோயின்றி  
வாழ்வதற்க்கான
உன்தேடலில்
கைகோர்க்க என்றும்
ஆயத்தமாகவே
காத்திருக்கிறேன்  அன்பனே .

ராஜீவ் கொலையாளிகளுக்கு செப்.9-ந் தேதி தூக்கு...
      சரியான விசாரணை இல்லை, இவர்களுக்கு நேரடி தொடர்பு இல்லை, இவர்களுக்கு இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று தெரியாது என முன்னாள் நீதிபதிகளே சொன்னது தமிழகத்தில் உள்ள ஊடகங்களுக்கு தெரியாதா?...இன்னும் எப்படி ராசிவ் "கொலையாளிகள்" என்று இவர்களால் விளிக்கமுடிகிறது.

      தமிழ் நிரபராதிகளுக்கு தூக்கு என்பது நீதிக்கு தூக்கு....
உணர்வுள்ள  தமிழர்களே சாந்தன் , முருகன் , பேரறிவாளன்  ஆகியோரின்  தூக்கு தண்டனையை  எதிர்போம் .


இந்திய  அரசே !
இந்தியாவில்  மரணதண்டனை சட்டத்தை  நீக்கம் செய்.
இப்போதுள்ள அனைத்து மரண தண்டனைகளையும் திரும்பப்பெறு.

தமிழக  முதல்வர் அவர்களே !
மூவரின் மரண தணடனையை  நீக்கம் செய்ய ஆளுநருக்கு  பைந்துரை செய்யுங்கள் .

தமிழகத்தில் மரண தண்டனை ஒழித்திட உடனே  சட்டம் இயற்றுங்கள்.


 





 

Saturday 20 August 2011

இது தான் மதங்களின் களின் இலட்சணமா? அரசுகளின் இலட்சணமா?

யாழில் சிங்களவன்
அறிவிக்கிறானாம்.

போரின் காரணமாக

வீடிழந்த  மக்கள்
தங்களின் காணிகளில்
புத்த விகாரமைக்க
இடமளித்தால்
ஆறு   இலட்சம்செலவில்
வீடு  கட்டித்தரப்படுமாம் .

இந்தியாவை  ஆள்வோரே

எங்களின்  கைகளைகொண்டே
எங்களின்  கண்களை  குத்துவதா ?
இதற்கா எங்களின்  வரிப்பணம் இரண்டாயிரம்  கோடி 
 


சண்டையில்

தமிழர்களிடமிருந்து
வலிந்து பெறப்பட்ட
இடங்களின் தமிழ
பண்பாட்டு அடியாளங்களை
அழித்து அதேவேகத்தில்
புத்தன் சிலைகள் நடப்படுகின்றனவாம் .

ஏ...
புத்தனே -நீ
கண்களை மூடிக்கொண்டே
கொடுமைகளுக்கு  கூர்தீட்டு கிறாயா?

யாழ் ...

கிளிநொச்சி ...
மாங்குளம்...
கனகராயன் குளம்
வவுனியா ...
எல்லா இடங்களிலும்
புத்தன் புன்னகைத்தபடியே
சிலைகளாய்  ஆக்கிரமிக்கிரானாம்

வீரம்
செறிந்த வன்னி நிலம் -இப்போது
பௌத்த  நிறமாக  மாறுகிறதாம்

.யாழ் பல்கலையும்

தொல்லியல் அமைச்சும்
கந்தரோடையில் ஆய்வு
நிகழ்த்துகிறதாம்
புத்தநடாக உலகிற்கு
அடையாளம்  காட்ட .

இலங்கையில் தமிழர்
நாடாண்டகல்வெட்டுகள்
காணக்கிடக்கிறதே
அதை எப்படி மறைப்பாய் ?

இராணுவப் பாதுகாப்பும்

அரச கட்டளையும்
புத்தனின் சிலைகளை
ஈழம் முழுமைக்கும்
கொண்டு சேர்க்கிறதாம் .

தமிழகத்து
ஆண்மக்களே
உங்களின் ஆண்குறியும்
அறுத்தெறிய படலாம்
ஈழத்தில் பிறக்கும் தமிழ் குழந்தைகள் போல .

கேரளா மூத்தூட் பைனான்சு

வந்து விட்டது  நம்  நிலம்
பறிபோகிறது உன் 
நாடிழக்கலாம்
வீரத்தை
இப்போதே காட்டு
தமிழ் ஈழத்திக்கு
தோள்கொடுக்க பழகு
சிங்களனுக்கு
எதிர்ப்பை காட்டு..
   சோனியாவின்
  மன்மோகன்
அரசுக்கும்  எதிர்ப்பைகாட்டு...

     உலகின் எல்லா மதங்களும் அமைதியையும்  அன்பையும்தான்   போதிப்பதாக கூறு கிறது  ஆனால் தன் கைகளில்  நச்சு  குண்டுகளை அல்லவாவைத்திருக்கிறது .

இஸ்லாம்  நபிகள்  நாயகம்
   கூடாரங்கள்  எப்போதும் தனித்தனியாக பிரிந்தே  இருக்கட்டும். ஆனால் எல்லோருடைய  இதயங்களும்  இணைந்தே  இருக்கட்டும். என்கிறார் .

கிருத்துவ மதமுதல்  பாடல்
      கடவுளுக்கு மகிமையும்  மண்ணில்  சமாதானமும்  மனிதர்கள் மேல்  பிரியமும்  உண்டாவதாக . என்கிறது .

புத்தமதத்தை  பற்றி   சொல்லவே வேண்டாம்.
       சண்டை இல்லாத   உலகத்தை படைக்க வேண்டும்  என்பதுதான்  அதன் முதன்மை குறிக்கோள்  ஆனால் பல இலட்சம்  தமிழர்கள்  படுகொலை புத்த மதத்தின் பேரால்  செய்யப்பட்டது .

இந்து மதம்

அதிகம்  பேச வேண்டாம்  அன்பே  சிவம்  என்கிறது

        இப்படி  உண்மைக்கு நேரான  கொள்கைகளை கொண்ட  இந்த மதங்கள் தான் கொலை கருவிகள் வழங்கியும்  பொருளுதவி  வழங்கியும்  பல்லாயிர தமிழ மக்களை  கொன்றது  இது தான்  மதங்களின்  களின் இலட்சணமா?    அரசுகளின் இலட்சணமா?


உலகின் எங்கோ
ஒரு மூலையில் நடக்கும்
அநியாயத்தைக் கண்டு
உங்கள் மனம் கொதித்தால்
நாம் இருவரும் தோழர்களே...... -சேகுவேரா


அண்ணா ஹசாரேவின் மக்கள்  அறமன்றம் (நீதி) அமைக்க  துணை நிற்ப்போம்   ( ஜன லோக்பால்)

நாகை மீனவர்கள்  தாக்க பட்டமைக்கும்  தொடர்ந்து  தமிழக மீனவர்கள்  தாக்கபடுவதர்க்கும் இந்திய அரசே ! தமிழக  மீனவர்களிடம்  மன்னிப்பு கேள் தமிழக  மீனவர்களுக்கு  சிங்களனுக்கு  கொடுத்ததைபோல   கருவி (ஆயுதம் )கொடு . 

Saturday 13 August 2011

நீ......... உளியாகும் போதெல்லாம் நான் சிலையாகிறேன் .

 நீ ...
தொட்டுக்காட்டும்
போதெல்லாம்
நான்  கற்றுக்கொள்ளுகிறேன் .


 நீ ..........
கற்றுக்கொடுக்கும்
 போதெல்லாம்
 நான்
செழுமையடைகிறேன் .

 நீ.........
வழிகாட்டும்
போதெல்லாம்
 நான்
தெளிவடைகிறேன் .

நீ.........
உளியாகும்
 போதெல்லாம்
 நான் சிலையாகிறேன் .

 நீ........
மௌனம் ஆகும்
 போதெல்லாம்
நான் தவமேற்கிறேன்.












Saturday 6 August 2011

இன்றைய உலகம்?

தேவைக்கும்
 இருப்பிற்குமான
இடைவெளி  நெடியது _இது
முதலாளித்துவ
சுரண்டல்  தத்துவத்தின்
தனிச்  சிறப்பு .

கொள்ளையும்
கொள்ளை இலாபமும்
அதன்நேரிய குறிக்கோள் .

ஏழ்மையிலும்
அறியாமையிலும் மக்களை
வைத்திருந்தால்தான்
கொள்ளை இலாபம்
அடிப்பவர்கள் கோலேச்சமுடியும்என்பது
அதன்கமுக்கமான  உண்மை .

ஆள்வோருக்கும்  ஆட்டிப்படைப்போருக்கும்
மறைமுக  பிணைப்பு
தொடர்ந்தே  இருக்கும்.

ஆளும் வகுப்பு
என்றும் கடவுள்களை
தோற்றுவித்துக்  கொண்டேஇருப்பார் _ அவர்கள்
கொள்ளையடித்துக்  கொண்டேஇருக்க.

புதியவடிவில் மூடத்தனங்கள்
காட்டுத்தீயாக  பரவும்.
பட்டுப்  பீதாம்பரங்களுடன்.

உண்மை
நூலாம் படையோடு
சுருண்டுவீழ்ந்து கிடக்கும்.

தலைவிதியை  எண்ணி
அறியாமை மக்கள்
கடவுள்களை நோக்கிப்
படைஎடுப்பர்கள் .தங்கள்
பாமரத்தனத்தை  அறியாமல்.

மக்களின்உழைப்புச்
சுரண்டலில்  தேர்ந்தவர்கள்
கோவில்களில்
தொன்னையில்  வைத்துச்
சோறு படைப்பர்.

கடவுளரைக்  காணுவதில்மட்டும்
பாமரர்கள்  ஒன்றுபடுவர்.
அப்போதும்  கொள்ளைக்காரர்களுக்கு
தனிவழி.

மனிதன்  கண்டெடுத்த
கண்டு பிடிப்புகளில்
கடவுள் கண்டுபிடிப்பே
உயர்ந்தது  _இது அறிவர் .

இதன் தாக்கத்தை
பாமரர்கள்  உணராதபடி
முட்டாள்(தொலைக்காட்சி )  பெட்டிகள்
முணகிக்கொண்டே  இருக்கும் .

இதனூடே ....
முதலாளித்துவம்
கொள்ளையடித்துக்  கொண்டே
கோலேய்ச்சும் மாற்றம்
வந்துவிடாதபடி .

ஏதிலிகள்  வயிற்றுப்
பட்டினியுடன் தலைவிதியை
நொந்து  கொண்டே
போராடுவார்கள்  வயிற்றுப்பசியுடன்.

மாற்றம்  வேண்டிய
அறிவர்கள்  பாமரனின்
கண்களில் பித்தர்களாக (பிழைக்கத்  தெரியாதவர்களாக )
தோற்றமளிப்பார்கள்
தீவிரவாதிகள்  என்ற  பட்டந்தாங்கி.

ஒரு
கூட்டம்  திரைப்பட
புல்தடுக்கிப்  பயில்வான்களுக்கு
வெண் சாமரம்வீசிக்கொண்டிருக்கும்
அவனின் எச்சில்களையும்
கழிவுகளையும்  நக்கிக்கொண்டே.



உன்களின் கண்டன கனிகளை  எதிர் நோக்கி

                              மாறாத தமிழன்புடன்
                                        மாலதி .

 .