இராஜஇராஜேஸ்வரி அவர்கள் வழங்கிய விருது

இராஜஇராஜேஸ்வரி  அவர்கள்  வழங்கிய  விருது

Tuesday 31 May 2011

மாலையுடன் வா



உனக்கான
வருகைக்காக ...
காத்துக்கிடக்கிறது
உள்ளம்.

என்ன சொல்லி ...
அழைப்பது ?
புரியவில்லை.

நாளும் நாளும்...
ஒரு யுகமாய்
கழிகிறது.

நாம் ...
பதின் (teen age )பருவத்தை
கடந்துவிட்டோம்.

காலங்களும்
நமக்காக துணைநிற்கிறது.

நமக்கேற்ற
வருவாய் முறைப்படி
ஈடடுகிறாய்.

என் கடந்த ...
காலத்திலும்
நிகழ் காலத்திலும்
என் இதய வாசலை கூட
எவனும்  தொட்டதில்லை .

இனியும் தொடப்போவதில்லை.

நம் இரண்டு
பக்கங்களையும்
அறிந்து கொண்டோம்..

விட்டுகொடுத்து
வாழ தீர்மானித்துவிட்டோம் .

இனியும்
ஏன்தயக்கம் ?

என்னவனே
மாலையுடன்வா .

Wednesday 25 May 2011

வாழ்க்கை வாழ்வதற்க்கே.



நமக்கான
வாழ்க்கையை

சிறுக சிறுக
செதுக்கி வைத்திருக்கிறேன் .

களிமண்
பொம்மையல்ல
மனிதம்.

கூடலும்
ஊடலும் தான்
வாழ்க்கை .

எளிமையும்
உள தூய்மையும்
நம்வாழ்க்கைக்கொள்கை .

இப்பிறப்பில்
இன்னொருவளை
என்சிந்தையிலும்
தொடேன் என
கதையில் வந்தததை
மேற்கோள்காட்டி
சொன்னாய் .

அந்த
ஒற்றை வர்த்தைக்குதான்
என்னை உன்னிடம்
முழுமையாக
ஒப்படைக்க
தூண்டியது..

தவறு செய்ய ...
வாய்ப்பு  இருந்தும்
தொடமறுத்தவன் -நீ
அப்போது உன்
ஆண்மையையும்
உணர்த்தினாய்
உன் நேர்மையையும்
காட்டினாய்.

மன்னவனே
மணவிழாவிற்கு
பிறகுதான்
எல்லாமே....
என்றாய்

எத்தனை
துணிவு ...
எத்தனை தெளிவு


Tuesday 17 May 2011

முன் அனுபவம் ?


 
சுய சிந்தனை
கொண்டவன்
அடிமை சேவகம்
செய்ய வரும்பவில்லை .
 
உண்மைக்கு
இங்கு  எவனும்
வேலை கொடுக்கவில்லை .
 
நான் ஏகல்வயனாக (ஏகலைவன் )
கற்று
தேர்ந்து
நிற்கும் முன்
பரமபத பாம்பாய்
தோல்விகள் .
 
பிழையானத்தை
செய்யவும்
திணிக்கவும்
தொடரவும் இல்லை .
 
காட்டாற்று 
வெள்ளத்தில்
கடலலையில் 
முகிழ்த்தாலும்
கேட்டு அல்ல
வேண்டுமா ?
உதவி என்றே
நீட்டுகிறேன் கையை .
 
நான் ஏன்
அழவேண்டும் ?
என் உழைப்பை
உள்வாங்காத
போலி உலகம்
தானே அழவேண்டும்?
 
திருமண வட்டத்திலும்
உள்நுழைய
விரும்பவில்லை .
 
எதிலும் முன்
அனுபவம் இல்லாத
நான்
என் திருமணத்திலும்
முன் அனுபவத்தை
கேட்டுத்  தொலைத்தல்
நான் என்ன செய்வேன் ?.

நான் மதிக்கும் ஒருவரின்  நாட்குறிப்பில்  இருந்து அவருக்கே  தெரியாமல் அடுத்த கவிதை இது  அவரின்  மனம்  எவ்வளவு சங்கட பட்டு யுக்கும் இந்த உலகத்தின் மீது  எவ்வளவு வெறுப்பு உண்மையானவர்கள் இந்த மக்கள் புரிந்து கொள்வதில்லையோ ?

Tuesday 10 May 2011

எச்சில் காயும் முன் ...



தேர்வு  செய்யுமுன் ...
ஓராயிரம்  முறை சிந்திப்பேன்.

தேர்ந்தபின்
என்தலை  சாய்ந்தாலும் ...
கைவிடேன் .

காதலன்
ஆடையல்ல.
அது உயிர் .

மரித்துபோன
சடலத்தை
மனிதனால்
சல்லாபிக்க
படுவதில்லை ...

இந்த
உலகின்  ...
ஆதரவிற்கு முன்
என்னை பெற்றவர்களின்
ஆதரவை பெறவிழைகிறேன்.

முத்தத்தின்  எச்சில்
காயுமுன் ...
காதலனை மாற்றும்
பண்பாட்டில்  வளரவில்லை .

எவரையும்
புண்படுத்துவதற்காக
அல்ல ...
பண்படுத்துவதற்காக.

Tuesday 3 May 2011

இரண்டும் ஒன்றுதான் . .

இரண்டும்  ஒன்றுதான் . .

உன் கட்டளைப்படியே
தொடர்பு எல்லைக்கு
வெளியில் உள்ளதாக
வார்த்தை பிறழாமல்       
சொல்லுகிறது
உன் கைப்பேசி .

பிரிவின்
கொடுமையும்
வேதனையும் ...
உணராதவன்  நீ...

மரணத்தைவிட
கொடியது
பிரிவு .

மறந்துவிடு ...
என்கிறாயா?
மரித்துவிடு
என்கிறாயா?
உன்விசயத்தில்
இரண்டும்  ஒன்றுதான் . .