இராஜஇராஜேஸ்வரி அவர்கள் வழங்கிய விருது

இராஜஇராஜேஸ்வரி  அவர்கள்  வழங்கிய  விருது

Monday 17 August 2015

டாஸ்மாக் இனிஎன்ன செய்வது



      இதைப் பற்றி தமது அறிவு எல்லைக்கு எட்டியவரை அவரவர்களின் தரத்திற்கு ஏற்றவாறு ஊளையிடுகிறார்கள். பாவம்  என எண்ணத்தோன்றுகிறது இப்படி எல்லாம் பேசி வயிறு வளர்க்க வேண்டி இருக்கிறதே என எண்ணி வேதனைப் படவேண்டி இருக்கிறது.  .சாராயக் கடையை படிப்படியாகவோ  அல்லது  கால்படி கால்படியகவோ அல்லது லிட்டர் லிட்டரகவோ முழுமையாக மூட இயலுமா?அல்லது மூட முடியுமா?

     அறிவை சற்று தீட்ட முயற்சி செய்வோம் குடிவொறிக்கு 45 ஆண்டுகளாக நாம் பழகி விட்டோம் இவர்களில் பாலர் குடிக்காமல் உயிர் வாழ இயலாது என்ற நிலையில் உள்ளார்கள் இவர்களை என்ன செய்யப் போகிறோம்? சிலர் குடிக்கவில்லை என்றால் கை நடுக்கம் முதல் பலவேறு உளவியல் சிக்கலில் சிக்கித்தவைக்கின்றனர்  இவர்களை என்ன செய்ய இயலும்?இந்த பிழைப்பை நம்பி பல குடும்பங்ககள்  வாழ்கின்றனர் இவர்களுக்கு என்ன மாற்றுத் திட்டம்? குடியை தொடவும் முடியாமல் விடவும் முடியாமல் சிக்கித்தவிக்கின்ற சுய நினைவு இல்லாமல் கிடக்கிறவர்களை என்ன செய்யப் போகிறோம்?

    இது மட்டுமா? உடனே சாராயக் கடையை மூடினால் அடுத்த நிமிடமே ஊருக்கு ஊர் சாராயம் காய்ச்சத் தொடங்கி விடுவார்கள்  விரைவாக ஈடு கட்ட இயலாமல் போகும் நிலையில் கள்ளச் சாராயம் விசச் சாராயமாக மற்றம் பெரும் காரணம் விரைவு கருதி எதை வேண்டுமானாலும் போட்டு தயாரிக்கும் போது விசமாக மாறும்  நிச்சயமாக கள்ளச் சாராய சாவுகள்  நிகழும்  இதற்க்கு யார் பொறுப்பு ஏற்ப்பது? ஆள்வோர் முதல் காவல்துறையினர் முடிய பலரின் தலை உருளும்  சாராயகடையை மூடு என்பவர்கள் அப்போதும் கூச்சலிட்டுக் கொண்டே இருப்பார்கள்  மக்களோ அறியாமையில் உழல்வார்கள். என்ன செய்யப் போகிறோம்?

      மக்கள் மீது உண்மையான அரசியல் கட்சி என்றால் மக்களை சந்தித்து குடி வெறிக்கு...  குடிக்கு அடிமையாகிப் போனவர்களை ... இளைய தலைமுறையினரிடம்  சென்று அவர்களை ஆற்றுப்  படுத்த (வழிநடத்த ) வேண்டும்  குடியால் வரும் உடலியல் உளவியல் சிக்கல்களை பட்டியலிட்டு அவர்களை வழிநடத்த வேண்டும். குடியினால் வரும் கேட்டை அறிவு அடிப்படையில் விளக்கினால் அடுத்தகட்ட தலைமுறை  குடியை வெறுக்க வைக்க இயலும்  இதைத்தான் முதலில் செய்யவேண்டும் . இதை விடுத்து எதைச் செய்தாலும் அது சாராயத்தை  வைத்து நடத்தும் மட்டரகமான அரசியல் பிழைப்புவாதமே  என்ன செய்யப் போகிறோம்?

Monday 3 August 2015

இன்றைய தேவை போராட்டம் அல்ல மனமாற்றமே !

                       

     சில நாள்களாக மதுஒழிப்பு போராட்டம் என்ற பெயரில் வன்முறையை கட்டவிழ்த்து விட்டு இருக்கிறார்கள்  இது 2016 தேர்தலுக்கு முன்பான நாடகத்தின் ஒரு முன்னோட்டம்  எனலாம் இவர்கள் உண்மையில்  அறிவு என்ற ஆயுதத்தை பயன் படுத்த வில்லையோ என சிரிக்கத்தோன்றுகிறது .
நாற்றம் வீசும் அரசியல் தன்னலம் என்றால் இதில் ஒன்றும் புதுமையோ ... ஒன்றும் இருக்கப் போவதில்லை.

     ஆளும் தலைமையை வீழ்த்தும் வியூகம் என்றாலும் இது வேடிக்கையே
ஏனெனில் இதே வியூகத்தை ஆளும் தரப்பு கையில் எடுத்துக் கொள்வதாக வைத்துக் கொள்வோம் எதிர் தரப்பின் நீலிக் கண்ணீர் கடலில் கரைத்த பெருங்காயம் ஆகிவிடும் அதாவது சாராயக்  கடையை மீண்டும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மூடுவோம் என்ற ஒற்றை வார்த்தையை வ்ளியிட்டல் எல்லாமே தவிடு பொடி  ஆகிவிடும்.இதனால்  நாட்டுக்கோ மக்களுக்கோ எதாவது பயன் உண்டா என்றால் இல்லை என பால் குடிக்கும் பப்பகூட சொல்லிவிடும் .

          உண்மையில் என்ன செய்யவேண்டும் மக்களிடம் செல்லவேண்டும் மதுவின் தீமை களையும்  அதன் கொடுமைகளையும் மக்களிடம் அறிவு பூர்வமாக  எடுத்துச் சொல்லவேண்டும்  இப்படி கொஞ்சம் கொஞ்சமாக மக்களின்  அதாவது குடிக்கு அடிமையாகிப் போனவர்களிடம் குடியின் தீமைகளை சொல்லாதவரை கடையை மூடுவதலோ அல்லது அடித்து நொறுக்கி  வன்முறையைத் தூண்டுவதலோ எந்த மாற்றமும் வரப்போவதில்லை . குடிக்கு அடிமையாகிப் போன ஒருவரால் உடனே அந்த பழக்கத்தில் இருந்து விடுபட  இயலாது குடிக்கு பழகிய ஒருவர் திடிரென குடியை விட்டுவிடவும் கூடாது இதானால் பல விரும்பத் தகாத விளைவுகளை குடிவெறியர் களுக்கு உண்டாகும் என்பது மருத்துவ அறிவு கொஞ்சமேனும் உள்ளவர்களுக்கு தெரியும் .

     அப்படியானால் குடியை ஆதரிக் கின்றீர்களா எனவினவக்   கூடும் நமது நோக்கம்  குடியை ஆதரிப்பது அல்ல மாறாக கடுமையாக எதிர்ப்பது எனவே உண்மையான மக்கள் பற்றாளர்கள் என்றால் மக்களிடம் செல்லுங்கள் அல்லது இந்த வன்முறை நாடகத்தை நிறுத்துங்கள் என்பதுதான் நமது கொள்கை .


Monday 27 July 2015

மாசற்றவனே உன் மதிமுகம் காட்டு

மாசற்றவனே  உன் மதிமுகம் காட்டு
 
 காலம் செதுக்கிய 
புதுமை  நீ.

கண்போல ...
காப்பவன்  நீ .

 வறுமையிலும் 
அறம்பிழராதவன்  நீ.

அச்சத்தை 
உடைத்தெறிபவன்  நீ.

அடக்குமுறைகளை 
மிதிப்பவன்   நீ

ஆளப்பிறந்தவன் நீ.

அறிவை ஏற்ப்பவன்  நீ.

உழைப்பை 
போற்றுகிறவன் நீ .

மறத்தமிழன் நீ.

மாறக் கோட்பாடுகளை 
உடையவன்  நீ.  

மாசற்றவனே உன் 
மதிமுகம்  கட்டு

Tuesday 14 July 2015

தனிமனித வரலாறு ....

தனிமனித வரலாற்றில்
துரோகங்களைக்
கடந்தே ....
வெற்றி
படிநிலை வளர்ச்சி
அடைந்திருக்கிறது .

இங்கு ....
கொலைகளும் ...
வல்லுறவுகளும் ....
கொள்ளைகளும் ....
ஏமாற்றுதலும் ...
இன்னபிற
குமுகக்  கேடுகளும்
தேசிய  வீர விளையாட்டுகளாகவே ...
பாவிக்கப்  படுகிறது  .

அனால் ...
உண்மை ...
நேர்மை ...
நாட்டின் வளம்...
மொழி ...
பண்பாடு ...
 அடிதட்டுமக்களின்
வாழ்வாதாரம்
இவை எல்லாம்
தீவிரவியம் .
பேசக்கூடதவைகள் .
இவர்கள்
அருவருக்கத்
தக்கவர்கள் .

இப்படிப்
பட்டவர்களைக்
இந்தக் குமுகம்
கையாளும் விதமேதனி ...


பித்தானாக்கி
மலட்டை
மாலையிட வைப்பார்கள் .
கோள்மூட்டி ...
பொறுக்கித்  தனம்
புரிவோரிடம்
மண்டியிடச்  செய்வார்கள் .


பிசாசிடம்  வாழவிட்டு
வேடிக்கைப்  பார்ப்பார்கள் .

 நாசக்கரர்களே .
உங்களின் வாழ்வு
நிலைத்துவிடுமா  என்ன?





Sunday 5 July 2015

இனி நான் உங்களோடு .....


 நீண்ட நாட்களுக்குப்
 பின்னர் உங்களோடு
 காற்றில்  கைகுலுக்குகிறேன் ...

 காலம்  தந்த  சிறப்புப்
 பரிசு  2013 இன் பிற்ப்பகுதியில்
 நடந்தவை  எல்லாமே ...
 என்  நினைவுப்  பெட்டகத்தில்
 இருந்து  காணமல்  போய்விட்டது ....
  கூடா நட்பு  கேடாய்  முடியும்
 முடியும்  என்பார்கள் ....
 அப்படியே  ஆனது ...

 என்னுள் நடந்தவை
 என்னோடு போகட்டும் ...
 இனி  நான்  உங்களோடு
 வருகிறேன் .

Sunday 14 July 2013

பித்தம் தெளிந்தேன் ....



      வணக்கம் . போராட்டம்தான்  ஒருமனிதனை  செழுமைப்படுத்துகிறது .அல்லது அவனை குப்புறத்  தள்ளி கேவலப்படுத்துகிறது . என்பதான  எனது எண்ணம்  உண்மையாகிப் போனது . சறுக்குமரத்தில் முறையில்லாமல்  ஏறி  வழிதெரியாமல்  விழுந்து  கிடந்தேன் எந்த புரட்ச்சி யாளர்களும்  என்னைக் காக்க  வரவேயில்லை .      இந்த சமூகம் சுயநலம் உள்ளது அதில்  முதலில்  தன்னை மட்டுமே  உயர்த்திக் கொள்ள  வேண்டும்  கடினமாக உண்மையாக  உழைக்க வேண்டும்

       பொருள்  தேடவேண்டும் . அருள் இல்லாதவர்களுக்கு மேலுலகத்தில் இடமில்லை பொருள்  இல்லாதவர்க்கு இந்த உலகத்தில் இடமில்லை என்பதை சற்று காலம்  கடந்து  உணர்ந்து கொண்டேன் .    கொள்கைகள் கோட்பாடுகள்  எதுவுமே  எனது எனது சோகத்தையும்  துன்பத்தையும்  தீர்க்க வரவேயில்லை . எந்த ஆபத்தாண்டவனும் என்னை தூக்கி நிறுத்த வரவேயில்லை . வழமைபோல  நானே  விழுந்தேன்  நானே எழ முயல் கிறேன் . இந்த போராட்டத்தில்  கோழைகள்  எடுக்கும் கீழான முடிவு கூட எடுக்கத் துணிந்தேன்  அனால் தற்கொலை செய்துகொள்ளவில்லை செய்து கொள்ளவும் மாட்டேன் அனால்  எனது முந்தய முடிவில் எந்த  மாற்றமும் இல்லை . என்னமுடிவு என்பதுதானே உங்கள் வினா? காலம் வரட்டும் நானே சொல்லுகிறேன்.

       காதலில், அல்லது துன்பத்தில்  துடிப்பவர்கள்  ஒன்றை முழுமையாக  அறிந்து கொள்ள வேண்டும்  அதாவது  உலகத்தோடு  ஓட்ட ஒழுகல்  என்பது வள்ளுவம்  இந்தபெரும்பான்மை  உலகம் எங்கு ஓடுகிறதோ  அங்கே  நாமும் ஓடவேண்டும் . தனித்து நின்றால்  பித்து பிடித்தவன் ஆகிப்போவோம்  எந்த  துன்பத்திற்கும் காரணம்  என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும்  நேற்று என்பது உடைந்துபோன பானை ... நாளை என்பது மதில் மேல் உள்ள பூனை ... இன்று என்பது  கையில் உள்ள வீணை ... ஆம் நேற்றைய  நிகழ்வை  அசைபோட்டால்  இன்றும் நாளையும் நமது வாழ்வில் காணமல் போய்விடும்  நாளைய தினத்தை  எண்ணி கவலைப்பட்டால்  இன்றைய  கையில் உள்ள வீணையின்  நாதம் நமக்கு மகிழ்வைத்தராது  நாம் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றே  கடந்த காலங்களையும்  எதிர்கலாத்தையும்  சிந்திப்பதால்  ஒன்றும்  போவது இல்லை.       இன்றைய நாளை முறையாக திட்டமிட்டு  செலவிட்டால்  எதிர்காலம்  நமக்கு ஒளிமிக்கதாக மாறிப்போகும் . என்பது எனக்கு சற்று காலம் கடந்து புரிய வந்தது . இன்றைய  நாளில் ஆன்மீகத்தை உள்ளடக்கிய  தேர்ந்த ஆசான்கள் இளைஞ்சர்களுக்கு  தேவையாக  இருக்கிறது .
அடுத்த பதிவில்  பேசுவேன் ....


அன்புடன்  மாலதி .

Saturday 15 June 2013

திட்டம்கொண்டு போராடு - காதல் கடிதம்போட்டி .



எனது அரக்கு
மாளிகைகள் 
எரிக்கப் பட்ட பின்னரும்....
நான்  கற்ப்பூரங்களை
தோடிக்கொண்டு  இருக்கிறேன்
விளக்கேற்றிக் கொள்ள  அல்ல
வீடுகட்டிக்  கொள்ள .தேவையாக இருக்கிறது

     எல்லாக் கதவுகளும்   அடைக்கப்  பட்ட பின்னரும் நான்  எனக்கான  பாதையை தெரிவு  செய்து விட்டேன்  எதையும்  ஏற்றுப் பழகுவது .... இந்த உலகில்  எது நிரந்தரம்  எது தற்காலிகம் ?

எல்லாமே பிழைபட  கற்றுக் கொண்டால்  பாதைகள் கடினமாகத் தோன்றும்  மிகச் சரியானதை புரிந்து கொள்ளாவிட்டாலும்  பாதைகள் கடினாமாகும் . இந்த  கடிதம் வரையும்  எல்லா நொடிகளும்  நான் மிகவும் தெளிகவகவே  இருக்கிறேன் .
   ஒரு இனிய வாழ்க்கை முறை எப்படி இருக்கவேண்டும்  என பல ஆண்டுகளாக  செதுக்கிச் செதுக்கிச்  செய்து வைத்து இருந்தேன்  அந்த இனிய வாழ்வு  கிடைத்து விட்டதாய் . உள்ளூர  அகமகிழ்ந்தேன்  எல்லாமே கனவுபோல நடந்தேறிவிட்டது . எது  நடக்கக்  கூடாதோ  அது  நடந்தேறி விட்டது  சராசரிபோல  பிரிவின் துயரில்  மூழ்கிக்  கிடந்தேன் .
   நமக்கான கற்ப்பிதங்கள்  நம்மைப் போலவே  முரண்பட்டே கிடக்கிறது . மூளியாக.... வாழ்க்கையும் புரிதல்களும்  நான் சொல்லுவதே  சரி  நீ எண்ணுவதே  மிகவும் சரி  என்பது எல்லாமே  இங்கு  பிழையானவைகள் இங்கு எல்லோரும் எல்லாவற்றையும்  கற்றுக் கொண்டு வருவதில்லை  கற்றுக்  கொடுப்பதும் இல்லை .
உனதான  தொடர்புகள்
எல்லாதிசைகளிலும்
அடைத்து  மூடப் பட்டன
ஆனாலும் .....
என் நம்பிக்கை
துளிர்விடும்  என்ற
ஆசையில் ....  வாழுகிறேன் .
காதலாம்  காதல்  எல்லாமே இனக் கவர்ச்சி ... தேவைகள் தீர்ந்து போனால் ஆசைகள் அருகிப் போகும்  என  வரட்டுத் தத்துவ வாதிகள்  கூறலாம் . கூர்மழுங்கிய  வார்த்தைகளினால் .அனால்  எனக்கான  வாழ்க்கைப்  பாதை  எனதான திட்டமிடலுன்  உன்னதமான  நம்பிக்கையுடன்  வடிவமைக்கப் பட்டவைகள் .
நிகழ்காலம் தான் உண்மை கடந்த காலமும்  எதிர்கலாமும் நமது கட்டுப் பாட்டில் இல்லை  எனலாம்  நிகழ்காலம்  நமதானால்  எல்லாக் காலங்களும்  நமக்கானதே .
ஏமார்ந்தோம் ....
ஏமாற்றப் பட்டோம் ...
என் நம்பிக்கைகள் வெட்டிச்
சாய்க்கப் பட்டுவிட்டன
துன்பக்  கடலில்
துடிக்கிறேன் ...    என்பதெல்லாம்  முட்டாள் தனம் நிறைந்த சொல் விளையாட்டுக்கள்.
      நாம்  நாமாக இருக்கும் போது  நாம் என்றுமே  அழத்  தேவையில்லை .
இப்போது  என்னதேவை ...
என்ன இருக்கிறது ...
எப்படி பயன்படுத்தி
மகிழ்வடையப் போகிறாய்.
     என்பதே  எனது புதிய  கற்ப்பிதம்  ஆயிரம்  ஆண்டுகள்  கற்றுக் கொள்ளாதது  ஒரு நொடியில்  கற்றுக் கொண்டு விடலாம் . கற்றுக்  கொள்ளவிட்டால்  இங்கு கற்றுக்  கொடுக்க வேண்டியதும்  பெரியதேவையாக இருக்கிறது  அனால் முறையாக  கற்றுக் கொடுக்கத்தான்  . இங்கு ஆளில்லையோ  என எண்ணத் தோன்றுகிறது .
    ஒரு சிறிய பிழை நேர்ந்து விட்டால்  அதை எவ்வளவு  அழகாக திருத்திக் கொள்ள வேண்டும் .ஒற்றை வார்த்தை பிழை செய்துவிட்டேன்  திருத்திக் கொள்ளுகிறேன்  மீண்டும் பிழை நேராது  இது எவ்வளவு  மனிதனை மா மனிதனாக  மாற்றும் உயரிய வார்த்தை  இந்த  வார்த்தையை  நாம் கையாளாத போது  காயங்கள் பெரிதாகும்  என்ன செய்யப் போகிறோம்.?
   கற்றுக் கொடுப்பவர்மேல்  நம்பிக்கை இழந்து போனால்  கற்றுக் கொள்ள  தேவையிருக்காது  சற்று கீழிறங்கி  நான் இதை செய்து இருக்கவேண்டும்  இதை செய்து விட்டேன் பிழை என்னுடையதுதான்  பொறுத்தருளுங்கள்  இந்த  வார்த்தைகளை  நான்  பயன் படுத்தவே இல்லை . பயன் படுத்தி இருந்தால்  நான் மா மனிதனாக  உயர்ந்து இருப்பேன்
     வாழ்க்கை  சட்டையல்ல  மாற்றிக் கொள்ளுவதற்கு காலங்கடந்து நிற்க வேண்டியது  பொறுமையுடன்  காத்திருக்க வேண்டியதும்  பொறுமையாக  நடக்க வேண்டியது இங்கு தேவையாக இருக்கிறது  நான்  அதையும் சொல்லவில்லை . செய்து காட்டவும்  இல்லை .
     பிழை முதலில்  என்னில் இருந்தே தொடங்குகிறது  இல்லையேல் இங்கு தவறு நேர்ந்து இருக்காது .பிழை செய்துவிட்டேன் பொறுத்துக்கொள்  என வேண்டிய பிறகும்  மன்னிக்கவில்லை என்றால்  ...
     தெரிந்தே  வேண்டுமென்றே  தவறு செய்யவில்லை எதோ ஒருவிதமான  பிழையான புரிதல்  இந்த்த சமூகம் கொடுத்த  அறிவின் மிச்ச சொச்சம் என்னை பாதித்துத்  தொலைத்து விட்டது . என்னுடைய இப்போதைய  நிலையை எண்ணிப் பார்த்து இருக்கலாம்  இதை அழகா கட்டிக் கட்டி இருக்கலாம்  எனக்கு கற்றுக் கொடுகாதது ....
துக்கமும் சினமும் ...
கண்ணீரும் கையாலதத்தனமும் ...
ஒன்றுதான் .
விபத்து நேர்ந்து போனது
சாலையை அடைத்துக் கொண்டு
இருந்தால் எப்படி ?
அழுகையை விட்டெரிந்து
புதிய   வழித்தடத்தை
செப்பனிடு ...
 செப்பனிட்டு இருக்க வேண்டும்  என்னுடைய அவசர புத்தி  எல்லாவற்றையும் பாழ்படுத்தி அல்லவே செய்துவிட்டது .
     
     நீ  இல்லாத  எனதான  வாழ்க்கை  சுவைக்காது நீ இல்லாத  என் வானம்  உதிக்காது  நீ  காட்டாத  திசை  எனக்கு புரியாது ...
எல்லாமுமாக இருந்த  நீ  இன்று என்னுடன் இல்லையென்றால்  இந்த உடல் உண்ணவும் உறங்கவும்  மறந்துபோகிறது . மனிதம்  மரித்துப் போக துடிக்கிறது.

    உன்னுடலை கரைத்துக் கொண்டு  என்னலனைத்  தாங்கிநின்றாய்.
உரிமையானவ... உன்முகம் காட்டு ... போலித்தனமில்லா  உனதன்பை  இந்த பரவெளியில் வேறெங்கு தேடட்டும் .

    காதலுக்கும்  இல்லறத்திற்கும்  இடைவெளி  நீண்டதாய்  உணரவில்லை நீ காட்டும் பரிவும் பாசமும்  முற்றிலும்  மாறுபட்டவை இதில்  காமமும்  காதலும் உன்னதமாக  உயர்ந்து நிக்கிறது .

  இந்த சமூகம் பற்றிய புரிதல்  மாறுபட்டது  ஆனால் நீ  என்றும்  மாறாத  அன்பை  கொட்டிக்  காட்டுகிறாய் . அந்த பிரதி பலனற்ற  பாச வலையை ...  நேசித்துக் கொண்டிருக்க விரும்புகிறேன் .

                                                                          என்றும் அன்புடன்மாலதி