சுய சிந்தனை
கொண்டவன்
அடிமை சேவகம்
செய்ய வரும்பவில்லை .
உண்மைக்கு
இங்கு எவனும்
வேலை கொடுக்கவில்லை .
நான் ஏகல்வயனாக (ஏகலைவன் )
கற்று
தேர்ந்து
நிற்கும் முன்
பரமபத பாம்பாய்
தோல்விகள் .
பிழையானத்தை
செய்யவும்
திணிக்கவும்
தொடரவும் இல்லை .
காட்டாற்று
வெள்ளத்தில்
கடலலையில்
முகிழ்த்தாலும்
கேட்டு அல்ல
வேண்டுமா ?
உதவி என்றே
நீட்டுகிறேன் கையை .
நான் ஏன்
அழவேண்டும் ?
என் உழைப்பை
உள்வாங்காத
போலி உலகம்
தானே அழவேண்டும்?
திருமண வட்டத்திலும்
உள்நுழைய
விரும்பவில்லை .
எதிலும் முன்
அனுபவம் இல்லாத
நான்
என் திருமணத்திலும்
முன் அனுபவத்தை
கேட்டுத் தொலைத்தல்
நான் என்ன செய்வேன் ?.
நான் மதிக்கும் ஒருவரின் நாட்குறிப்பில் இருந்து அவருக்கே தெரியாமல் அடுத்த கவிதை இது அவரின் மனம் எவ்வளவு சங்கட பட்டு யுக்கும் இந்த உலகத்தின் மீது எவ்வளவு வெறுப்பு உண்மையானவர்கள் இந்த மக்கள் புரிந்து கொள்வதில்லையோ ?