போலித்தனமில்லா
உன்னுடனான
தொடர்புகளை
நான் நாளும்
உணர்வதால்
இந்த குமுகம்
குற்றமுடையதுதான்
என்பதை
புரிந்து கொள்ள
முடிகிறது என்னவனே ...
பொய்யும் வழுவும்
அரசபீடம் ஏறுகிறது
என்பதும் ...
நேர்மையும்
அர்பணிப்பு களும்
அலட்சியம்
செய்யபடுகிறது
என்பதான
உங்கள் ஆதங்கம்
நியாயத்தை
உணர்த்துகிறது அன்பே ...
அதற்காக நான்
பொதுநல
வாதியாகிட
முடியாது .
நான் தன்னலம்
எண்ணம் கொண்டவள் தான் .
நேர்மை பேசி
நீ ...
அழிவதை
ஏற்றுக்கொள்ள முடியாது .
அதையே ...
வேடிக்கை பார்க்கும்
கையாலாகாத
இந்த சமூகத்தை
முலைதிருகி எரிந்து
கொன்று அழிக்கவும்
என்னுள்ளம்
ஒப்பாது ...
மன்னவனே
இந்த மாக்கள்
கூட்டத்தை விடுத்து
திக்கு தெரியாத
காட்டிற்குள்
சென்றாகிலும்
நம்...
வாலிபத்தின்
வசந்தத்தை
தேடுவோம் வா .
உன்னுடனான
தொடர்புகளை
நான் நாளும்
உணர்வதால்
இந்த குமுகம்
குற்றமுடையதுதான்
என்பதை
புரிந்து கொள்ள
முடிகிறது என்னவனே ...
பொய்யும் வழுவும்
அரசபீடம் ஏறுகிறது
என்பதும் ...
நேர்மையும்
அர்பணிப்பு களும்
அலட்சியம்
செய்யபடுகிறது
என்பதான
உங்கள் ஆதங்கம்
நியாயத்தை
உணர்த்துகிறது அன்பே ...
அதற்காக நான்
பொதுநல
வாதியாகிட
முடியாது .
நான் தன்னலம்
எண்ணம் கொண்டவள் தான் .
நேர்மை பேசி
நீ ...
அழிவதை
ஏற்றுக்கொள்ள முடியாது .
அதையே ...
வேடிக்கை பார்க்கும்
கையாலாகாத
இந்த சமூகத்தை
முலைதிருகி எரிந்து
கொன்று அழிக்கவும்
என்னுள்ளம்
ஒப்பாது ...
மன்னவனே
இந்த மாக்கள்
கூட்டத்தை விடுத்து
திக்கு தெரியாத
காட்டிற்குள்
சென்றாகிலும்
நம்...
வாலிபத்தின்
வசந்தத்தை
தேடுவோம் வா .





