இராஜஇராஜேஸ்வரி அவர்கள் வழங்கிய விருது

இராஜஇராஜேஸ்வரி  அவர்கள்  வழங்கிய  விருது

Saturday, 15 October 2011

சித்தன் போல் சிந்திக்கிறாய்

நுனிப்புல்  மேய்வதில்லை
நுணுகி நுணுகி ...
ஆய்கிறவன்  நீ.

கற்காமலே
கருத்துரைப்பதில்லை
ஆழ்ந்து  உள்வாங்கியே
கற்ப்பிக் கிறாய் ,

கண்ணீருக்கு
காரனமானவன்
அல்லன்  நீ
மாறாக  துடைத்தெரிய
களமாடுகிறாய்.

கனமானதை
உள்வாங்கிச்
செறித்துக்  கொள்கிறாய்
அதையே ...
எளிமையாக்கி  எமக்கு
பாடமாக்கு  கிறாய் .

உன் ...
பட்டறிவை எமக்கு
பயிற்று விக்கிறாய்
என் பாதையை
நேராக்குகிறாய்.

சித்தன் போல்
சிந்திக்கிறாய்
உலகின்  கண்களுக்கு
பித்தன் போல்
தோற்ற    மளிக்கிறாய்.

கண்ணுள்ள  குருடர்க்கு
வழி சமைக்கிறாய்
அனை   வருக்குமாய்
கலங்கரை  விளக்காக்கி
உயர்ந்து  நிற்கிறாய்.




  

Monday, 10 October 2011

அறிவுக் கோழைகள் .....



இவர்கள்  ...

கோழைகள் 
தமது ஆளுமையை 
நிலைநிறுத்த  இயலாத 
பேதைமை  உள்ளவர்கள் .

விளைந்தும் 
அறுவடைக்கு  
ஆயத்தமகாதவர்கள் ..
படித்தும்வாழ்க்கைப்   பயன்பாட்டுக்கு 
வராத  அல்ஜிபிரா 
கணக்குகள்.

நேர்மையிருந்தும் 
நேசிக்கத்  தெரியாதவர்கள்
விழி  இருந்தும் 
வழிகேட்டு  அலைபவர்கள் .

கைவிளக்கை  வைத்துக் 
கொண்டே  காரிருளைக் 
கண்டு  அச்சம்கொள்ளுபவர்கள் .

அறிவை  தன்னுள்ளே 
புதைத்துக்  கொண்டே 
முட்டாள்த்  தன
ஆளுமைக்கு அடங்கிப்
போகிறவர்கள் .

பேய்த்தனம்  நிறைந்த
பெண்மையை 
எதிர்க்கத்  தெரியாதவர்கள் .

சத்தமில்லாத ...
சமத்துவம் நிறைந்த _ வாழ்வை 
சமைக்கத்  தெரியாதவர்கள் .

 நாளும் ... 
இல்லறத்தை
அணு அணுவாய் 
சுவைக்கத்  தெரியாதவர்கள் .

பண்பட  தெரியாதவர்கள்.

பாராட்டத்  தெரியாதவர்கள் .

என் ...
விமர்சனம் 
கடினமாகத்  தோன்றினாலும் 
உண்மை  என்னவோ 
இதுதான். 

       கடந்த  எமது  இடுகைக்கு  வந்து  பெயரைக்  குறிப்பிடாமலே  பின்னுட்டம்  ஒன்றை  இட்டுவிட்டு  சென்று  உள்ளார் ஒருவர்  அதாவது  எனது  நறுக்கப்  (கவிதை)   போலவே நேர்மை  நிறைந்து இருந்தாலும்  இவரின்  மனைவி
Anonymous Anonymous said...
இப்படி தான் நானும், ஆனால் என் மனைவி நீ ஒரு மிருகம் என்கிறாள்...
இப்படி   குறிப்பிட்டு  இருந்தார்  இவர் நேர்மையாக  இருந்தாலும்     இவரின்  மனைவி நேர்மையாக  இல்லை  என்கிறார்  இதை  நான்  எப்படி  பார்க்கிறேன்  இந்த  நேர்மையாளர்கள்  வெளியே  வராத  காரனத்தினல்தான்  இந்த  சமூகம் சிக்கலை  சந்திக்கிறது  நேர்மையாளர்கள்   எல்லா இடங்களிலும்  தமது  ஆளுமையை  நிலை  நிறுத்த வேண்டும்  என்பதே  நமது  அவா .




















  







Saturday, 1 October 2011

என் தவத்தின் காரணமும் இதுதான்



உன் இதழ்களில்
வெண்சுருட்டின்
நாற்றமெடுக்க  வில்லை
அதைமறைக்க
வேறு எதையும்
அசைபோட  வில்லை.

உன் வியர்வையிலும்
சாராய  நெடியில்லை
இரத்தத்திலும்  தான்.

உன் கொள்கையிலும்
கோணலில்லை.

உன் உணவுத்திட்டத்திலும்
மரக்கறி  உணவே.
என் வாழ்னாள் 
முழுமையும்
மகிழ்வு நிறைந்திட
இதுபோதும்
என் கடுந்தவத்தின்
காரணமும் இதுதான்
அன்பனே ....

Saturday, 24 September 2011

மின்னஞ்சல் விடு தூது

மின்னஞ்சலே ...
என் பாட்டுடைத்தலைவனிடம்
இருந்தான செய்தி
விரைந்து  கொண்டுவா
நான் வேட்கையுடன்
காத்திருக்கிறேன்.

நாளது   தேதிவரை
சேதியில்லை.

என் மன்னவன்
மாலையுடன் வருவான் 
என மாலைவரை
காத்திருந்தேன் .
மாலையுமில்லை என்
மன்னவனுமில்லை

இரவாகிப்  போனது .

இருட்டு ...
அச்சத்தையும்  தரும்
இச்சையையும் தரும்
இரண்டும் கொடுமையானது
தீர்வுமட்டும்  ஒன்று என்னவன்.

ஏட்டில் எண்ணங்களைப்
பதிக்கலாம் ...
எண்ணுனர்வினை  எப்படிப்
பதிப்பேன் .நீ
அறிவாயா?

அவரின் அடையாளம்
கேட்டாய்
நேர்மை அவர்பாதை
உண்மை அவர்பேச்சு
சமூகநலன்அவர்கொள்கை
இப்படித்தான்  என்னுள்ளத்தில்
அவர் ...

தேடு மின்னஞ்ச்சலே
விரந்துதேடு
நெஞ்சத்தில் உள்ள
அவரை  நிசத்தில் கொண்டுவா.

      தூதுப்  பிரபந்தங்கள்  கலி வெண்பாவிற்  செய்யப் படுத்தல்  வேண்டும் 
என்பது இலக்கணம் .நமக்குஅது தெரியாது  என்பதால்  / இந்த நறுக்கு (புதுக் கவிதை
) களுக்கு இலக்கணம்  இன்மையால்  உங்கள் முன்  வாசிக்கப் படுகிறது .  

  

Saturday, 17 September 2011

எது சிறந்தது ?



அறிவிற்கும்
அழகிற்க்குமான போட்டியில்
நீ
அறிவைமட்டுமே  தேர்வு
செய்கிறாய்.

பண்பிற்கும்
பணத்திற்க்குமான தேடலில்
பண்பிற்க்கே வாய்ப்பளிக்கிறாய்.

நட்பிற்கும்
உறவிற்க்குமான
போராட்டத்திலும்
நட்பையே  விரும்புகிறாய்.

எதிர்ப்பிற்கும்
பாராட்டுகளுக்குமான
நேரெதிர்  கோட்பாடுகளிலும்
எதிர்ப்பவரையே  பேசவைக்கிறாய்.


கண்களுக்கும் 
காதுகளுக்குமான
துலாக்கோலில்
கண்களுக்கே
முதலிடம்  வைக்கிறாய்.  

நீ
சமத்துவ  உலகை
காண கனவு
காண்பது புரிகிறது
அன்பனே  நானும்
ஆயத்தமாயிருக்கிறேன் .


 ஈழத்தில் இன்று ...

                பல  இலட்சம் ஈழத் தமிழரை  கொன்ற கொலைகாரன்  ஆட்சியில் தமிழர்கள்  தங்களின்  நாட்டுபுற  கடவுள் நம்பிக்கைகளுக்குஆடுகளையும் , கோழிகளையும்   பலியிட  கூடாதாம் . ஏனெனில்  கொலை  பாவமான  காரியமாம்  ஏன்டா  நாய்களே  உங்களுக்கே  வெட்கமாக தெரியவில்லையா?

Saturday, 10 September 2011

ஏதுமற்ற (நிர்வாண ) நிலை

காதல் ...
உடலுக்கான தேவையில்
தொடங்கியதா?

உள்ளத்திற்க்கான
தேடலில் தொடங்கியதா?
என கேட்டாய்.

ஒரு நிமிடம்
சிந்தித்தேன் .

உன் வினவின்
நோக்கத்தை
உள்வாங்கி  கொண்டால்தானே
நான் நீயாக முடியும்.

 ஆறாவது
அறிவை  எடைபோடுவதில்
தேர்ந்தவன் நீ.

தேவையில்லாது
சினம் கொள்வதுமில்லை
சினம் கொள்ளவைப்பதுமில்லை.

காதலை ...
புரிந்து கொள்ள
இன்னுமொரு இதயம்
வேண்டுமென்றாய்.

அது ...
புரிந்து கொள்ள
இயலாதவர்களுக்கு தானே?
என்பதை புரியாதவள்
அல்ல நான்.

அன்பனே ...
காதல் உடலுமில்லை
உள்ளமுமில்லை
அது....ஏதுமற்ற
(நிர்வாண) நிலை.

ஏதுமற்ற நிலையில்
சுகமுமில்லை
துக்கமுமில்லை
அது உயர்ந்த உணர்வு
என்பதைத்  தானே
நீ  எனக்கு கற்பித்தாய்.

 

      சாந்தன் பேரறிவாளன் , முருகன்  விடுதலை  குறித்து குடித்துவிட்டு  பேசும்  அந்த பெரியாரின்  பேரன்  என கூறும்  கழிசடை பற்றிதானே கேட்கிறீர்கள்  தமிழனாக  இருந்தால் தான் ஆடவிட்டாலும்  தன் சதை ஆடும்  என்பார்கள்  அதுதான்  தமிழனே இல்லையே  அதை பற்றி  பேசி நேரத்தை வீணடிப்பானேன் ? நான் இளங்கோவனை  சொல்கிறேன்  என நீங்கள்  நினைக்க வேண்டாம்.

Saturday, 3 September 2011

உன் சுவடுகள் ...


நீ ... குழப்பவாதியல்ல
வெற்றி அல்லது
தோல்விக்கான
காரணங்களை மட்டுமே
சிந்திக்கிறாய்.

மூன்றாவதாக
ஒன்றை சிந்தித்து
நீயும் குழம்பி
மற்றவர்களையும் 
குழப்புவதில்லை .

தோல்விக்கான காரணங்களை
கண்டு அதுதந்த
பட்டறிவால்
வெற்றிக்கனியை பறிக்க
வேண்டுமென்கிறாய்.

வெற்றியும்
நிரந்தரமல்ல  என்பது
உன் கோட்பாடு .

அதை
நிலைநிருத்தாவிட்டால்
தோல்வி நம்மைவிழுங்கி
விடும்  என்கிறாய்.

வெற்றிக்கான உன்
இலக்கணமும்
மாறுபட்டது.

முயன்று
மலை முகட்டை
அடையவேண்டும் என்கிறாய்.

பின் வாசல்வழி
வெற்றி இந்த
சமூகத்திற்க்கான
சாக்கடைகளை  மட்டுமே
தோற்று விக்கும்என்கிறாய்.

என்னவனே ...
உன்  சுவடுகள் ...
நாளை நல்லன
விளைவிக்கட்டும்.