இராஜஇராஜேஸ்வரி அவர்கள் வழங்கிய விருது

இராஜஇராஜேஸ்வரி  அவர்கள்  வழங்கிய  விருது

Tuesday, 6 November 2012

அன்பனே ... விரைந்து மங்கள நாண் கொண்டுவா .

என் உள்ளத்திலுள்ள
வேட்கைபோலவே
உன்வரவின்
நாள் நெருங்குவதாய்
ஏதோ  உள்ளுணர்வு
சொல்லுகிறது .

உன் எக்குருதியான
தோள்களைத்
தழுவிட
உடல்  ஏங்குகிறது .

காவியங்களை
மிஞ்சும் காதல்
மொழிகளை
பேசிட  உதடுகள்
துடிக்கிறது .

ஆசைதீர
உன்  எழிலை
பருகிட  கண்கள்
ஆவல் கொள்ளுகிறது

உன் ...
நெருக்கத்தை
சுவைத்திட
என்மேனி
பசலை  பூக்கிறது.

இருப்பினும்
பண்பாடு என்னைத்
தடுக்கிறது .

அன்பனே ...
விரைந்து
மங்கள  நாண்
கொண்டுவா .

Tuesday, 9 October 2012

எனக்குப் பொருத்தமானவனும் நீ.




ஆண் ,பெண்  இனபேதம்
பார்க்காதவன்  நீ.

இயற்கையின்  படைப்பில்
அனைவரும் சமம்
என்கிறவன் நீ.

சாபங்களும்
சாபவிமோசனங்களும்
மனிதத்தை
முடமாக்குவன
என்கிறவன்  நீ.

கருத்தியலை
அழித்தொழித்து
பொருளியலை
முன்னெடுக்கிரவன்  நீ .

போர்க்குணம்

நிறைந்தவன்  நீ.

எனக்குப்
பொருத்தமானவனும் நீ.
 

Sunday, 19 August 2012

தமிழனே இப்படித்தானோ



கடவுள்  மறுப்பை
கட்டுமிரண்டித்தனாமாய் ...
அறிவியலை  புரிந்து கொள்ளாத
கண்மூடித்தனத்தோடு .

எப்போது புரிந்து கொள்வாய்
தமிழனே .
கடவுள் மறுப்பு என்பது
எப்படி...  ஏன்...
என அறிவியல்
நுட்பத்தோடு ...
நீ ...
மறுத்தளிக்க
வேண்டும்  கடவுள்
இல்லை கடவுள் இல்லை
இல்லவே  இல்லை
என்பது எப்படி
அறிவும்  அறிவியலும் ஆகும் ?

பெரியார்  ஒருவர்
போதுமே
தமிழனை
இழிவு  படுத்தியதும்
முடமாக்கியதும் .

பழமை
அறிவியாலை  உள்ளடக்கியது
யோகமும்
சாங்கியமும்
உலகாயதமும்
உள்ளடங்கியதுதான்
வள்ளுவரின்  திருக்குறள் .
எவனாவது  மறுதலிக்க இயலுமா ?

கடவுள்  எப்படி
எதற்காக படைக்கப்
பட்டர்  என்பதை
அறிவியல்  நுட்பத்தோடு
புரிய  வைக்க வேண்டாவா ?

சடங்குகளும்
சில  அறிவியல் நுட்பம் வாய்ந்தவை
இதை  புரிந்து
கொள்ளவில்லை
என்றால்  எதையும்
முழுமையாக
புரிந்து கொள்ள இயலாதே .

காட்டு  மிராண்டியாய் 
இருந்து விடாதே
விழி ...
ஏழு ...
பார் ...
உலகை  நோக்கு
வெற்றியை  கைது  செய் .

அறிவியல் சில சமயம்
ஆன்மீகமாக
தோற்றம் கொண்டு
இருக்கும்
அறிவைதிரட்டி
புரிந்து கொள்ள முயல்
காட்டுமிராண்டியாக
மறுதலித்து
முடங்கிப் போகாதே .

அறிவியலை
ஆன்மீகமென  எண்ணி
கோட்டை விட்டு விடுவோம் .

சான்றைத்  தேடி
அறிவியலை  பரப்புரை
செய் .

சிந்திப்பாய்
தமிழனே .




Monday, 6 August 2012

சாவைத்தழுவா விடியலைத்தேடுகிறேன்



எந்த மை கொண்டு
எழுதப்  பட்டதென
புரியவில்லை
அழிய மறுக்கிறது
இதயதிலுன் பெயர் .

கண் மூடித்தனங்கலோடில்லை
கட்டுப் பாடுகளுடன்
சிந்தித்தேன் ...
வளம்  கொழிக்காவிட்டாலும்
கேடுகள்
நிகழ  வாய்ப்பே
இல்லை .
நமக்கான சிறகுவிரித்தலில் .

உனதான
பாதைகள்  என்
வாழ்க்கைக்கு
வலு  சேர்க்கிறது .

சிதறிக்  கிடக்கும்
உன் சிந்தனைக்  களம்
என்னுள் சிலிர்ப்பைத்தருகிறது .

உனதான
வாழ்வியல்
விளக்கங்கள்
என்னை
வசீகரிக்கிறது .

எதிர்  நீச்சல்
அல்ல...
இலக்கணமாய்
உன் பதிவுகள் .

உன் ...
சகாப்த்தத்தில்
நானும் சாவைத்தழுவா
விடியலைத்  தேடுகிறேன் .

                 -  தமிழன்புடன்  மாலதி

Thursday, 19 July 2012

உன் முரட்டுக் கரம் தா



வார்த்தைகளுக்கு
வண்ணம் பூசி
பழக்கமில்லை .

கடலலையாய்
உள்ளம்  அலைபாய்கிறது .

என் உறக்கத்தை
உன்நினைவு
கடன்வாங்கிக்
கப்பலை செலுத்துகிறது .

துடுப்பிழந்த
ஓடமாய் ...
ஓய்ந்துபோக  இயலாது
வெடித்துக்  கதறுகிறேன் .

நீலவானம்
முடியும்வரைத்
தேடுகிறேன்
உன்னினைவுச்
சங்கிலியோடு .

திமிங்கிலங்கள்
அசைபோடுமுன்
அன்பனே - உன்
முரட்டுக்  கரம்  தா .




Friday, 6 July 2012

மறத்தின் துணைக் கொண்டு அறத்தை வென்றெடுக்க

காகிதபூ அணிவதில்லை நீ
என்றாய் .

காரல் மார்க்ஸ் சே
வியத்தகு  தலைவர்என்றாய்.

சாதிகள்  அழிய
வேண்டுமெண்றாய் .

சமத்துவாம்
நிலைக்க வேண்டுமென்றாய்.

உலக சண்டைகள்
ஓய வேண்டுமென்றாய்.

அதற்க்கு ...
மறத்தின் துணைக் கொண்டு
அறத்தை வென்றெடுக்க
வேண்டு மென்கிறாய்.