இராஜஇராஜேஸ்வரி அவர்கள் வழங்கிய விருது

இராஜஇராஜேஸ்வரி  அவர்கள்  வழங்கிய  விருது

Thursday, 21 March 2013

உன்னமுதில் திகட்டி நிற்கிறேன் .

நீ  திறந்து காட்டிய 
உள்ளம் ...
என்னை கட்டிப்போட்டது .

நீ சுட்டிக் காட்டிய

செய்திகள்
என்னை  வட்டமிடுகிறது .

வாட்டம் கொண்ட

நான்  வளைந்து
நிற்கிறேன் .

காய்த்து  குலுங்கும்

கனியமுதாய்
மாற்றிக்  காட்டினாய் .

விண்ணை  முட்ட

உன்னமுதில்
திகட்டி  நிற்கிறேன் .

Tuesday, 19 March 2013

தமிழகத்து  தெருக்களில் எல்லாம்
அரசியல் நரிகள் ...
ஊளையிடுகிறது .

காட்டிக்  கொடுத்தவர்
கண்டு கொள்ளாதவர் ...
நீலிக்கண்ணீர்  விட்டு 
நடிப்பு கட்டுகிறவர்கள்
பிணம் தின்னிக் கழுகுகள்
எல்லோரும் வேடமிடுகிரார்கள்

நாடாளுமன்ற  தேர்தல்
வந்து  தொலைக்கிறது
தமிழர்கள்  வாக்கு
பிச்சை  இடவேண்டும் .

ஈழ சிக்கலில்
போதுவாக்கெடுப்பே
சிறந்த  தீர்வு .

தன்னெழுச்சி  மிக்க
மாணவர் போராட்டம்

இனவுணர்வை ...
தட்டி  எழுப்பட்டும் .

மரபுவழிப்பட்ட
தமிழரின்  மறத்தனம்
உலகே அறியட்டும் .

மாணவர் போரட்டத்திக்கு
ஆதரவு  கொடுத்து
பலம் சேர்ப்போம்.

Saturday, 23 February 2013

என்னிதயத்தில் உயர்ந்து நிற்கிறாய்.



அன்புகாட்டுவதில்
புதுமை படைக்கின்றாய் .

மொழிபோல
நிலைத்து  நிற்கின்றாய் .

முன்விட்டு  பின்னர்
அறிவை சுவைக்கின்றாய் .

கோ போல என்னிதயத்தில்
உயர்ந்து  நிற்கிறாய்.

வம்சம்  தழைக்க
வழியும்  செய்கின்றாய்.

கொஞ்சம்  தானே
சிரித்துக்  கொள்கின்றாய்.

குறைவிலா
மகிழ்வூட்டுகிறாய் .

நிறைவான இன்பம்
காண தூண்டுகிறாய்.

கண்ணில்  பெரு
ஒளியாய் ...

இதயத்தே
இனிய மகிழ்வாய்....
ஆர்பரிக்கும் ...
அலைகடலாய்.....
இன்முகம் காட்டுகிறாய்.
திக்கு தெரியாமல்
இன்பம் காணுகிறேன் ....
துணையாய் வந்திருக
பற்றிக் கொள் ....


     தற்செயல்தான்  இந்த ஆக்கத்தில்  ஒரு குறிப்புஒன்று  பொதிந்து  உள்ளதை காணுகிறேன் .
கண்டு சொல்லுங்கள்  பரிசொன்றை  வெல்லுங்கள் .

தமிழன்புடன் ....
மாலதி .

Thursday, 24 January 2013

இலக்கணத்தைப் படைப்போம் வா.

வீசுகின்ற   தென்றலும் நீ
பேசுகின்ற  மொழியும் நீ
சுவாசிக்கின்ற காற்றும் நீ
கற்கின்ற  பாடம் நீ.

அன்பையே உன்னுள்ளத்தில்
காட்டு  கின்றாய்
அரவணைத்து  தாயையப்போல்
தேற்று  கின்றாய் .

என் கண்ணீருக்கு
விடைக்கொடுக்க  நினைக்கின்றாய்.
காலம் போல்கடமையை
நீ  செய்கின்றாய்.

கள்ள  மில்லா
உள்ளத்தைக்  காட்டுகிறாய்.
கவிஎழுத  ஒரு
மொழியை  வழங்குகிறாய்.

பால் நிலவே 
பருவத்தின் செழிப்பே ....
உன்  விழிஎழுதும்
பா  வினங்கள்கோடி .

நம்  இலக்கே
இலக்கணமாய்  வாழ்வதுதான் .
என்றாலும்  புதிய
இலக்கணத்தைப்  படைப்போம்  வா.

Sunday, 9 December 2012

என் காதலுக்கு பச்சைக் கொடிகாட்டு .

உன்கண்களை ...
நேரடியாக சந்திக்கும்
துணிவு எனக்கில்லை .

காதலில்  வீழ்ந்து
விடக்கூடாது என்பதான
என் எண்ணம்
சிதைந்து  கொண்டே
வருகிறது .

கருக்கொண்ட  மேகம்
போல்... என்கண்கள்
காதலை  காட்டிக்
கொடுத்துவிடுமோ
என  அச்சப்படுகிறேன் .

என் கடுமையான
பணிச்சுமையின்
ஊடாகவும் உன்னை
நினைக்காமல்
இருக்கமுடியவில்லை .

நாளும் என்னுள்ளம்
உன்னைவிட்டு
வெகுதொலைவு
வந்துவிட்டதாய்
குமுறுகிறது .

அப்போதுதான் ...நீ ...

என்னுள் குடிகொண்டு
விட்டதை
நான் அறிந்து கொண்டேன் .

நம் வாழ்வில்
மலரைவிட  மென்மையாகவே
உன்னுடனான  தொடர்புகள்
இருக்கும் .

உன் வெற்றியின்
பாதை  நோக்கியே
என்னுள்ளம்
இனி  சிந்திக்கும் .

உனது ...
வெற்றியின்  உச்சத்திற்காய்
ஏணிப் படிகாளாய் ...
என்னுடலும்  உழைக்கும் .

உனதான ...
வலிகளை  இனி
என்னிடம்  சேர்த்துவிடு
இன்பங்களை  மட்டுமே
அணிந்துகொள் .

இப்போதெல்லாம் ...
உன்நினைவு  தரும்
சுகத்திற்காகவே  நான்
தனிமையை
விரும்புகிறேன்.

இரும்பு  இதயமா
உனக்கு ? என்
காதலை  ஏற்ப்பதில்
என்னதயக்கம் .

நம்பிக்கை ...
துரோகம்
இழைத்துவிட்டதாய்
இந்த  சமூகம்
உன்னை குற்றம் சாட்டும்
என  அச்சப்படலாம் .

காந்த  விசை
போன்றதான
என்  காதலுக்கு
பச்சைக்  கொடிகாட்டு . 

     இந்த  கவிதை கூட ஒரு விதத்தில்  நம்பிக்கை  துரோகம்  இழைத்து  விட்டதுதான் . காரணம்  இது நமது கவிதை  இல்லை . நம்பிக்கையோடு  படிக்க  கொடுத்ததை  பதிவேற்றம்  செய்துவிட்டேன் .

பொறுத்துக்  கொள்வீர்கள்
என்ற  நம்பிக்கையுடன் ...
மாலதி .

Thursday, 6 December 2012

உடலும் உள்ளமும் உறுதிபெற ...

ஆதவக்குளியல்  ஒரு
சுகம் தான் .

சுற்றும் நிலவும்
இனிமைதான் .

இயற்க்கை மலைகள் ...

இனிமையாய்
கொட்டும்  அருவி ...

பற்றிப்படர்ந்திரும்
கொடிகள் ...

பார்க்கத் தூண்டும்
மலர்கள்...

விண்ணைத் தொடும்
 மரங்கள் ...

பச்சைவண்ண
புல்வெளிகள் ....

கண்ணைக் கவரும்
பனி தூவல் ....

பகலவன்
உதிக்கும் காலையும்....

கொட்டித்தீர்க்கும்
மழையும்  தான் ...

இனிமையாய் தொட்டுச்
செல்லும் தென்றலும்தான் ...

இவைகள்  ....
இயற்க்கைவரைந்த
காவியங்கள்
கனவுகள்  வளர்க்கும்
சூழல்கள் ....

உடலும் உள்ளமும்
உறுதிபெற
இவைகள்  வேண்டும்
தலைப்பைச் சேருங்கள்


நம்  வாழ்வில் .



Saturday, 1 December 2012

விதை தூவு .... விருட்சமாக தொற்றங் கொள் .

 கல் நெஞ்சக்காரனே ...
அத்தனை  இரும்பு
இதயமா உனக்கு?

எத்தனை  தடவை
கேட்டேன்...
இதயம் திறந்து
காட்டினேன்
புரியவில்லையா ?
நடிக்கிறாயா?

என்
கனவுக் கோட்டைகளை
சிதைக்க  முயலுகிறாய்.

பெண்மையின்

மென்மையையும்
அதன் மௌனத்தின்
வலியையும்
புரிந்து கொள்ளாதவன்  நீ.

வலிய வந்து
கேட்டதால்
வலிமையற்றவள்  அல்ல
நான் .

உன் ....
கோட்டைக்குள்
குடிபுக  தகுதியற்றவளும்
அல்ல நான் .

விழிமூடி
மௌவுனிப்பதை
உடைத்தெறி ....
கண்  திறந்து
பார் ....
உனக்கான
வசந்த
வாசல் திறந்து
காத்திருக்கிறது .

விதை  தூவு ....
விருட்சமாக
தொற்றங் கொள் .

அன்புடன் ....
உன் மாலதி