இராஜஇராஜேஸ்வரி அவர்கள் வழங்கிய விருது

இராஜஇராஜேஸ்வரி  அவர்கள்  வழங்கிய  விருது

Monday, 16 April 2012

நான் கற்றுத்தேறிய கல்லூரியும் நீ நீ ... நீயே .

பிழையான  கற்ப்பிதங்களை
கொள்கிறவன் அல்லன் நீ .

காதலில்  நேர்மையான

கோட்பாடுகளைக்
கொண்டவன் நீ .

இருவருக்குமான

முழுமையான புரிதலில் 
தேறியபிறகே
காதலில்  தடம்
பதிய  வேண்டும்  என்கிறவன் நீ .

புரிதல் உடலில்  இருந்தல்ல

உள்ளத்தில்  இருந்தான
வேட்கை  கொள்ள வேண்டும்
என்கிறாய்.

கண்டதும்  காதல்

என்ற   காட்டுமிராண்டித்
தனத்தை ...
கண்மூடித்தனமாய்
எதிர்க்கிறவன் நீ .

புரிதலுக்கு  பிறகேயான

பிரிதலையும்
சாடுகிறவன்    நீ.

நான்  கற்றுத்தேறிய

கல்லூரியும்  நீ
நீ ... நீயே .

Monday, 9 April 2012

காதலில் பழங்கால பெண்கள்


 பழங்கால  பெண்கள்
காதலைக் 
கண்மூடித்தனமாய்
அணுகவில்லை .

கல்வி கற்றவனாக ...
வீரனாக ....
நேர்மையன  வனாக...
வளப்பம் நிறைந்த
நாட்டவனாக...
இப்படி  காதலனின்
உண்மை 
நம்பகத்தன்மைகளை
அறிந்தே  காதலில்
வீழ்ந்தனர்
காதலனை  வீழ்த்தினார்.

காதலில் அப்போது
உறுதியும்  இருந்தது .
நேர்மையும்  பிறந்தது
இல்லறமும்  நல்லறமே
மாறியது .

இன்றோ ...
உள்ளத்தைக்  கணக்கில்
கொள்ளாமல்
கள்ளத்தை  உள்ளத்திலேந்தி
உடலை  இலக்காய்
கொண்டு
பொன்னே...
தேனே  என வழிந்து....
விரைந்து  திகட்டிப் போய்
சீரழிகின்றனர் .

விட்டுக் கொடுத்து
வாழ்வோம் .
தட்டிக் கொடுத்து
தேற்றுவோம்.
தமிழ்
பாரம்பரியத்தை
பண்பாட்டைக் காப்போம்.
மீட்ப்போம்.

Saturday, 24 March 2012

இன்றைய உலகம் ....

விழி  இழந்த ஒருவனுக்கு 
இருளும்  ஒன்றுதான் 
ஆயிரம்  வண்ண 
விளக்குகளும்  ஒன்றுதான்.


இன்று ...
அறிவைச்  சொன்னாலும் 
ஏற்க்காமைக்கு  காரணமும் 
இதுதான்.

எளிமையான 
உணவுகளையே  உண்டு 
பழகியவனுக்கு 
சற்று  கடினமான 
உணவுகள்  செரிக்கவா 
செய்யும்  கழிச்சல்தான் 
காணும் .

அறிவை ...
கற்ப்பிக் கிறவர்களும் 
கற்றுக்    கொள்கிறவர்களும் 
மிகவும்  குறைவே .

முடைநாற்றம்  வீசும் 
கண்மூடித்  தனங்கள் 
காட்டுத்தீயாய்
பரவி  அழிக்கும் .


அறிவோ  நொண்டி 
வண்டியில்  பயணிக்கும் 
உலகிது .


வழிகாட்ட  வந்தவரையே 
வெட்டிசாய்க்கும்
வேடிக்கையும்  பார்க்கும்.

தெளிந்த  அறிவு 
முதற்க்கண்  பண்படவேண்டும்.
பின்னர் 
பண்படுத்தத்   தொடங்க 
வேண்டும்.

பாலை 
நிலத்தையும் 
சோலையாக்கிக் காட்டலாம் 
என்பதே  என்எண்ணம் .

அறிவைப்  புகட்டுவதும் 
புகட்ட  எண்ணுவதும் 
இத்தன்மைதே .
           
   



             இன்றைய நிலையில்  நேர்மையாக  இருப்பவர்கள்  அரிதானவர்கள் என தங்களுக்குள்ளாகவே  கற்பிதம் செய்து கொள்ளுகிறார்கள்  நான்உண்மையானவன்  நேர்மையானவன்  கதாநாயகத்( hero )தன்மை  கொண்டவனாக  நான் உண்மையுடன் இருப்பேன்   என ஏன்நினைப்பதில்லை  அப்படி நேர்மையனவனவனைப்  பற்றி  எழுதினால்  வனத்தில் இருந்து வந்தவனைபோல கருதுகிறார்கள்  நானும் அப்படித்தான் என  ஏன்  சொல்ல இயலுவதில்லை அருள்கூர்ந்து பதில்  அளிப்பீராக .
                                                                                  தமிழன்புடன்  மாலதி .  

Saturday, 17 March 2012

நீங்கள் யார் ?


தீமைகளை எதிர்த்தான 
நல்லவர்களின்  கைக்கோர்த்தலும்
ஒற்றுமையின்மையும்  தான் 
அறம்(நீதி ) அழிவதற்கு 
மூகமையான காரணம் .

எய்ச்சுகிறவன் இருவர் 
பாதிக்கப் படுவது  
பலர்  கோழைத்தனம் 
தானே  எதிர்க்கமை?

தீயவர்களின் 
தீமையால் அல்ல 
நல்லவர்களின் 
கோழைத்தனத்தால்  தானே 
அறம்  விலைபேசப்
படுகிறது ?

நல்லவனாக.....
கோழையாக ...

வாழ்வதைவிட  
வீரனாக  வாழ்வதே 
நாட்டுக்கும்  நல்லது 
வீட்டுக்கும்  ஏற்றது .

தீயதை ஒன்றுகூடி 
எதிர்ப்போம் 
நல்லதை  பாராட்டி
மகிழ்வோம் .

Saturday, 10 March 2012

உன்னைத் தொடர்வதேன்?





எவைஎல்லாம்நோவைத்தருமோ 
அவற்றை  எல்லாம் 
தொடுவதுமில்லை 
தொடர்வதுமில்லை  நீ .

எதுஎல்லாம்
இந்த  குமுகத்தை 
சீரழிக்குமோ 
அவற்றை எல்லாம்  
எதிர்ப்பவன்  நீ .

தன்னலத்தைப் 
புறந்தள்ளி 
பொதுநலத்தை 
முன்னெடுக்கிறவன் நீ.

முறையான  கல்விதான் 
கண்ணீரை விரட்டும் 
"மா" மருந்து என்கிறாய் .

அதனால்தான் -உன் 
பாதம் 
காட்டும் பாதையை 
தொடர்கிறேன்  அன்பனே .  

Saturday, 3 March 2012

நான் யார் ?



இங்கு ...
குறிப்பாக தமிழகத்தில்
நடக்கும்  தவறுகளை
சுட்டிக்காட்டுகிறேன்.

இனவாதம்
பேசவில்லை
தமிழர் நலன்
பேசுகிறேன்.

தமிழரின்  கலைகளை
போற்றுகிறேன் ...
பின்பற்றுகிறேன் ...
வணங்குகிறேன் ...
அறிமுகப் படுத்துகிறேன்
தொடரக்  கோருகிறேன் .

அரசாக  இருந்தாலும்
இல்லாத ...
ஆண்டவனாக இருந்தாலும்
செய்வது  பிழைஎனத்
தெரிந்தால்
குன்றின் மீதேறி
குற்றம்  சாட்டுகிக்றேன்.

என்  அகவையையொத்த
இளைய  சமூகத்திற்கு
நல்வழிக்  காட்டுகிறேன்.

ஆண்தான்  அரசியலும்
வீரமும்  பேசவேண்டுமா
என்ன?

பாண்டிய மன்னன்
அவைக்களத்தில்  


தேராமன்னா !
செப்புவது  ஒன்றுடையேன்
என்றாளே என்  தமிழன்னை 
கண்ணகி  பெண்தானே ? 


போற்றுவோர்  போற்றட்டும் 
புழுதிவாரி  தூற்றுவோர் 
தூற்றட்டும்.


என் கடன் 
பணி செய்து கிடப்பதே.

   தமிழன்புடன்  உங்கள்  மாலதி .

 

   

Saturday, 25 February 2012

கொலையா கற்பிக்கிறாய் ?



கூட்டுக்குடும்ப வாழ்கை
முறையை  முன்னெடுப்போம் .

முற்றாய்  இன்றையசிக்கலை
இனங்கண்டு  தட்டித்
துரத்துவோம்.

அடிமைமுறைக்  கல்விஇது
அதனால்  ஆளையேகொல்லுது
ஆசிரியையே  வெட்டி  சாய்க்குது .

பாழும் பணத்தின்
ஆசையால் ...
பதவிகளின் தாகத்தால் ...
குடும்ப  உறவகளே
சுமையாய்  மாறுது
பண்பட  வேண்டியவனை
பாடாய் படுத்துத்து .

கல்விக்கூடத்தில்
கத்தியை  பாய்சுது .

பள்ளிப் படிப்பே
சுமையை  தருகுது
சுமையாய் மாறுது.

பதவிகளின்  கனவே
இலக்காய் தொடருது .

அன்பை நாளும்
வளர்த்தோமில்லை.

பண்பைச்  சொல்லி
பழக்கிநோமில்லை .

பணம்தான்  மனிதத்தை
சிதைக்குது ...
அந்த  பணமே
மனிதனைக்  கொல்லுது .

மனிதமே  நீ ...
என்றுதான்  மனிதத்தை
சிந்திப்பாய் .
மனிதனாய்
மாறுவாய் ?