உண்மை எப்போதுமே எளிமையானது கவர்ச்சி இல்லாததது அதனால்தான் அதை நாம் பின்பற்றுவதும் நம்புவதும் சிரமமாக இருக்கிறது.
இராஜஇராஜேஸ்வரி அவர்கள் வழங்கிய விருது

Tuesday, 9 October 2012
Thursday, 20 September 2012
Sunday, 19 August 2012
தமிழனே இப்படித்தானோ
கடவுள் மறுப்பை
கட்டுமிரண்டித்தனாமாய் ...
அறிவியலை புரிந்து கொள்ளாத
கண்மூடித்தனத்தோடு .
எப்போது புரிந்து கொள்வாய்
தமிழனே .
கடவுள் மறுப்பு என்பது
எப்படி... ஏன்...
என அறிவியல்
நுட்பத்தோடு ...
நீ ...
மறுத்தளிக்க
வேண்டும் கடவுள்
இல்லை கடவுள் இல்லை
இல்லவே இல்லை
என்பது எப்படி
அறிவும் அறிவியலும் ஆகும் ?
பெரியார் ஒருவர்
போதுமே
தமிழனை
இழிவு படுத்தியதும்
முடமாக்கியதும் .
பழமை
அறிவியாலை உள்ளடக்கியது
யோகமும்
சாங்கியமும்
உலகாயதமும்
உள்ளடங்கியதுதான்
வள்ளுவரின் திருக்குறள் .
எவனாவது மறுதலிக்க இயலுமா ?
கடவுள் எப்படி
எதற்காக படைக்கப்
பட்டர் என்பதை
அறிவியல் நுட்பத்தோடு
புரிய வைக்க வேண்டாவா ?
சடங்குகளும்
சில அறிவியல் நுட்பம் வாய்ந்தவை
இதை புரிந்து
கொள்ளவில்லை
என்றால் எதையும்
முழுமையாக
புரிந்து கொள்ள இயலாதே .
காட்டு மிராண்டியாய்
இருந்து விடாதே
விழி ...
ஏழு ...
பார் ...
உலகை நோக்கு
வெற்றியை கைது செய் .
அறிவியல் சில சமயம்
ஆன்மீகமாக
தோற்றம் கொண்டு
இருக்கும்
அறிவைதிரட்டி
புரிந்து கொள்ள முயல்
காட்டுமிராண்டியாக
மறுதலித்து
முடங்கிப் போகாதே .
அறிவியலை
ஆன்மீகமென எண்ணி
கோட்டை விட்டு விடுவோம் .
சான்றைத் தேடி
அறிவியலை பரப்புரை
செய் .
சிந்திப்பாய்
தமிழனே .
Monday, 6 August 2012
சாவைத்தழுவா விடியலைத்தேடுகிறேன்
எந்த மை கொண்டு
எழுதப் பட்டதென
புரியவில்லை
அழிய மறுக்கிறது
இதயதிலுன் பெயர் .
கண் மூடித்தனங்கலோடில்லை
கட்டுப் பாடுகளுடன்
சிந்தித்தேன் ...
வளம் கொழிக்காவிட்டாலும்
கேடுகள்
நிகழ வாய்ப்பே
இல்லை .
நமக்கான சிறகுவிரித்தலில் .
உனதான
பாதைகள் என்
வாழ்க்கைக்கு
வலு சேர்க்கிறது .
சிதறிக் கிடக்கும்
உன் சிந்தனைக் களம்
என்னுள் சிலிர்ப்பைத்தருகிறது .
உனதான
வாழ்வியல்
விளக்கங்கள்
என்னை
வசீகரிக்கிறது .
எதிர் நீச்சல்
அல்ல...
இலக்கணமாய்
உன் பதிவுகள் .
உன் ...
சகாப்த்தத்தில்
நானும் சாவைத்தழுவா
விடியலைத் தேடுகிறேன் .
- தமிழன்புடன் மாலதி
Thursday, 19 July 2012
உன் முரட்டுக் கரம் தா
வார்த்தைகளுக்கு
வண்ணம் பூசி
பழக்கமில்லை .
கடலலையாய்
உள்ளம் அலைபாய்கிறது .
என் உறக்கத்தை
உன்நினைவு
கடன்வாங்கிக்
கப்பலை செலுத்துகிறது .
துடுப்பிழந்த
ஓடமாய் ...
ஓய்ந்துபோக இயலாது
வெடித்துக் கதறுகிறேன் .
நீலவானம்
முடியும்வரைத்
தேடுகிறேன்
உன்னினைவுச்
சங்கிலியோடு .
திமிங்கிலங்கள்
அசைபோடுமுன்
அன்பனே - உன்
முரட்டுக் கரம் தா .
Friday, 6 July 2012
மறத்தின் துணைக் கொண்டு அறத்தை வென்றெடுக்க
காகிதபூ அணிவதில்லை நீ
என்றாய் .
காரல் மார்க்ஸ் சே
வியத்தகு தலைவர்என்றாய்.
சாதிகள் அழிய
வேண்டுமெண்றாய் .
சமத்துவாம்
நிலைக்க வேண்டுமென்றாய்.
உலக சண்டைகள்
ஓய வேண்டுமென்றாய்.
அதற்க்கு ...
மறத்தின் துணைக் கொண்டு
அறத்தை வென்றெடுக்க
வேண்டு மென்கிறாய்.
என்றாய் .
காரல் மார்க்ஸ் சே
வியத்தகு தலைவர்என்றாய்.
சாதிகள் அழிய
வேண்டுமெண்றாய் .
சமத்துவாம்
நிலைக்க வேண்டுமென்றாய்.
உலக சண்டைகள்
ஓய வேண்டுமென்றாய்.
அதற்க்கு ...
மறத்தின் துணைக் கொண்டு
அறத்தை வென்றெடுக்க
வேண்டு மென்கிறாய்.
Saturday, 16 June 2012
13 .06 .2006
எல்லோருக்கும்
இயல்பாய் விடிந்தது ...
எனக்குமட்டும்
புதுமையாய் பிறந்தது .
படிக்க வந்தேனா ....
படிப்பிக்க வந்தேனா....
ஆயிரம் ஐயங்கள்முன்னுள்.
நம்மிடையிலான தொடர்புகள் ...
அன்றே தோற்றங்க்கொண்டது.
வழமையான உன் ...
வெளிப்படையான
பேச்சை சுவைப்பவள் நான் .
கேட்டே வைத்தாய் ...
படிக்க வந்தாயா?
படிப்பிக்க வந்தாயா?
என்பதிலே ...
உன்னை மகிழ்வித்தத்து .
விடுமுறை நாளில்
இருப்பை விதவிதாமாய்
காட்டிக் கொண்டோம்.
கண்களில் காதலை
கடன் பெற்றோம் .
இதயத்தில் இடம்வாங்கி
குடியமர்ந்தோம்.
இன்றுவரை...
இணையாத இருப்புப்
பாதையென ....
உன்னினைவோடு ...
தொடர்கிறதென் பயணம்.
Subscribe to:
Posts (Atom)