இராஜஇராஜேஸ்வரி அவர்கள் வழங்கிய விருது

இராஜஇராஜேஸ்வரி  அவர்கள்  வழங்கிய  விருது
Showing posts with label உன் நினைவு தரும் சுகத்தால். Show all posts
Showing posts with label உன் நினைவு தரும் சுகத்தால். Show all posts

Wednesday, 21 November 2012

உன் நினைவு தரும் சுகத்தால்

 உன்  கலப்படம்
இல்லாத சொற்களால்
கவரப்படுகிறேன் .

உன் உயர்ந்த சிந்தனையால்
ஊட்டம் பெறுகிறேன் .

உன்...
தொலைநோக்குத்
திட்டங்களால்
வியந்து போகிறேன் .

உன் மாசற்ற
பார்வையால்
மயங்கிப்போகிறேன் .


உன் நடிப்பற்ற
செயல்களால்
பூரிப்படைகிறேன் .

உன் வசீகரிக்கும்
நடத்தை முறைகளால்
உலகையே  மறந்து
போகிறேன் .

கண்கள் ஓயும்வரை
உன்னைப் பார்த்துச்
சுவைக்கிறேன்  .


உன் நினைவு
தரும்  சுகத்தால்
வாழ்ந்து கொண்டுஇருக்கிறேன் .


 என்றும் தமிழன்புடன்....
         மாலதி.