இராஜஇராஜேஸ்வரி அவர்கள் வழங்கிய விருது

இராஜஇராஜேஸ்வரி  அவர்கள்  வழங்கிய  விருது

Sunday, 19 August 2012

தமிழனே இப்படித்தானோ



கடவுள்  மறுப்பை
கட்டுமிரண்டித்தனாமாய் ...
அறிவியலை  புரிந்து கொள்ளாத
கண்மூடித்தனத்தோடு .

எப்போது புரிந்து கொள்வாய்
தமிழனே .
கடவுள் மறுப்பு என்பது
எப்படி...  ஏன்...
என அறிவியல்
நுட்பத்தோடு ...
நீ ...
மறுத்தளிக்க
வேண்டும்  கடவுள்
இல்லை கடவுள் இல்லை
இல்லவே  இல்லை
என்பது எப்படி
அறிவும்  அறிவியலும் ஆகும் ?

பெரியார்  ஒருவர்
போதுமே
தமிழனை
இழிவு  படுத்தியதும்
முடமாக்கியதும் .

பழமை
அறிவியாலை  உள்ளடக்கியது
யோகமும்
சாங்கியமும்
உலகாயதமும்
உள்ளடங்கியதுதான்
வள்ளுவரின்  திருக்குறள் .
எவனாவது  மறுதலிக்க இயலுமா ?

கடவுள்  எப்படி
எதற்காக படைக்கப்
பட்டர்  என்பதை
அறிவியல்  நுட்பத்தோடு
புரிய  வைக்க வேண்டாவா ?

சடங்குகளும்
சில  அறிவியல் நுட்பம் வாய்ந்தவை
இதை  புரிந்து
கொள்ளவில்லை
என்றால்  எதையும்
முழுமையாக
புரிந்து கொள்ள இயலாதே .

காட்டு  மிராண்டியாய் 
இருந்து விடாதே
விழி ...
ஏழு ...
பார் ...
உலகை  நோக்கு
வெற்றியை  கைது  செய் .

அறிவியல் சில சமயம்
ஆன்மீகமாக
தோற்றம் கொண்டு
இருக்கும்
அறிவைதிரட்டி
புரிந்து கொள்ள முயல்
காட்டுமிராண்டியாக
மறுதலித்து
முடங்கிப் போகாதே .

அறிவியலை
ஆன்மீகமென  எண்ணி
கோட்டை விட்டு விடுவோம் .

சான்றைத்  தேடி
அறிவியலை  பரப்புரை
செய் .

சிந்திப்பாய்
தமிழனே .




Monday, 6 August 2012

சாவைத்தழுவா விடியலைத்தேடுகிறேன்



எந்த மை கொண்டு
எழுதப்  பட்டதென
புரியவில்லை
அழிய மறுக்கிறது
இதயதிலுன் பெயர் .

கண் மூடித்தனங்கலோடில்லை
கட்டுப் பாடுகளுடன்
சிந்தித்தேன் ...
வளம்  கொழிக்காவிட்டாலும்
கேடுகள்
நிகழ  வாய்ப்பே
இல்லை .
நமக்கான சிறகுவிரித்தலில் .

உனதான
பாதைகள்  என்
வாழ்க்கைக்கு
வலு  சேர்க்கிறது .

சிதறிக்  கிடக்கும்
உன் சிந்தனைக்  களம்
என்னுள் சிலிர்ப்பைத்தருகிறது .

உனதான
வாழ்வியல்
விளக்கங்கள்
என்னை
வசீகரிக்கிறது .

எதிர்  நீச்சல்
அல்ல...
இலக்கணமாய்
உன் பதிவுகள் .

உன் ...
சகாப்த்தத்தில்
நானும் சாவைத்தழுவா
விடியலைத்  தேடுகிறேன் .

                 -  தமிழன்புடன்  மாலதி

Thursday, 19 July 2012

உன் முரட்டுக் கரம் தா



வார்த்தைகளுக்கு
வண்ணம் பூசி
பழக்கமில்லை .

கடலலையாய்
உள்ளம்  அலைபாய்கிறது .

என் உறக்கத்தை
உன்நினைவு
கடன்வாங்கிக்
கப்பலை செலுத்துகிறது .

துடுப்பிழந்த
ஓடமாய் ...
ஓய்ந்துபோக  இயலாது
வெடித்துக்  கதறுகிறேன் .

நீலவானம்
முடியும்வரைத்
தேடுகிறேன்
உன்னினைவுச்
சங்கிலியோடு .

திமிங்கிலங்கள்
அசைபோடுமுன்
அன்பனே - உன்
முரட்டுக்  கரம்  தா .




Friday, 6 July 2012

மறத்தின் துணைக் கொண்டு அறத்தை வென்றெடுக்க

காகிதபூ அணிவதில்லை நீ
என்றாய் .

காரல் மார்க்ஸ் சே
வியத்தகு  தலைவர்என்றாய்.

சாதிகள்  அழிய
வேண்டுமெண்றாய் .

சமத்துவாம்
நிலைக்க வேண்டுமென்றாய்.

உலக சண்டைகள்
ஓய வேண்டுமென்றாய்.

அதற்க்கு ...
மறத்தின் துணைக் கொண்டு
அறத்தை வென்றெடுக்க
வேண்டு மென்கிறாய்.

Saturday, 16 June 2012

13 .06 .2006



எல்லோருக்கும்
இயல்பாய்  விடிந்தது ...
எனக்குமட்டும்
புதுமையாய் பிறந்தது .

படிக்க வந்தேனா ....
படிப்பிக்க  வந்தேனா....
ஆயிரம்  ஐயங்கள்முன்னுள்.

நம்மிடையிலான  தொடர்புகள் ...
அன்றே  தோற்றங்க்கொண்டது.

வழமையான உன் ...
வெளிப்படையான
பேச்சை  சுவைப்பவள்  நான் .

கேட்டே வைத்தாய் ...
படிக்க வந்தாயா?
படிப்பிக்க  வந்தாயா?

என்பதிலே ...
உன்னை  மகிழ்வித்தத்து .

விடுமுறை  நாளில்
இருப்பை  விதவிதாமாய்
காட்டிக் கொண்டோம்.

கண்களில் காதலை
கடன் பெற்றோம் .

இதயத்தில் இடம்வாங்கி
குடியமர்ந்தோம்.

இன்றுவரை...
இணையாத  இருப்புப்
பாதையென ....

உன்னினைவோடு ...
தொடர்கிறதென்  பயணம்.

Monday, 11 June 2012

கலப்புத் திருமணத்தை எதிர்ப்போம் ...



பன்றிகளுக்கும்
நாய்களுக்கும் ....
கழுதைகளுக்கும் ....
குதிரைகளுக்கும் ....
கோட்டான்களுக்கும் ...
மாடுகளுக்கும் ...
மனிதர்களுக்கும் ...
இடையிலான கலப்புத்
திருமணத்தை
தடுத்து  நிறுத்துவோம் .

இந்த  முறைமீறிய
திருமணம்  இங்கு
தேவையில்லை ...

தூய  மனிதத்திற்க்குள்ளே...
சமயங்க லேது ...
சாதி  தானேது ....
ஏற்றத்  தாழ்வுதான்
எது ?

Sunday, 3 June 2012

ஐந்தாம் பொருத்தம்

ஐந்தாம் பொருத்தம்

எல்லோரும்  ஐந்தாம்
பொருத்தத்தை  சோதித்துவிட
ஆளாய் பறக்கும்
போது  அதைத் 
தட்டிக்கழித்தவன்  நீ .

நம்  இல்லறம்
நல்லற மாவதற்கான
ஒத்திகையை  நாளும்
உள்ளத்தில்
அரங்கேற்றம் 
செய்கின்றவன்  நீ.

வாழ்க்கைக்கான
கருப்பொருளை
தேனீக்கள்  போல
சேமிகிறவன்  நீ .

என் காதலும்  நீ .

காவிய
நாயகனும்  நீ .


 
ஐந்தாம் பொருத்தம்  யோனி பொருத்தம்  என்பது  தெரியாதா  என்ன  உங்களுக்கு ...