இராஜஇராஜேஸ்வரி அவர்கள் வழங்கிய விருது

இராஜஇராஜேஸ்வரி  அவர்கள்  வழங்கிய  விருது

Thursday, 24 January 2013

இலக்கணத்தைப் படைப்போம் வா.

வீசுகின்ற   தென்றலும் நீ
பேசுகின்ற  மொழியும் நீ
சுவாசிக்கின்ற காற்றும் நீ
கற்கின்ற  பாடம் நீ.

அன்பையே உன்னுள்ளத்தில்
காட்டு  கின்றாய்
அரவணைத்து  தாயையப்போல்
தேற்று  கின்றாய் .

என் கண்ணீருக்கு
விடைக்கொடுக்க  நினைக்கின்றாய்.
காலம் போல்கடமையை
நீ  செய்கின்றாய்.

கள்ள  மில்லா
உள்ளத்தைக்  காட்டுகிறாய்.
கவிஎழுத  ஒரு
மொழியை  வழங்குகிறாய்.

பால் நிலவே 
பருவத்தின் செழிப்பே ....
உன்  விழிஎழுதும்
பா  வினங்கள்கோடி .

நம்  இலக்கே
இலக்கணமாய்  வாழ்வதுதான் .
என்றாலும்  புதிய
இலக்கணத்தைப்  படைப்போம்  வா.

Sunday, 9 December 2012

என் காதலுக்கு பச்சைக் கொடிகாட்டு .

உன்கண்களை ...
நேரடியாக சந்திக்கும்
துணிவு எனக்கில்லை .

காதலில்  வீழ்ந்து
விடக்கூடாது என்பதான
என் எண்ணம்
சிதைந்து  கொண்டே
வருகிறது .

கருக்கொண்ட  மேகம்
போல்... என்கண்கள்
காதலை  காட்டிக்
கொடுத்துவிடுமோ
என  அச்சப்படுகிறேன் .

என் கடுமையான
பணிச்சுமையின்
ஊடாகவும் உன்னை
நினைக்காமல்
இருக்கமுடியவில்லை .

நாளும் என்னுள்ளம்
உன்னைவிட்டு
வெகுதொலைவு
வந்துவிட்டதாய்
குமுறுகிறது .

அப்போதுதான் ...நீ ...

என்னுள் குடிகொண்டு
விட்டதை
நான் அறிந்து கொண்டேன் .

நம் வாழ்வில்
மலரைவிட  மென்மையாகவே
உன்னுடனான  தொடர்புகள்
இருக்கும் .

உன் வெற்றியின்
பாதை  நோக்கியே
என்னுள்ளம்
இனி  சிந்திக்கும் .

உனது ...
வெற்றியின்  உச்சத்திற்காய்
ஏணிப் படிகாளாய் ...
என்னுடலும்  உழைக்கும் .

உனதான ...
வலிகளை  இனி
என்னிடம்  சேர்த்துவிடு
இன்பங்களை  மட்டுமே
அணிந்துகொள் .

இப்போதெல்லாம் ...
உன்நினைவு  தரும்
சுகத்திற்காகவே  நான்
தனிமையை
விரும்புகிறேன்.

இரும்பு  இதயமா
உனக்கு ? என்
காதலை  ஏற்ப்பதில்
என்னதயக்கம் .

நம்பிக்கை ...
துரோகம்
இழைத்துவிட்டதாய்
இந்த  சமூகம்
உன்னை குற்றம் சாட்டும்
என  அச்சப்படலாம் .

காந்த  விசை
போன்றதான
என்  காதலுக்கு
பச்சைக்  கொடிகாட்டு . 

     இந்த  கவிதை கூட ஒரு விதத்தில்  நம்பிக்கை  துரோகம்  இழைத்து  விட்டதுதான் . காரணம்  இது நமது கவிதை  இல்லை . நம்பிக்கையோடு  படிக்க  கொடுத்ததை  பதிவேற்றம்  செய்துவிட்டேன் .

பொறுத்துக்  கொள்வீர்கள்
என்ற  நம்பிக்கையுடன் ...
மாலதி .

Thursday, 6 December 2012

உடலும் உள்ளமும் உறுதிபெற ...

ஆதவக்குளியல்  ஒரு
சுகம் தான் .

சுற்றும் நிலவும்
இனிமைதான் .

இயற்க்கை மலைகள் ...

இனிமையாய்
கொட்டும்  அருவி ...

பற்றிப்படர்ந்திரும்
கொடிகள் ...

பார்க்கத் தூண்டும்
மலர்கள்...

விண்ணைத் தொடும்
 மரங்கள் ...

பச்சைவண்ண
புல்வெளிகள் ....

கண்ணைக் கவரும்
பனி தூவல் ....

பகலவன்
உதிக்கும் காலையும்....

கொட்டித்தீர்க்கும்
மழையும்  தான் ...

இனிமையாய் தொட்டுச்
செல்லும் தென்றலும்தான் ...

இவைகள்  ....
இயற்க்கைவரைந்த
காவியங்கள்
கனவுகள்  வளர்க்கும்
சூழல்கள் ....

உடலும் உள்ளமும்
உறுதிபெற
இவைகள்  வேண்டும்
தலைப்பைச் சேருங்கள்


நம்  வாழ்வில் .



Saturday, 1 December 2012

விதை தூவு .... விருட்சமாக தொற்றங் கொள் .

 கல் நெஞ்சக்காரனே ...
அத்தனை  இரும்பு
இதயமா உனக்கு?

எத்தனை  தடவை
கேட்டேன்...
இதயம் திறந்து
காட்டினேன்
புரியவில்லையா ?
நடிக்கிறாயா?

என்
கனவுக் கோட்டைகளை
சிதைக்க  முயலுகிறாய்.

பெண்மையின்

மென்மையையும்
அதன் மௌனத்தின்
வலியையும்
புரிந்து கொள்ளாதவன்  நீ.

வலிய வந்து
கேட்டதால்
வலிமையற்றவள்  அல்ல
நான் .

உன் ....
கோட்டைக்குள்
குடிபுக  தகுதியற்றவளும்
அல்ல நான் .

விழிமூடி
மௌவுனிப்பதை
உடைத்தெறி ....
கண்  திறந்து
பார் ....
உனக்கான
வசந்த
வாசல் திறந்து
காத்திருக்கிறது .

விதை  தூவு ....
விருட்சமாக
தொற்றங் கொள் .

அன்புடன் ....
உன் மாலதி

Wednesday, 21 November 2012

உன் நினைவு தரும் சுகத்தால்

 உன்  கலப்படம்
இல்லாத சொற்களால்
கவரப்படுகிறேன் .

உன் உயர்ந்த சிந்தனையால்
ஊட்டம் பெறுகிறேன் .

உன்...
தொலைநோக்குத்
திட்டங்களால்
வியந்து போகிறேன் .

உன் மாசற்ற
பார்வையால்
மயங்கிப்போகிறேன் .


உன் நடிப்பற்ற
செயல்களால்
பூரிப்படைகிறேன் .

உன் வசீகரிக்கும்
நடத்தை முறைகளால்
உலகையே  மறந்து
போகிறேன் .

கண்கள் ஓயும்வரை
உன்னைப் பார்த்துச்
சுவைக்கிறேன்  .


உன் நினைவு
தரும்  சுகத்தால்
வாழ்ந்து கொண்டுஇருக்கிறேன் .


 என்றும் தமிழன்புடன்....
         மாலதி. 

Tuesday, 6 November 2012

அன்பனே ... விரைந்து மங்கள நாண் கொண்டுவா .

என் உள்ளத்திலுள்ள
வேட்கைபோலவே
உன்வரவின்
நாள் நெருங்குவதாய்
ஏதோ  உள்ளுணர்வு
சொல்லுகிறது .

உன் எக்குருதியான
தோள்களைத்
தழுவிட
உடல்  ஏங்குகிறது .

காவியங்களை
மிஞ்சும் காதல்
மொழிகளை
பேசிட  உதடுகள்
துடிக்கிறது .

ஆசைதீர
உன்  எழிலை
பருகிட  கண்கள்
ஆவல் கொள்ளுகிறது

உன் ...
நெருக்கத்தை
சுவைத்திட
என்மேனி
பசலை  பூக்கிறது.

இருப்பினும்
பண்பாடு என்னைத்
தடுக்கிறது .

அன்பனே ...
விரைந்து
மங்கள  நாண்
கொண்டுவா .

Tuesday, 9 October 2012

எனக்குப் பொருத்தமானவனும் நீ.




ஆண் ,பெண்  இனபேதம்
பார்க்காதவன்  நீ.

இயற்கையின்  படைப்பில்
அனைவரும் சமம்
என்கிறவன் நீ.

சாபங்களும்
சாபவிமோசனங்களும்
மனிதத்தை
முடமாக்குவன
என்கிறவன்  நீ.

கருத்தியலை
அழித்தொழித்து
பொருளியலை
முன்னெடுக்கிரவன்  நீ .

போர்க்குணம்

நிறைந்தவன்  நீ.

எனக்குப்
பொருத்தமானவனும் நீ.