இராஜஇராஜேஸ்வரி அவர்கள் வழங்கிய விருது

இராஜஇராஜேஸ்வரி  அவர்கள்  வழங்கிய  விருது

Tuesday, 26 April 2011

துள்ளித்திரிந்த காலம்



பள்ளிப்படிப்பில்
தேறியதும்
படிக்கவைப்பதா
வேண்டாமா?

ஆயிரம்
போராட்டங்கள்
எனக்கல்ல
என்...
பெற்றோருக்கு

அவர்களுக்கு கிடைத்த
கற்பிதங்களும்
இளைய  தலைமுறை
 மீதான பார்வையும்
வெறுப்பையே
தந்திருந்தன .

என்
தந்தையின்
கணோட்டம் வேறுபட்டது .

எப்போதும்
பெண்கள் வேலைக்கு
போவதை விரும்புவதில்லை .

பெண்கள்
அடிமையாக்கவேண்டும்
என்பதல்ல ...
பரபரப்பான
வாழ்க்கைமுறையில் ...

இருவரும் வேலைக்கு
சென்று
உணர்ந்து  வாழயியலாமல்   ....
சிக்கிதவிப்பதாய் ...

தேவையை
குறைத்து கொண்டு
முறையாக வீட்டையும்
குழந்தைகளையும் ...
மகிழ்வான 
வாழ்க்கையையையும்

எல்லாவற்றையும்
முறையாக  உணர்ந்து
வாழவேண்டும் ...
ஒவ் ஒரு   கவளமும்
உண்ணும்போது
சுவையுணர்ந்து...


காற்று ...
மண் ..
விண்...
எல்லாவற்றையும் ...
அணு அணுவாய்
சுவைத்து ...
வாழவேண்டும் ...
என்பார்  எதுசரி ?



      

Tuesday, 19 April 2011

விழிப்போடிருந்தால் விடியல்




மேட்டடிமைதனங்களும்
கண்மூடிதனங்களும்
தொடரத்தான் செய்கியது .

சிறிய வலிகளுக்கே
வற்றாத நீருற்றாய்
வடிக்கிறது கண்கள் .

போலித்தனங்களையும்
மூடப்பழக்க வழக்கங்களையும்
விட்டுவிலக மறுக்கிறது .

வீணர்களின் வெட்டி
பேச்சுகளுக்கு
அஞ்சி முக்காடிட்டு
கொள்ளுகிறது உள்ளம்.

போலித்தனமாய்
விடுதலைபெற
விழைகிறது
தேவைகள் .

அதோ  சாதியென்ற
மாயவலையையும்
கண்மூடித்தனமான
கடவுட் கோட்பாடுகளையும்
உடைத்தெறியும்
ஆரவாரம்
கேட்கும் போது
அறைந்து சர்த்திக்கொள்ளுகிறது
அறிவுக் கதவங்கள் .

விடியல்கள்
தன்தொன்றித்தனமாய்
விடிந்து விடுவதில்லை .

சிற்றுளிகளின்
முத்தங்களை
உள்வாங்காத
கற்கள் சிற்ப்பங்கள் ஆவதில்லை .

இனிய ...
நிலவின்
பயணத்தில் இருளும் பகலும்
இயற்கையின்
விளையாட்டே .

காலங்களின் சுழற்சியில்
விழிப்போடிருந்தால்
மட்டுமே  விடியல் .

Thursday, 14 April 2011

வாலிபதேசத்தின்  தூது .

விண்ணப்பங்களின்
எண்ணிக்கை
மிகுதிதான் .

மலைத்துப்போகிறேன்
ஒவ்வொன்றும்
ஒருவிதத்தில்
சிறந்தது .

பொது வழியில்
தொடர்ந்த
என்பயணம்
இப்போது
இராஜ பாட்டையில்.

விளக்கடியில் 
இருந்து
வெண்ணிலவின்
துணைத்தேடி .

கண்களுக்கெட்டிய  தூரம்வரை
பரவெளியில்
வெற்றிடமே

கண்களில்
தண்னொளியும்

காதுகளில்
தேனிசையும் .

என்மேனியில்
தென்றலும் .

காற்றைகிழித்துக்கொண்டு
விண்ணில்
வெகுதொலைவில்
பயணிக்கிறேன்

Friday, 8 April 2011

இப்போதெல்லாம் ...


எனக்கு நானே
பேசிக்கொள்கிறேனாம்

அம்மா  சொன்னார்
தேழிகள் சொன்னார்கள் .

எனக்குள் எந்த
மாற்றமும்
நிகழ்ந்திருக்க வில்லை .

கனவுகளின்
பிடியில் சிக்கியிருப்பது
உண்மைதான் .

அந்திசாயும்
வேளை
அல்லிபூக்களின்
மகரந்தம்
உங்களின்
நாசியை துளைக்கலாம் .

எனது
கோட்டைக்
கதவுகள்
யாருடைய
செங்கோளுக்கோ
காத்திருக்கிறது.

அரசகுமரனே
உன்புரவியை
விரைவாக
செலுத்து .

என் மேனியின்
நிறம் மாறும் முன்.