இராஜஇராஜேஸ்வரி அவர்கள் வழங்கிய விருது

இராஜஇராஜேஸ்வரி  அவர்கள்  வழங்கிய  விருது

Saturday, 24 March 2012

இன்றைய உலகம் ....

விழி  இழந்த ஒருவனுக்கு 
இருளும்  ஒன்றுதான் 
ஆயிரம்  வண்ண 
விளக்குகளும்  ஒன்றுதான்.


இன்று ...
அறிவைச்  சொன்னாலும் 
ஏற்க்காமைக்கு  காரணமும் 
இதுதான்.

எளிமையான 
உணவுகளையே  உண்டு 
பழகியவனுக்கு 
சற்று  கடினமான 
உணவுகள்  செரிக்கவா 
செய்யும்  கழிச்சல்தான் 
காணும் .

அறிவை ...
கற்ப்பிக் கிறவர்களும் 
கற்றுக்    கொள்கிறவர்களும் 
மிகவும்  குறைவே .

முடைநாற்றம்  வீசும் 
கண்மூடித்  தனங்கள் 
காட்டுத்தீயாய்
பரவி  அழிக்கும் .


அறிவோ  நொண்டி 
வண்டியில்  பயணிக்கும் 
உலகிது .


வழிகாட்ட  வந்தவரையே 
வெட்டிசாய்க்கும்
வேடிக்கையும்  பார்க்கும்.

தெளிந்த  அறிவு 
முதற்க்கண்  பண்படவேண்டும்.
பின்னர் 
பண்படுத்தத்   தொடங்க 
வேண்டும்.

பாலை 
நிலத்தையும் 
சோலையாக்கிக் காட்டலாம் 
என்பதே  என்எண்ணம் .

அறிவைப்  புகட்டுவதும் 
புகட்ட  எண்ணுவதும் 
இத்தன்மைதே .
           
                இன்றைய நிலையில்  நேர்மையாக  இருப்பவர்கள்  அரிதானவர்கள் என தங்களுக்குள்ளாகவே  கற்பிதம் செய்து கொள்ளுகிறார்கள்  நான்உண்மையானவன்  நேர்மையானவன்  கதாநாயகத்( hero )தன்மை  கொண்டவனாக  நான் உண்மையுடன் இருப்பேன்   என ஏன்நினைப்பதில்லை  அப்படி நேர்மையனவனவனைப்  பற்றி  எழுதினால்  வனத்தில் இருந்து வந்தவனைபோல கருதுகிறார்கள்  நானும் அப்படித்தான் என  ஏன்  சொல்ல இயலுவதில்லை அருள்கூர்ந்து பதில்  அளிப்பீராக .
                                                                                  தமிழன்புடன்  மாலதி .  

Saturday, 17 March 2012

நீங்கள் யார் ?


தீமைகளை எதிர்த்தான 
நல்லவர்களின்  கைக்கோர்த்தலும்
ஒற்றுமையின்மையும்  தான் 
அறம்(நீதி ) அழிவதற்கு 
மூகமையான காரணம் .

எய்ச்சுகிறவன் இருவர் 
பாதிக்கப் படுவது  
பலர்  கோழைத்தனம் 
தானே  எதிர்க்கமை?

தீயவர்களின் 
தீமையால் அல்ல 
நல்லவர்களின் 
கோழைத்தனத்தால்  தானே 
அறம்  விலைபேசப்
படுகிறது ?

நல்லவனாக.....
கோழையாக ...

வாழ்வதைவிட  
வீரனாக  வாழ்வதே 
நாட்டுக்கும்  நல்லது 
வீட்டுக்கும்  ஏற்றது .

தீயதை ஒன்றுகூடி 
எதிர்ப்போம் 
நல்லதை  பாராட்டி
மகிழ்வோம் .

Saturday, 10 March 2012

உன்னைத் தொடர்வதேன்?

எவைஎல்லாம்நோவைத்தருமோ 
அவற்றை  எல்லாம் 
தொடுவதுமில்லை 
தொடர்வதுமில்லை  நீ .

எதுஎல்லாம்
இந்த  குமுகத்தை 
சீரழிக்குமோ 
அவற்றை எல்லாம்  
எதிர்ப்பவன்  நீ .

தன்னலத்தைப் 
புறந்தள்ளி 
பொதுநலத்தை 
முன்னெடுக்கிறவன் நீ.

முறையான  கல்விதான் 
கண்ணீரை விரட்டும் 
"மா" மருந்து என்கிறாய் .

அதனால்தான் -உன் 
பாதம் 
காட்டும் பாதையை 
தொடர்கிறேன்  அன்பனே .  

Saturday, 3 March 2012

நான் யார் ?இங்கு ...
குறிப்பாக தமிழகத்தில்
நடக்கும்  தவறுகளை
சுட்டிக்காட்டுகிறேன்.

இனவாதம்
பேசவில்லை
தமிழர் நலன்
பேசுகிறேன்.

தமிழரின்  கலைகளை
போற்றுகிறேன் ...
பின்பற்றுகிறேன் ...
வணங்குகிறேன் ...
அறிமுகப் படுத்துகிறேன்
தொடரக்  கோருகிறேன் .

அரசாக  இருந்தாலும்
இல்லாத ...
ஆண்டவனாக இருந்தாலும்
செய்வது  பிழைஎனத்
தெரிந்தால்
குன்றின் மீதேறி
குற்றம்  சாட்டுகிக்றேன்.

என்  அகவையையொத்த
இளைய  சமூகத்திற்கு
நல்வழிக்  காட்டுகிறேன்.

ஆண்தான்  அரசியலும்
வீரமும்  பேசவேண்டுமா
என்ன?

பாண்டிய மன்னன்
அவைக்களத்தில்  


தேராமன்னா !
செப்புவது  ஒன்றுடையேன்
என்றாளே என்  தமிழன்னை 
கண்ணகி  பெண்தானே ? 


போற்றுவோர்  போற்றட்டும் 
புழுதிவாரி  தூற்றுவோர் 
தூற்றட்டும்.


என் கடன் 
பணி செய்து கிடப்பதே.

   தமிழன்புடன்  உங்கள்  மாலதி .