இராஜஇராஜேஸ்வரி அவர்கள் வழங்கிய விருது

இராஜஇராஜேஸ்வரி  அவர்கள்  வழங்கிய  விருது

Wednesday, 21 November 2012

உன் நினைவு தரும் சுகத்தால்

 உன்  கலப்படம்
இல்லாத சொற்களால்
கவரப்படுகிறேன் .

உன் உயர்ந்த சிந்தனையால்
ஊட்டம் பெறுகிறேன் .

உன்...
தொலைநோக்குத்
திட்டங்களால்
வியந்து போகிறேன் .

உன் மாசற்ற
பார்வையால்
மயங்கிப்போகிறேன் .


உன் நடிப்பற்ற
செயல்களால்
பூரிப்படைகிறேன் .

உன் வசீகரிக்கும்
நடத்தை முறைகளால்
உலகையே  மறந்து
போகிறேன் .

கண்கள் ஓயும்வரை
உன்னைப் பார்த்துச்
சுவைக்கிறேன்  .


உன் நினைவு
தரும்  சுகத்தால்
வாழ்ந்து கொண்டுஇருக்கிறேன் .


 என்றும் தமிழன்புடன்....
         மாலதி. 

Tuesday, 6 November 2012

அன்பனே ... விரைந்து மங்கள நாண் கொண்டுவா .

என் உள்ளத்திலுள்ள
வேட்கைபோலவே
உன்வரவின்
நாள் நெருங்குவதாய்
ஏதோ  உள்ளுணர்வு
சொல்லுகிறது .

உன் எக்குருதியான
தோள்களைத்
தழுவிட
உடல்  ஏங்குகிறது .

காவியங்களை
மிஞ்சும் காதல்
மொழிகளை
பேசிட  உதடுகள்
துடிக்கிறது .

ஆசைதீர
உன்  எழிலை
பருகிட  கண்கள்
ஆவல் கொள்ளுகிறது

உன் ...
நெருக்கத்தை
சுவைத்திட
என்மேனி
பசலை  பூக்கிறது.

இருப்பினும்
பண்பாடு என்னைத்
தடுக்கிறது .

அன்பனே ...
விரைந்து
மங்கள  நாண்
கொண்டுவா .