இராஜஇராஜேஸ்வரி அவர்கள் வழங்கிய விருது

இராஜஇராஜேஸ்வரி  அவர்கள்  வழங்கிய  விருது

Sunday, 14 July 2013

பித்தம் தெளிந்தேன் ....      வணக்கம் . போராட்டம்தான்  ஒருமனிதனை  செழுமைப்படுத்துகிறது .அல்லது அவனை குப்புறத்  தள்ளி கேவலப்படுத்துகிறது . என்பதான  எனது எண்ணம்  உண்மையாகிப் போனது . சறுக்குமரத்தில் முறையில்லாமல்  ஏறி  வழிதெரியாமல்  விழுந்து  கிடந்தேன் எந்த புரட்ச்சி யாளர்களும்  என்னைக் காக்க  வரவேயில்லை .      இந்த சமூகம் சுயநலம் உள்ளது அதில்  முதலில்  தன்னை மட்டுமே  உயர்த்திக் கொள்ள  வேண்டும்  கடினமாக உண்மையாக  உழைக்க வேண்டும்

       பொருள்  தேடவேண்டும் . அருள் இல்லாதவர்களுக்கு மேலுலகத்தில் இடமில்லை பொருள்  இல்லாதவர்க்கு இந்த உலகத்தில் இடமில்லை என்பதை சற்று காலம்  கடந்து  உணர்ந்து கொண்டேன் .    கொள்கைகள் கோட்பாடுகள்  எதுவுமே  எனது எனது சோகத்தையும்  துன்பத்தையும்  தீர்க்க வரவேயில்லை . எந்த ஆபத்தாண்டவனும் என்னை தூக்கி நிறுத்த வரவேயில்லை . வழமைபோல  நானே  விழுந்தேன்  நானே எழ முயல் கிறேன் . இந்த போராட்டத்தில்  கோழைகள்  எடுக்கும் கீழான முடிவு கூட எடுக்கத் துணிந்தேன்  அனால் தற்கொலை செய்துகொள்ளவில்லை செய்து கொள்ளவும் மாட்டேன் அனால்  எனது முந்தய முடிவில் எந்த  மாற்றமும் இல்லை . என்னமுடிவு என்பதுதானே உங்கள் வினா? காலம் வரட்டும் நானே சொல்லுகிறேன்.

       காதலில், அல்லது துன்பத்தில்  துடிப்பவர்கள்  ஒன்றை முழுமையாக  அறிந்து கொள்ள வேண்டும்  அதாவது  உலகத்தோடு  ஓட்ட ஒழுகல்  என்பது வள்ளுவம்  இந்தபெரும்பான்மை  உலகம் எங்கு ஓடுகிறதோ  அங்கே  நாமும் ஓடவேண்டும் . தனித்து நின்றால்  பித்து பிடித்தவன் ஆகிப்போவோம்  எந்த  துன்பத்திற்கும் காரணம்  என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும்  நேற்று என்பது உடைந்துபோன பானை ... நாளை என்பது மதில் மேல் உள்ள பூனை ... இன்று என்பது  கையில் உள்ள வீணை ... ஆம் நேற்றைய  நிகழ்வை  அசைபோட்டால்  இன்றும் நாளையும் நமது வாழ்வில் காணமல் போய்விடும்  நாளைய தினத்தை  எண்ணி கவலைப்பட்டால்  இன்றைய  கையில் உள்ள வீணையின்  நாதம் நமக்கு மகிழ்வைத்தராது  நாம் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றே  கடந்த காலங்களையும்  எதிர்கலாத்தையும்  சிந்திப்பதால்  ஒன்றும்  போவது இல்லை.       இன்றைய நாளை முறையாக திட்டமிட்டு  செலவிட்டால்  எதிர்காலம்  நமக்கு ஒளிமிக்கதாக மாறிப்போகும் . என்பது எனக்கு சற்று காலம் கடந்து புரிய வந்தது . இன்றைய  நாளில் ஆன்மீகத்தை உள்ளடக்கிய  தேர்ந்த ஆசான்கள் இளைஞ்சர்களுக்கு  தேவையாக  இருக்கிறது .
அடுத்த பதிவில்  பேசுவேன் ....


அன்புடன்  மாலதி .