இராஜஇராஜேஸ்வரி அவர்கள் வழங்கிய விருது

இராஜஇராஜேஸ்வரி  அவர்கள்  வழங்கிய  விருது

Thursday, 31 March 2011

தேவை ஒரு காதலன்

தனிமனித வாழ்வில்
நேர்மை .
எல்லோரிடத்திலும்
வேறுபாடு  இல்லது
பழகுதல்.
என் உணர்வுகளுக்கு
மதிப்பளிக்கும்
உளப்பாங்கு .
கவிதை எழுத
தெரியாவிட்டாலும்
அதை சுவைக்கும்
பாங்கு.
அழகில்லாவிட்டாலும்
அறிவை வெளிப்படுத்தும்
திறன்.
சரி தவறு
என்று
தேர்ந்தறிதல்.
விட்டுகொடுக்கும்
உளபக்குவம்.
தீயபழக்கங்கள்
இல்லாதிருத்தல் .
என் மண்
என் மொழி
என் பண்பாடு
என் கலைகள்
ஆகியவற்றில்
அளவற்ற்ற காதல்.
குறிப்பாக
என்னைவிட
ஐந்தாண்டு கள்
மூத்தவராக
இருத்தல்.
இப்படிஒருவர் தான்
கிடைக்காமலா
போவார்?
       என்போன்ற  தோழியருக்கு  ஒரு கண்ணோட்டத்தை  தர  இப்படி  ஒரு இடுகை .

Monday, 28 March 2011

நான் என்னத்த சொல்ல ...

நான் என்னத்த சொல்ல ...

பொண்ணுக்கே  உரிய
பூத்து குலுங்கும்
கனவுகள்

மனதில் காதல்
இல்லாததால்
கவலை இல்லை .

கண்களில் ஏக்கம்
இல்லதாததல்
என் கவிதையிலும்
உயிர்ப்பில்லை .

புதிய
நட்புவட்டத்தை
நாடி  விண்ணப்பிக்கிறேன்
உங்களில்
ஒருத்தியாய்
கால்தடம் பதிக்கிறேன் .

என்னையும்
ஏற்பீர் என்ற
நம்பிக்கயுடன்
வணங்கி  வரவேற்கிறேன்.

உங்கள் அன்புள்ள.
மாலதி