இராஜஇராஜேஸ்வரி அவர்கள் வழங்கிய விருது

இராஜஇராஜேஸ்வரி  அவர்கள்  வழங்கிய  விருது

Saturday, 25 June 2011

இன்முகம் காட்டி எப்படி பேசுகிறாய் அன்பனே ?

 
உன் ...
நினைவுகள்
என்னைத்தாக்கும்
போதெல்லாம்
கோடைமழைஎன
கொட்டித்தீர்க்கிறது
கண்கள் .

ஆண்மை மீறாத ஆண்மை
அமைதி
வியக்கவைக்கும்
 பொறுமை  எதற்கும்
கலங்காத  நெஞ்சம் .

இந்த ...
சமூகத்தைப்பற்றிய
சரியான புரிதல் .

வறுமை உன்னை
ஆட்டங்கான
வைக்க நேர்ந்தபோது
ஆண்மைதவறாமல்
காத்தமை .

உன் ...
இலையுதிர்காலத்து
நாட் குறிப்பேட்டை (டைரி )
காணநேர்ந்தபோது
வாய்விட்டே
கதறி அழுதே அல்லாவா
 போனேன் .

எப்படி ...
எப்படி ....
உன்னிதயத்தை
இரும்பாக்கிக்கொண்டு
அத்தனையும்
 பதிவு செய்தாய் .

இன்முகம்
காட்டி  எப்படி

எல்லோரிடமும் 
பேசுகிறாய் அன்பனே? 

     இன்றைய சூழலில்  காதல் வெறுமனே  உடலை  கண்டு  காதல் என  கற்பிதம் செய்துகொள்ளுகிறது. காதல் உடல்  அல்ல உள்ளம் சார்ந்தது என்பதையும்  காதல் பற்றிய முழுமையான புரிதலை உண்டக்கவுமே  இந்த   ஆக்கங்கள்  எழுத்து   பிழை  இருப்பின் சுட்டிகாட்டும்  அன்பர்களுக்கு   எமது  உளம் கனிந்த  பாராட்டுகள்  சொற்பிழை  இருப்பின் சுட்டிகாட்டுக என்றும்  நன்றியுடன்    மாலதி .


Saturday, 18 June 2011

கனவுலகில் வாழ்பவள் இல்லைஆயிரம் மலர்கள்
பூத்துக் குலுங்கும்
கல்லூரி தோட்டத்தில்
பூத்த புதுமை
மலரென்றாய்.

காதலில் தோற்று
கல்லறைக்கு
அனுப்புவோருக்கு
நடுவே ...
கலங்கரை
விளக்காய்  நின்றாய்
என்றாய் .

சட்டைப்பையின்
கனத்தை
கணக்கெடுக்காமல்
உண்மைக்காதலை
வென்று எடுத்தேன்
என்றாய்.

உண்மையை ...
எளிமையை கண்டு
இகழ் கிறவர்களுக்கு
நடுவே வலிமை
நிறைந்த 
வாழ்க்கைப்பாதையை
தேர்வு  செய்தேன் என்றாய்.

மனிதத்தை
மதிக்கத்தெரிந்ததால்
என்னை முழுமையாக
தத்தெடுத்துக்  கொண்டேன்  என்றாய்.

உயிரே ...
நான் கணவுலகில்
வாழ்கின்றவள்  இல்லை .

உன் ...
கண்ணெதிரே
வாழ எண்ணுகின்
அதனால்தான் அன்பே .

       மாறுபட்ட  கோணத்தில்  இந்த  இடுகை   பதிவு  செய்ய எண்ணினேன்  மீண்டும்  இந்த இடுகையும்  காதலை  மையப்படுத்தியே  அமைந்து விட்டது . 

Sunday, 12 June 2011

நீ என்னுள்ளத்தை ஆக்கிரமித்து கொண்டதால் ...

உன்....
தேடலின்
தகுதிகாண் பருவத்தில்
நான்வெற்றி
பெற்றதாய் சொன்னாய் .

என்னை...
வேண்டுமென்றே
சீண்டிப்பார்த்து
என்சகிப்புத்தன்மையை
அளவிட்டதாக கூறினாய்.

இன்பத்திலும்
துன்பத்திலும்
எனது உளவியலை
படம்பிடித்ததாக
பகிர்ந்துகொண்டாய்.

மற்றவர்களுடனான
தொடர்பில்
நான் தேர்ச்சிபெற்றதாக
அறிவித்தாய்.

முதியோர்களுக்கு
அக மகிழ்வுடன்
நான் உதவியதை
பரவசத்துடன்
பட்டியலிட்டாய்  .

என்னவனே ...
இவை எல்லாம்
நீ ...
என்னுள்ளத்தை
ஆக்ரமித்துக்
கொண்டதால்
அல்லவா நிகழ்ந்தது ?

Sunday, 5 June 2011

வேள்விச் சாலையாக்கிக் கொள்ளட்டும்

உன்னைப்பற்றிய 
எந்த குறிப்புமில்லை
என்னிடம் .

ஆனாலும் ...
என்னிதயத்தை -நீ
நிறைத்துக் கொண்டாய்.

நான் ...
வரைந்து வைத்துள்ள
வரைபடத்தை -நீ
ஒத்திருப்பதாக
காட்டுகிறது  உன்
எழுத்து.

நீ...
ஆக்கிரமித்துக்கொள்ள
எண்ணுவது
என்னுடலையா
என்னுள்ளத்தையா
என்பதை
வைத்தே என்
தலைஎழுத்து
நிர்ணயிக்கப் படும்
என்பதை நானறிவேன்.

நீ ...
என் கற்ப்பை
காவு கேட்கும்
கள்வனல்ல.

நிறம் மாறும்
பச்சோந்தியல்ல
என்பதை
பறைசாற்றுகிறது
உன் பால்முகம்  .

நீ ...
பாலபாடம்
பயின்ற
பல்கலைகழகம்
எது என்பதை 
அடையலாம்
காட்டு.

இந்த ...
 பாழாய்ப்போன 

முடைநாற்றம்
வீசும் போலிச்மூகம்
அதை
வேதம் பயிலும்
வேள்விச் 
சாலையாக்கிக் கொள்ளட்டும்.