இராஜஇராஜேஸ்வரி அவர்கள் வழங்கிய விருது

இராஜஇராஜேஸ்வரி  அவர்கள்  வழங்கிய  விருது

Wednesday, 23 May 2012

ஆனந்தக் காதலில் ... மூழ்கித் திளைக்கிறேன்.



நமக்கான  காதல்
தோற்றுவாய் ...
கரும்புத்  தோட்டம் ...
கால்வாய்.....
கோவில் ... குளம் ...
என ஊர்புற  காதலாகவும்

கடற்கரை ... பேருந்து...
வெளிச்சம்  குறைந்த
பட்டணத்துப் பொலிகாளைகள்
நாய்போலகூடித்  தழுவும்
நட்சத்திர  விடுதிகளுமில்லை.

காபிஷாப்  ஷாப்பிங் மால்
மல்டி பிளக்ஸ்  இணையம்
மூஞ்சிப்  புத்தகம்
என திரிந்து கிடக்கவுமில்லை.

கட்டான உடலைக்
கண்டு காதலிக்கவுமில்லை

வட்டநிலா போன்ற
மூஞ்சியைக்  கண்டு
காமுறவுமில்லை.

பகட்டான  வாழ்க்கைக்கு
பணத்திற்கு...
நாம் காதலிக்கவில்லை.

தெளிவான  பார்வை
தேர்ந்த  அறிவு ...
உனக்குமிருந்தத்து ...
எனக்குமிருந்தத்து .

தமிழரின்
உயரிய நூல்
தொல்காப்பியம் போல
காதலுக்கான  இலக்கணங்களை
முரண்படா விதிகளுடன்
கட்டமைத்தாய்.

அந்தக்  காதலில்
இழுக்கப்  பட்டேன்
அந்த  ஆனந்தக்
காதலில் ...
மூழ்கித்  திளைக்கிறேன்.

   

Thursday, 17 May 2012

மறக்க இயலா மே18

  

கண்ணீர்  நிற்கவில்லை
நெஞ்சக சுமை
குறையவில்லை.

உள்ளம் உறங்கவில்லை
விழிகள்  கண்மூடவில்லை .

கண்முன்னே
காட்சிகளாய் விரிகிறது
ஈழத்தின்  பச்சைப்
படுகொலைகள் .

உலகே வெட்கி
தலைகுனியும்  கொடுஞ்செயல்
எவனும்  கேட்கவில்லை .

நச்சுக் குண்டுகள் ...
எரிகனைகள்.....
காட்டிக் கொடுக்கும்
ரேடார்கள்.....

இதயம்  இல்லாத
பெட்டைகள் எல்லாம்
ஒன்றாய்கூடி ...

அழிக்க நினைத்தத்து
கூலிக்கு  மாரப்படிப்பதர்க்கும்
கொள்கைக்காய்  சாவதற்கும்
வேறுபாட்டை  அறியதவானால்
அறியாபாடதத்து ....

போராளிகள் புதைக்கப்படுவதில்லை
விதைக்கப்  படுகிறார்கள் .

எம்மினம்  எழும்
தமிழீழம்  வெல்லும்
இது  அறிவியல் விதி .

Monday, 14 May 2012

நாங்கள் தமிழர்கள்



நாங்கள்  சந்தனத்திற்கும் 
சாக்கடைக்குமான 
வேறுபாட்டை  அறியாதவர்கள் .

போலிகளுக்கு  புகழ் 
மாலை சூட்டி 
மகிழுகிறவர்கள்.

நேர்மையை  புதைத்துவிட்டு 
அவலங்களை 
அரங்கேற்றம்  செய்கிறவர்கள்.

புதையலை  ஒதுக்கிவிட்டு 
பொய்களை  தேடிக்கொண்டு 
இருப்பவர்கள் .

தத்துவங்களைத்  தவறவிட்டு 
சதிகளுக்கு   ஆளாகிக் 
கொண்டு இருப்பவர்கள்.

சாதியால்   
சண்டையிட்டு 
சங்கடங்களை  ...
விலை  பேசுகிறவர்கள் .
நாங்கள்  தமிழ் நாட்டுத் 
தமிழர்கள் .

தமிழன்  எப்போதுதான்   விழிப்பனோ?

Saturday, 5 May 2012

நானும் ஒருத்தி என்பதாலா அன்பனே .....

 சாதிகளைச் சொல்லி
சலுகைக்காக
 வேட்கைகொள்ளுகிறவன்  இல்லை .

சாயம் போன
அரசியல்  பிழைப்பாளியும் இல்லை  நீ .

வீணான கருத்தியல் பேசி
மக்களை  கவிழ்ப்பவனும்  இல்லை .

அறம் சார்ந்த பொருளியல்
பேசுகிறாய்.

குமுகப்  பாமரத் தனங்களை
உடைத்தெறிய
களமாடுகிறாய்.

கட்டவிழ்த்து  விடப்பட்ட
காட்டுமிராண்டித் தனங்களை
முடமாக்க  எண்ணுகிறாய்.

யாதும் ஊரே
யாவாரும் கேளீர்  என
தமிழ்  சித்தாந்தத்தை
முன்னெடுக்கிறாய்.

இருத்தலை உடைத்தெறிகிறாய்.
புதியன  பதியமிடு கிறாய்.

கற்றதைக்  கற்பிக்கிறாய்.
புதியன  கற்றுக்கோள்ளுகிறாய் .

பறந்துப் பட்ட மக்களின்
நலனையே எல்லோரின்
பார்வைக்கும் வைக்கிறாய் .

அதில்  நானும்  ஒருத்தி
என்பதாலா     அன்பனே .




Monday, 23 April 2012

இலங்கை நாடக மேடையில் இந்திய நடிகர்கள்




 ஈழத்தில் ...
பச்சைப் படுகொலை
நடந்தேறி மூன்றாண்டுகள் .

அதிகாரப் பகிர்வுக்கு
அழுத்தம் கொடுத்ததாம் 
இந்திய நாடகக்குழு .

திரிகோணமலை மாவட்டம்
சம்பூரில் உள்ள 
தமிழர்களை சந்திக்கவே இல்லை .

மிகப் பெரும் 
அவலங்கள் தொடர்வதும் 
அங்குதானே ?
மிகப் பெரும் 
தமிழக் குடும்பங்கள்
சிக்கித்தவிப்பதும் 
இங்குதானே .

இலங்கை அரசியல் 
அமைப்பின் பதிமூன்றாம்
பிரிவையும் அமல்
படுத்த கோரினார்கலாம் .

தந்தை செல்வாகாலந்தொட்டு 
இன்றுவரை சிங்களன்
தமிழர் கோரியதை
கொடுக்கவே இல்லை.

தனி ஈழமே
தீர்வாம் தமிழகத்து
டக்லஸ் ...
வரதராஜ பெருமாள் ...
கருணா ... இல்லை இல்லை 
கருணாநிதி சொல்கிறார் .


இருபதாம் நூற்றாண்டின்
மிகப் பெரும் அவலம் 
வெட்கம் வெட்கம்.

இலங்கை நாடக
மேடையில் இந்திய நடிகர்கள் 
தாலைமை நடிகை சுஷ்மா சுவராஜ் 
பக்க வாத்தியமும்
துணைநடிப்பும்  ஒத்தூதலும்
காங்கிரசு காரன்கள்.

உச்சகட்ட நடிப்பில்
ஒதுங்கிக் கொண்டது
கருணா .... நிதியாட்கள் .

உலகத் தமிழர்கள்
ஒன்றிணைவதே 
தமிழீழத்திற்கும் 
தமிழர்க்கும் தீர்வு
தமிழரே சிந்திப்பீர்.         

Monday, 16 April 2012

நான் கற்றுத்தேறிய கல்லூரியும் நீ நீ ... நீயே .

பிழையான  கற்ப்பிதங்களை
கொள்கிறவன் அல்லன் நீ .

காதலில்  நேர்மையான

கோட்பாடுகளைக்
கொண்டவன் நீ .

இருவருக்குமான

முழுமையான புரிதலில் 
தேறியபிறகே
காதலில்  தடம்
பதிய  வேண்டும்  என்கிறவன் நீ .

புரிதல் உடலில்  இருந்தல்ல

உள்ளத்தில்  இருந்தான
வேட்கை  கொள்ள வேண்டும்
என்கிறாய்.

கண்டதும்  காதல்

என்ற   காட்டுமிராண்டித்
தனத்தை ...
கண்மூடித்தனமாய்
எதிர்க்கிறவன் நீ .

புரிதலுக்கு  பிறகேயான

பிரிதலையும்
சாடுகிறவன்    நீ.

நான்  கற்றுத்தேறிய

கல்லூரியும்  நீ
நீ ... நீயே .

Monday, 9 April 2012

காதலில் பழங்கால பெண்கள்


 பழங்கால  பெண்கள்
காதலைக் 
கண்மூடித்தனமாய்
அணுகவில்லை .

கல்வி கற்றவனாக ...
வீரனாக ....
நேர்மையன  வனாக...
வளப்பம் நிறைந்த
நாட்டவனாக...
இப்படி  காதலனின்
உண்மை 
நம்பகத்தன்மைகளை
அறிந்தே  காதலில்
வீழ்ந்தனர்
காதலனை  வீழ்த்தினார்.

காதலில் அப்போது
உறுதியும்  இருந்தது .
நேர்மையும்  பிறந்தது
இல்லறமும்  நல்லறமே
மாறியது .

இன்றோ ...
உள்ளத்தைக்  கணக்கில்
கொள்ளாமல்
கள்ளத்தை  உள்ளத்திலேந்தி
உடலை  இலக்காய்
கொண்டு
பொன்னே...
தேனே  என வழிந்து....
விரைந்து  திகட்டிப் போய்
சீரழிகின்றனர் .

விட்டுக் கொடுத்து
வாழ்வோம் .
தட்டிக் கொடுத்து
தேற்றுவோம்.
தமிழ்
பாரம்பரியத்தை
பண்பாட்டைக் காப்போம்.
மீட்ப்போம்.