இராஜஇராஜேஸ்வரி அவர்கள் வழங்கிய விருது

இராஜஇராஜேஸ்வரி  அவர்கள்  வழங்கிய  விருது

Tuesday, 14 July 2015

தனிமனித வரலாறு ....

தனிமனித வரலாற்றில்
துரோகங்களைக்
கடந்தே ....
வெற்றி
படிநிலை வளர்ச்சி
அடைந்திருக்கிறது .

இங்கு ....
கொலைகளும் ...
வல்லுறவுகளும் ....
கொள்ளைகளும் ....
ஏமாற்றுதலும் ...
இன்னபிற
குமுகக்  கேடுகளும்
தேசிய  வீர விளையாட்டுகளாகவே ...
பாவிக்கப்  படுகிறது  .

அனால் ...
உண்மை ...
நேர்மை ...
நாட்டின் வளம்...
மொழி ...
பண்பாடு ...
 அடிதட்டுமக்களின்
வாழ்வாதாரம்
இவை எல்லாம்
தீவிரவியம் .
பேசக்கூடதவைகள் .
இவர்கள்
அருவருக்கத்
தக்கவர்கள் .

இப்படிப்
பட்டவர்களைக்
இந்தக் குமுகம்
கையாளும் விதமேதனி ...


பித்தானாக்கி
மலட்டை
மாலையிட வைப்பார்கள் .
கோள்மூட்டி ...
பொறுக்கித்  தனம்
புரிவோரிடம்
மண்டியிடச்  செய்வார்கள் .


பிசாசிடம்  வாழவிட்டு
வேடிக்கைப்  பார்ப்பார்கள் .

 நாசக்கரர்களே .
உங்களின் வாழ்வு
நிலைத்துவிடுமா  என்ன?

4 comments:

சிகரம் பாரதி said...

வாழ்த்துக்கள். அருமை. நமது வலைத்தளம் : சிகரம்

சிகரம் பாரதி said...

பதிவு இங்கே. தலைப்பு எங்கே?

Athisaya said...

இதுதான் வாழ்வென்றாகிப்போனதே சொந்தமே..வருத்தமான உண்மைகள் உங்கள் தெளிவான மொழியில் வாழ்த்துக்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

மாசற்றவனே ! உன் மதிமுகம் காட்டு....

????