எனக்கு நானே
பேசிக்கொள்கிறேனாம்
அம்மா சொன்னார்
தேழிகள் சொன்னார்கள் .
எனக்குள் எந்த
மாற்றமும்
நிகழ்ந்திருக்க வில்லை .
கனவுகளின்
பிடியில் சிக்கியிருப்பது
உண்மைதான் .
அந்திசாயும்
வேளை
அல்லிபூக்களின்
மகரந்தம்
உங்களின்
நாசியை துளைக்கலாம் .
எனது
கோட்டைக்
கதவுகள்
யாருடைய
செங்கோளுக்கோ
காத்திருக்கிறது.
அரசகுமரனே
உன்புரவியை
விரைவாக
செலுத்து .
என் மேனியின்
நிறம் மாறும் முன்.
20 comments:
நான்காவது வரியில், முதல் வார்த்தையைத்”தோழிகள்” என்று மாற்றவும். ’தேழிகள்’ என்று தவறாக உள்ளது.
’இப்போதெல்லாம்’ கவிதை அருமையாக எழுதியுள்ளீர்கள். காதலனை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஒரு பருவப்பெண்ணின் புலம்பலோ?
வாழ்த்துக்கள்!
என் வலைப்பூவினுள் புதிய வண்டாக இன்று நுழைந்து, பின்னூட்டம் அளித்ததற்கு என் நன்றிகள்.
நேரம் கிடைக்கும் போதெல்லாம் மீண்டும் மீண்டும் வருக வருக வருக என் அன்புடன் வரவேற்கிறேன்.
அன்புடன் vgk
gopu1949.blogspot.com
வாழ்த்துக்கள் சகோ :)
தொடர்ந்து கலக்குங்க....
இன்னிக்குத்தான் உங்க பக்கம் வந்தேன்,
கவிதை நல்லா இருக்கு.
nicely written. :-)
கவிதை அருமை
கவிதை நல்லாயிருக்குங்க.. மேலும் நிறைய பதிவுகள் எழுதிட வாழ்த்துகள்.
செங்கோளுக்கோ - அப்படியே இதையும் செங்கோலுக்கோனு மாத்திடுங்க..மாலதி.:)
//எனக்கு நானே
பேசிக்கொள்கிறேனாம்
அம்மா சொன்னார்
தேழிகள் சொன்னார்கள் .//
இதில் சிறிய எழுத்துபிழை இருக்குங்க.. தேழிகள் - தோழிகள்.
மற்றபடி கவிதை சூப்பர்.
அழகா எழுதி இருக்கிங்க :)
சிறந்த கவிதைகள் உங்களிடமிருந்து வரும் என்ற நம்பிக்கையும்,கூடவே என் வாழ்த்துக்களும் மாலதி! :)
கவிதா நல்லாயிருக்கு.
இயல்பான வார்த்தைகளைக்கொண்டு
சொல்ல வேண்டியவைகளை
இதமாகச் சொல்லிப்போகும்
உங்கள் படைப்பு அருமை
தொடர வாழ்த்துக்கள்
http://jaghamani.blogspot.com/
விசித்திர விநோதங்கள்//
யாருடைய
செங்கோளுக்கோ
காத்திருக்கிறது.//
செங்கோலைக் கைப்பற்ற வாழ்த்துக்கள்.
ம்...கனவில காதலனா.
அதுவும் அரச குமாரனா....
நடக்கட்டும் நடக்கட்டும் மதி !
ஈரம் தீர்ந்த ஒரு முதிர்கன்னியின் விழிகளிலிருந்து
பிரி பிரியை உதிரும் உப்பு/வரிகள்.
அழகு
சிற்சில எழுத்துப் பிழைகள் மட்டும் கவனியுங்கள்.. கவிதை நன்றாக உள்ளது
கமலேஷ் என்ன அழகா சொல்லிட்டாரு...! வழிமொழிகிறேன்.
Chanceless... நான் பெரிதாய் எவருடைய ப்ளாக்கையும் தொடர விரும்பியதில்லை. ஆனால் உங்கள் தமிழுக்கு முன்னால் என் தலைக்கர்வம் மண்டியிடவேண்டித்தானிருக்கிறது. தொடர்ந்து பயணித்தால் உங்கள் கவிதைகள் நிச்சயம் திரையுலக தாமரையை ஓர்நாள் மிஞ்சும்... சந்தேகமேயில்லை. திரையுலகின் அடுத்த தாமரை நீங்கள்தான்!!! இக்கவிதையின் கடைசி வரியில் எப்போதோ சிறுவயதில் கற்றறிந்த பசலைநோயை அழகாய் உரைக்கிறீர்கள். நான் சிறப்பாக கவிதை எழுதுவதாக பலசமயம் உணர்ந்தும் இன்று தெரிந்தது...எனது தமிழும் கவிதைகளும் சாதாரணமென்பது! சத்தியம்...நான் உங்கள் தமிழுக்கு அடிமை...

Post a Comment