இராஜஇராஜேஸ்வரி அவர்கள் வழங்கிய விருது

இராஜஇராஜேஸ்வரி  அவர்கள்  வழங்கிய  விருது

Thursday, 14 April 2011

வாலிபதேசத்தின்  தூது .

விண்ணப்பங்களின்
எண்ணிக்கை
மிகுதிதான் .

மலைத்துப்போகிறேன்
ஒவ்வொன்றும்
ஒருவிதத்தில்
சிறந்தது .

பொது வழியில்
தொடர்ந்த
என்பயணம்
இப்போது
இராஜ பாட்டையில்.

விளக்கடியில் 
இருந்து
வெண்ணிலவின்
துணைத்தேடி .

கண்களுக்கெட்டிய  தூரம்வரை
பரவெளியில்
வெற்றிடமே

கண்களில்
தண்னொளியும்

காதுகளில்
தேனிசையும் .

என்மேனியில்
தென்றலும் .

காற்றைகிழித்துக்கொண்டு
விண்ணில்
வெகுதொலைவில்
பயணிக்கிறேன்

10 comments:

MANO நாஞ்சில் மனோ said...

அருமையா அசத்தலான கவிதை...

வை.கோபாலகிருஷ்ணன் said...

தூது நன்றாகவே விடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. பாராட்டுக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

இராஜராஜேஸ்வரி said...

தமிழ்ப்புத்தண்டு வாழ்த்துக்கள்.

Chitra said...

nice.



இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள் !!!

Yaathoramani.blogspot.com said...

மிக அருமை
இளமைத் துள்ளலை
அப்படியே வார்த்தைகளில்
வடித்தவிதம் மிக அருமை
நல்ல படைப்பு
தொடர வாழ்த்துக்கள்

ஹேமா said...

வார்த்தைக் கோர்ப்புகள் மிக அருமை !

Asiya Omar said...

கவிதை அருமை,திரும்ப திரும்ப வாசித்து பார்த்தேன்..

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

கவிதை தூள்

G.M Balasubramaniam said...

உங்களுடைய நான்கு பதிவுகளையும் படித்தேன்.உங்கள் சிந்தனைகள் ஒரே வட்டத்தைச் சுற்றியே இயங்குகின்றனவே. பருவக் கோளாறோ.?உங்கள் வயதை நான் கேட்கவில்லை. நான் பதிவிடத் துவங்கியபோது காதல் கவிதைகள்தான் எழுதினேன். சிந்தனைக்கு வயசு கிடையாது. ஆனால் சிந்திப்பதற்கு ஏராளமான விஷயங்கள் உள்ளன, காதலையும் சேர்த்து. வரவேற்கிறோம். வாருங்கள் . வாழ்த்துக்கள் .

மாலதி said...

உங்கள் அனைவரின் வருகைக்கும் கருத்துகளுக்கும் பணிவான வணக்கங்களும் நன்றிகளும் பாராட்டுகளும் .ஐயா G.M Balasubramaniam அவர்களின் விமர்சனம் பணிவுடன் ஏற்றுகொள்ளபடுகிறது .