மேட்டடிமைதனங்களும்
கண்மூடிதனங்களும்
தொடரத்தான் செய்கியது .
சிறிய வலிகளுக்கே
வற்றாத நீருற்றாய்
வடிக்கிறது கண்கள் .
போலித்தனங்களையும்
மூடப்பழக்க வழக்கங்களையும்
விட்டுவிலக மறுக்கிறது .
வீணர்களின் வெட்டி
பேச்சுகளுக்கு
அஞ்சி முக்காடிட்டு
கொள்ளுகிறது உள்ளம்.
போலித்தனமாய்
விடுதலைபெற
விழைகிறது
தேவைகள் .
அதோ சாதியென்ற
மாயவலையையும்
கண்மூடித்தனமான
கடவுட் கோட்பாடுகளையும்
உடைத்தெறியும்
ஆரவாரம்
கேட்கும் போது
அறைந்து சர்த்திக்கொள்ளுகிறது
அறிவுக் கதவங்கள் .
விடியல்கள்
தன்தொன்றித்தனமாய்
விடிந்து விடுவதில்லை .
சிற்றுளிகளின்
முத்தங்களை
உள்வாங்காத
கற்கள் சிற்ப்பங்கள் ஆவதில்லை .
இனிய ...
நிலவின்
பயணத்தில் இருளும் பகலும்
இயற்கையின்
விளையாட்டே .
காலங்களின் சுழற்சியில்
விழிப்போடிருந்தால்
மட்டுமே விடியல் .
12 comments:
//இனிய ...
நிலவின்
பயணத்தில் இருளும் பகலும்
இயற்கையின்
விளையாட்டே .
காலங்களின் சுழற்சியில்
விழிப்போடிருந்தால்
மட்டுமே விடியல் .//
செம டச்சிங் உண்மையும் கூட....
போலித்தனங்களையும்
மூடப்பழக்க வழக்கங்களையும்
விட்டுவிலக மறுக்கிறது .
வீணர்களின் வெட்டி
பேச்சுகளுக்கு
அஞ்சி முக்காடிட்டு
கொள்ளுகிறது உள்ளம்.
.......எதார்த்தம்.... சமூக அக்கறையுடன் எழுதப்பட்ட கவிதை. அருமை.
>>அறைந்து சர்த்திக்கொள்ளுகிறது
அறிவுக் கதவங்கள் .
விடியல்கள்
தன்தொன்றித்தனமாய்
விடிந்து விடுவதில்லை .
அறைந்து சாத்திக்கொள்ளுகிறது
அறிவுக் கதவங்கள் .
விடியல்கள்
தான் தோன்றித்தனமாய்
விடிந்து விடுவதில்லை .
//அறைந்து சர்த்திக்கொள்ளுகிறது
அறிவுக் கதவுகள்//
நல்லா இருக்குது.
[ஆங்காங்கே ஒரு சில எழுத்துப்பிழைகள் உள்ளது போலத்தெரிகிறது.
உதாரணம்:
கற்கள் சிற்ப்பங்கள் ஆவதில்லை .
”சிற்பங்கள்” என்பதே சரியான வார்த்தை ]
மிக நல்ல கவிதை.உணர்வுகளை அருமையாக எழுதறீங்க..
கவிதையை போலவே தலைப்பையும் அழகா எழுதி இருக்கிங்க.
மிக அழகாக, சற்றே எச்சரிகையுடன் முடித்துள்ளீர்கள் கவிதையை.
//காலங்களின் சுழற்சியில்
விழிப்போடிருந்தால்
மட்டுமே விடியல் .//
சிறப்பான வரிகள்!
\\காலங்களின் சுழற்சியில்
விழிப்போடிருந்தால்
மட்டுமே விடியல்//
. சத்தியமான வார்த்தைகள் .
சரியான கஸ்டம் மாலதி.சில கட்டுப்பாடுகள் எங்கள்
இரத்தத்திலேயே ஊறிக்கிடக்கிறதே !
அன்பு மாலதிக்கு, முதலில் என் பாராட்டுகள். சிந்தனையின் திசை மாற்றம் முன்னேற்றத்துக்கே..இயற்கையில் நிகழும் விடியல் வேறு,விழிப்போடு இருந்தால் மட்டுமே, உள்ளங்களில் விடியல் காணமுடியும்..அருமை.
நல்லாயிருக்குங்க மாலதி உங்க சிந்தனைகளும் அது பொதிந்த கவிதையும்!
Post a Comment