இராஜஇராஜேஸ்வரி அவர்கள் வழங்கிய விருது

இராஜஇராஜேஸ்வரி  அவர்கள்  வழங்கிய  விருது

Tuesday, 26 April 2011

துள்ளித்திரிந்த காலம்



பள்ளிப்படிப்பில்
தேறியதும்
படிக்கவைப்பதா
வேண்டாமா?

ஆயிரம்
போராட்டங்கள்
எனக்கல்ல
என்...
பெற்றோருக்கு

அவர்களுக்கு கிடைத்த
கற்பிதங்களும்
இளைய  தலைமுறை
 மீதான பார்வையும்
வெறுப்பையே
தந்திருந்தன .

என்
தந்தையின்
கணோட்டம் வேறுபட்டது .

எப்போதும்
பெண்கள் வேலைக்கு
போவதை விரும்புவதில்லை .

பெண்கள்
அடிமையாக்கவேண்டும்
என்பதல்ல ...
பரபரப்பான
வாழ்க்கைமுறையில் ...

இருவரும் வேலைக்கு
சென்று
உணர்ந்து  வாழயியலாமல்   ....
சிக்கிதவிப்பதாய் ...

தேவையை
குறைத்து கொண்டு
முறையாக வீட்டையும்
குழந்தைகளையும் ...
மகிழ்வான 
வாழ்க்கையையையும்

எல்லாவற்றையும்
முறையாக  உணர்ந்து
வாழவேண்டும் ...
ஒவ் ஒரு   கவளமும்
உண்ணும்போது
சுவையுணர்ந்து...


காற்று ...
மண் ..
விண்...
எல்லாவற்றையும் ...
அணு அணுவாய்
சுவைத்து ...
வாழவேண்டும் ...
என்பார்  எதுசரி ?



      

13 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

உங்கள் தந்தையின் கண்ணோட்டமும் ஒருவிதத்தில் சரிதான்.

ஆனால் பெண்கள் அவசியம் எவ்வளவு முடியுமோ அவ்வளவு படித்து விடவேண்டும்.

கணவ்ர் சம்பளத்தில் மட்டும் குடும்பப் பொருளாதாரத்தை சமாளிக்க முடியுமானால், குடும்பத்தையும் குழந்தைகளையும் கவனித்துக்கொண்டு இருப்பதே நிம்மதியான வாழ்க்கையாக இருக்கும்.

தான் கற்ற கல்வி வீணாகாமல், தன் குழந்தைகளுக்கும், மற்ற அக்கம்பக்கத்து குழந்தைகளுக்கும் பாடம் சொல்லிக்கொடுக்கலாம், என்பது என் கருத்து.

துள்ளித்திரிந்த காலம் படம் & பாடல் அருமை.

தமிழ் உதயம் said...

தலைமுறைக்கு தலைமுறை எண்ணங்கள், நாகரீகங்கள், ஆசைகள் எல்லாமே மாறிக் கொண்டே வரும். நேற்று மறுக்கப்பட்டது - இன்று போராட்டத்துடன் கிடைக்கும். நாளை அடிப்படை உரிமையாகிவிடும்.

ராஜி said...

அப்பா சொல்றதுதான் முற்றிலும் சரிங்க. ஆனால், புகுந்த இடத்தின் பொருளாதார சூழலும் ஒரு பெண் வேலைக்குப் போவதை தீர்மானிக்கின்றது.

MANO நாஞ்சில் மனோ said...

//எல்லாவற்றையும்
முறையாக உணர்ந்து
வாழவேண்டும் ...
ஒவ் ஒரு கவளமும்
உண்ணும்போது
சுவையுணர்ந்து...//

சரிதானே......

MANO நாஞ்சில் மனோ said...

//காற்று ...
மண் ..
விண்...
எல்லாவற்றையும் ...
அணு அணுவாய்
சுவைத்து ...
வாழவேண்டும் ...
என்பார் எதுசரி ?//

நன்றாக ரசித்து, ருசிக்கும் அப்பா. சூப்பர்....

இராஜராஜேஸ்வரி said...

தேவையை
குறைத்து கொண்டு
முறையாக வீட்டையும்
குழந்தைகளையும் ...
மகிழ்வான
வாழ்க்கையையையும்//
துள்ளித்திரிந்த காலம்"அருமை.

Rathnavel Natarajan said...

பெண்களும் நன்றாக படிக்க வேண்டும். வேலைக்கு செல்வதா இல்லையா என்பது அவர்களது பொருளாதார சூழ்நிலையை பொறுத்தது. பெண்கள் தெளிவாக துணிச்சலுடன் இருக்க வேண்டும்.
நன்றி.

எல் கே said...

அவரவர் சிந்தனையும் கருத்தும் மாறும். சிந்தித்து செயல் படலாம்

ஹேமா said...

அப்பா சொல்வது சரியானாலும் உங்கள் மனதில் அளவுக்கதிகமான ஆசைகளைக் கூட்டினால் ஆபத்து உங்களுக்குத்தான்.வருபவரின் வருமானத்தைப் புரிந்துகொண்டு குடும்பம் நடத்தப் பழகினால் அதிஷ்டம் உங்கள் கையில்.ஆனால் கல்வி எப்போதும் பயன் தரும் மாலதி !

நிரூபன் said...

உங்கள் கவிதை, எங்கள் ஊரின் யதார்த்தத்தைச் சொல்லுகிறது சகோ. 21ம் நூற்றாண்டிலும் பள்ளிப் படிப்பு முடிந்தவுடன் வெளி நாட்டு மாப்பிளை வேண்டி திருமணம் எனும் பந்தத்திற்குள் தள்ளப்படும் பெண்கள் பல பேர். இது என்று தான் இந்த நிலை மாறுமோ

Yaathoramani.blogspot.com said...

நல்ல கேள்வியை மிக அழகாக
எளிமையான வார்த்தைகளைக் கொண்டு
கவியாக வடித்த விதம் அருமை
தொடர வாழ்த்துக்கள்

நெய்வேலி பாரதிக்குமார் said...

ஒரு 'வேலை' யை தேடித் தரும் அளவு தகுதியுள்ள கல்வி. ...பொருளாதார தேவைக்கு வேண்டும் எனில் ஒரு வேலை... என்ற கொள்கையோடு இயங்கலாம் ... அளவுக்கு அதிகமான வருமானம் உள்ள குடும்பத்தில் ஒரு பெண் வேலைக்கு செல்வது, பொருளாதார தேடலோடு எனில் பெண் வேலைக்கு செல்வது அவசியமற்றது. திடீரென ஒரு பெண் எல்லோராலும் கைவிடப்படும்போது ஒரு வேலையை தேடித்தராத கல்வி பயனற்றது. எனவே நல்ல கல்வியும், சுழலுக்கு தேவையான பணியும் பெண்களுக்கு பொருந்தும். உங்கள் கேள்வியை அழகாக கவிதை வடிவில் சொன்ன பாணி அருமை

சி.பி.செந்தில்குமார் said...

>>>என்
தந்தையின்
கணோட்டம் வேறுபட்டது .


என்
தந்தையின்
கண்ணோட்டம் வேறுபட்டது .