காதல் ...
உடலுக்கான தேவையில்
தொடங்கியதா?
உள்ளத்திற்க்கான
தேடலில் தொடங்கியதா?
என கேட்டாய்.
ஒரு நிமிடம்
சிந்தித்தேன் .
உன் வினவின்
நோக்கத்தை
உள்வாங்கி கொண்டால்தானே
நான் நீயாக முடியும்.
ஆறாவது
அறிவை எடைபோடுவதில்
தேர்ந்தவன் நீ.
தேவையில்லாது
சினம் கொள்வதுமில்லை
சினம் கொள்ளவைப்பதுமில்லை.
காதலை ...
புரிந்து கொள்ள
இன்னுமொரு இதயம்
வேண்டுமென்றாய்.
அது ...
புரிந்து கொள்ள
இயலாதவர்களுக்கு தானே?
என்பதை புரியாதவள்
அல்ல நான்.
அன்பனே ...
காதல் உடலுமில்லை
உள்ளமுமில்லை
அது....ஏதுமற்ற
(நிர்வாண) நிலை.
ஏதுமற்ற நிலையில்
சுகமுமில்லை
துக்கமுமில்லை
அது உயர்ந்த உணர்வு
என்பதைத் தானே
நீ எனக்கு கற்பித்தாய்.
சாந்தன் பேரறிவாளன் , முருகன் விடுதலை குறித்து குடித்துவிட்டு பேசும் அந்த பெரியாரின் பேரன் என கூறும் கழிசடை பற்றிதானே கேட்கிறீர்கள் தமிழனாக இருந்தால் தான் ஆடவிட்டாலும் தன் சதை ஆடும் என்பார்கள் அதுதான் தமிழனே இல்லையே அதை பற்றி பேசி நேரத்தை வீணடிப்பானேன் ? நான் இளங்கோவனை சொல்கிறேன் என நீங்கள் நினைக்க வேண்டாம்.
உடலுக்கான தேவையில்
தொடங்கியதா?
உள்ளத்திற்க்கான
தேடலில் தொடங்கியதா?
என கேட்டாய்.
ஒரு நிமிடம்
சிந்தித்தேன் .
உன் வினவின்
நோக்கத்தை
உள்வாங்கி கொண்டால்தானே
நான் நீயாக முடியும்.
ஆறாவது
அறிவை எடைபோடுவதில்
தேர்ந்தவன் நீ.
தேவையில்லாது
சினம் கொள்வதுமில்லை
சினம் கொள்ளவைப்பதுமில்லை.
காதலை ...
புரிந்து கொள்ள
இன்னுமொரு இதயம்
வேண்டுமென்றாய்.
அது ...
புரிந்து கொள்ள
இயலாதவர்களுக்கு தானே?
என்பதை புரியாதவள்
அல்ல நான்.
அன்பனே ...
காதல் உடலுமில்லை
உள்ளமுமில்லை
அது....ஏதுமற்ற
(நிர்வாண) நிலை.
ஏதுமற்ற நிலையில்
சுகமுமில்லை
துக்கமுமில்லை
அது உயர்ந்த உணர்வு
என்பதைத் தானே
நீ எனக்கு கற்பித்தாய்.
சாந்தன் பேரறிவாளன் , முருகன் விடுதலை குறித்து குடித்துவிட்டு பேசும் அந்த பெரியாரின் பேரன் என கூறும் கழிசடை பற்றிதானே கேட்கிறீர்கள் தமிழனாக இருந்தால் தான் ஆடவிட்டாலும் தன் சதை ஆடும் என்பார்கள் அதுதான் தமிழனே இல்லையே அதை பற்றி பேசி நேரத்தை வீணடிப்பானேன் ? நான் இளங்கோவனை சொல்கிறேன் என நீங்கள் நினைக்க வேண்டாம்.
37 comments:
ஏதுமற்ற நிலையில்
சுகமுமில்லை
துக்கமுமில்லை
அது உயர்ந்த உணர்வு
தேவையில்லாது
சினம் கொள்வதுமில்லை
சினம் கொள்ளவைப்பதுமில்லை.
யோசிக்க வைக்கும் வரிகள்.
Tamilmanam first vote
Super kavithai
Last paragraph super
நான் இளங்கோவனை சொல்கிறேன் என நீங்கள் நினைக்க வேண்டாம்.//
தெலுங்கன்....!
அழகான கவிதைக்கு இளங்கோவன் திருஷ்டி பொட்டுன்னு, நான் இளங்கோவனை சொல்லலைன்னு நீங்க நினச்சா அது உண்மைன்னு நான் சொன்னா அது சரி இல்லாம, சரியாகி, உண்மையா இருந்து, அவன் தெலுங்கன்னு நான் சொன்னா சொல்லாமலே எல்லாருக்கும் தெரிஞ்சி தெரியலைன்னு காங்கிரஸ் சொன்னாலும் நான் நம்பி நம்பாம, அவன் நாசமா போவான்...[[ஏதாவது புரிஞ்சுதா..?]]
முற்றும் திறந்த உணர்வு கடந்த காதலில் வலியும் ஒன்றே சுகமும் ஒன்றே.
உடலுமில்லை உள்ளமும் இல்லை காதல் என்பதை கண்டறிந்தவர் யாரோ
//காதல் உடலுமில்லை
உள்ளமுமில்லை
அது....ஏதுமற்ற
(நிர்வாண) நிலை.//
அருமையான வரிகள்,மாலதி. வாழ்த்துக்கள்.
சூப்பர், காதல்னா இம்புட்டு குழப்பமா? ஒதுங்கியே இருக்கிறது நமக்கு நல்லம்.
//காதலை ...
புரிந்து கொள்ள
இன்னுமொரு இதயம்
வேண்டுமென்றாய்.
அது ...
புரிந்து கொள்ள
இயலாதவர்களுக்கு தானே?
என்பதை புரியாதவள்
அல்ல நான்.//
காதல் புரிதலுக்கு அப்பால்பட்டதென்பதை இதைவிட அழகாக சொல்லிவிடமுடியுமோ தெரியாது...
///உன் வினவின்
நோக்கத்தை
உள்வாங்கி கொண்டால்தானே
நான் நீயாக முடியும்.//
உன்னத உறவுகளின் நிலைப்புத் தன்மைக்கு
இதுதான் தேவையான செய்தி.
சொல்லவும் கேட்கவும் நினைப்பதை முதலில்
உள்வாங்கிகொண்டாலே
போதும்...
உறவின் நிலைப்புத் தன்மை பெருகிவிடும்.
கவிதை நன்று சகோதரி.
புத்தனை இன்னொரு புத்தன்தான்
மிகச் சரியாக புரிந்து கொள்ளமுடியும்
என்பது மாதிரித்தானே ?
இல்லையெனில் நிர்வாண் நிலையை
ஆடையற்று இருப்பது எனவும்
பொருள் கொள்ள சாத்தியம் இருக்கிறதல்லவா !
காதலுக்கும் காமத்திற்கும் வித்தியாசம் அறியாது திரியும்
அற்ப மனிதரைப்போல
மனம் தொட்ட பதிவு
தொடர வாழ்த்துக்கள்
கவிதை நன்று..... காதலின் ஆராட்சி அழகு
அப்புறம்... அந்த கைபுள்ளை கட்சியையும் அந்த மனடைக்குள் சரக்கு இல்லாதவனையும்
கணக்கே எடுக்க தேவையில்லை.....
//ஏதுமற்ற நிலையில்
சுகமுமில்லை
துக்கமுமில்லை
அது உயர்ந்த உணர்வு
என்பதைத் தானே
நீ எனக்கு கற்பித்தாய்.//
சபாஷ். நல்ல முடிவுடன் கூடிய கவிதை. பாராட்டுக்கள். vgk
காதலை ...
புரிந்து கொள்ள
இன்னுமொரு இதயம்
வேண்டுமென்றாய்.
அது ...
புரிந்து கொள்ள
இயலாதவர்களுக்கு தானே?
என்பதை புரியாதவள்
அல்ல நான்.
அருமையான வரிகள். . .
காதலைப்பற்றி ஒரு புதிய பரிணாமம்....
காதல் என்றால் என்ன என்றால் இனி சட்டென மனதில் தோணும்...
ஏதுமற்ற நிலை....
எதையும் சமனா எடுக்கும் நிலை எப்போது வரும்? எப்படி வரும்?
மனம் ஒன்றி இருமனங்கள் ஒன்றாய் இணைந்து ஒருமனமாய் ஆகிவிடும்போது....
நேசித்த மனம் அங்கே துடிக்கும்போது இங்கே நிலைக்கொள்ளாமல் தவிக்குமே அப்போது....
நேசத்துக்காக உயிர்விடும் கோழைத்தனத்தை விட்டு நேசத்துக்காக மனதை வென்று அன்பை வென்று வாழ்வில் அன்பை நிலைக்க வைக்கும்போது?
இப்படி இத்தனை விதமாக சிந்திக்க வைத்த மிக அருமையான அழகான சிறப்பான படைப்பு மாலதி...
நேரமின்மை, படிப்பு, இணையம் சரியாக கிடைப்பதில்லை... இத்தனை அவஸ்தைகளுக்கிடையில் அழகிய பூ போல ஒரு கவிதை கொடுத்திருக்கீங்கப்பா....
மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்...ரசனையுள்ள கவிதை படைத்தமைக்கு...
அழகா சொல்லி இருக்குறீர்கள்...
///அன்பனே ...
காதல் உடலுமில்லை
உள்ளமுமில்லை
அது....ஏதுமற்ற
(நிர்வாண) நிலை.////
இதுதான் காதலின் யதார்த்த நிலை.அருமையான கவிதை சகோதரி..உங்கள் கவிதைகள் மிகவும் ரசிக்க வைக்கின்றன.தொடர்ந்து கலக்குங்கள் வாழ்த்துக்கள்
வணக்கம் சகோதரி,
காதல் முற்றும் துறந்த நிலை என்பதனை உங்கள் கவிதை அழகுறச் சொல்லி நிற்கிறது..
அப்படியானால் காமத்தின் பின்னர் ஒரு பெண்ணின் மீது வரும் இயற்கையான அன்பிற்கு என்ன பெயர் என்பது எனக்கு குழப்பமாக இருக்கிறது.
அருமையான வரிகள்...சகோதரி மாலதி
கவிதை ஓக்கே,கடைசில ஒரு கருத்து சொன்னது புரில
கவிதை நல்ல இருக்கு சகோ!
@நிரூபன்கம்பர் இதை அழகாக பதிவு செய்வார் உள்ளத்தில் தோன்றுவது காதல் உடலால் வருவது காமம் புரிந்தத்தா அய்யா
@MANO நாஞ்சில் மனோமற்றவர்களை குழப்புவதாக நினைத்து எந்த குழப்பத்தையும் தராமல் மிகவும் சரியாகவே குறிப்பிடுகிறீர் உங்களின் கருத்துகளை வணங்கி ஏற்கிறேன். பாராட்டுகள்
ஏதுமற்ற நிலையில் தான் பறவையின் உதிர்ந்த சிறகு போல் மனம் கனமற்று, காற்று வெளியெங்கும் மிதந்து வரும்.
அருமை மாலதி.
ஏதுமற்ற நிலையில் சுகமுமில்லை
துக்கமுமில்லை,அது உயர்ந்த உணர்வு.அருமையான வரிகள்.
காதலைப் பற்றிய தேடுகை நன்றாக உள்ளது.. வாழ்த்துகள் சகோதரி.
வேதா. இலங்காதிலகம்.
நல்ல கவிதை.
அநியாயத்துக்கு யோசிப்பீங்க போலருக்கே!!! புரிஞ்சமாதிரியும் புரியாதமாதிரியும் எழுதர்தால நீங்க பெரிய புலவர் தான் :)
@சி.பி.செந்தில்குமார்கவிதைக்கும் கருத்திற்கும் எந்த உறவும் இல்லை இளங்கோவன் பேசியதை கண்டித்து குயர்ப்பிட்டோம்
Oru sinthanai muthirntha kavithai kaathalai padri. Nall vaalthukal.
தேவையில்லாது
சினம் கொள்வதுமில்லை
சினம் கொள்ளவைப்பதுமில்லை.
அருமையான வரிகள் வாழ்த்துக்கள்.
செம்புலப் பெயல் நீர்போல்
அன்புடை நெஞ்சம் தாம்
கலந்தனவே
இது, நான் உணர்ந்த காதல்
உரைத்த காதல்
நன்றி!மகளே!
புலவர் சா இராமாநுசம்
ஏதுமற்ற நிலை
எல்லாம் துய்த்த பின்
ஏற்படலாம்
பட்டினத்தானும்
பாமரர் சிலரும்
பட்டப் பின்பு -ஞானி
என பாடிக் கொண்டிருக்கின்றனர்
ஆயினும் அருமை வரிகள்
காதல் தானே இன்னொரு உலகம் படைக்கும்
காதல் தானே வாழ்தலின் அர்த்தம் உரைக்கும்
காதல் தானே அமரத்துவம் அளிக்கும்
///ஏதுமற்ற நிலையில்
சுகமுமில்லை
துக்கமுமில்லை
அது உயர்ந்த உணர்வு
என்பதைத் தானே
நீ எனக்கு கற்பித்தாய்.///
இந்த வரிகள் ஏகாந்தமான நிலையை அல்லவா குறிக்கிறது!
உன்மத்தம் என்பதன் உண்மை அர்த்தம் அல்லவா!
ஆஹா! அருமை !! அற்புதம்.
வாழ்த்துக்கள் சகோதிரி...
காதல் உடலுமில்லை
உள்ளமுமில்லை
அது....ஏதுமற்ற
(நிர்வாண) நிலை.
ஏதுமற்ற நிலையில்
சுகமுமில்லை
துக்கமுமில்லை
அது உயர்ந்த உணர்வு
என்பதைத் தானே
நீ எனக்கு கற்பித்தாய்.
எத்தனை அழகாக சொல்லிருகிங்க...
காதல் என்றால் இதுதான்...
வருகைக்கும் சிறப்பான கருத்துகளிற்கும் எனது வணக்கங்களும் நன்றிகளும் உளம் நிறைந்த பாராட்டுகளும் தனித்தனியே அழைக்க இயவில்லை காரணம் நேரமின்மை பொறுத்தருள்க.
Post a Comment