இராஜஇராஜேஸ்வரி அவர்கள் வழங்கிய விருது

இராஜஇராஜேஸ்வரி  அவர்கள்  வழங்கிய  விருது

Saturday 17 September 2011

எது சிறந்தது ?



அறிவிற்கும்
அழகிற்க்குமான போட்டியில்
நீ
அறிவைமட்டுமே  தேர்வு
செய்கிறாய்.

பண்பிற்கும்
பணத்திற்க்குமான தேடலில்
பண்பிற்க்கே வாய்ப்பளிக்கிறாய்.

நட்பிற்கும்
உறவிற்க்குமான
போராட்டத்திலும்
நட்பையே  விரும்புகிறாய்.

எதிர்ப்பிற்கும்
பாராட்டுகளுக்குமான
நேரெதிர்  கோட்பாடுகளிலும்
எதிர்ப்பவரையே  பேசவைக்கிறாய்.


கண்களுக்கும் 
காதுகளுக்குமான
துலாக்கோலில்
கண்களுக்கே
முதலிடம்  வைக்கிறாய்.  

நீ
சமத்துவ  உலகை
காண கனவு
காண்பது புரிகிறது
அன்பனே  நானும்
ஆயத்தமாயிருக்கிறேன் .


 ஈழத்தில் இன்று ...

                பல  இலட்சம் ஈழத் தமிழரை  கொன்ற கொலைகாரன்  ஆட்சியில் தமிழர்கள்  தங்களின்  நாட்டுபுற  கடவுள் நம்பிக்கைகளுக்குஆடுகளையும் , கோழிகளையும்   பலியிட  கூடாதாம் . ஏனெனில்  கொலை  பாவமான  காரியமாம்  ஏன்டா  நாய்களே  உங்களுக்கே  வெட்கமாக தெரியவில்லையா?

32 comments:

இராஜராஜேஸ்வரி said...

பல இலட்சம் ஈழத் தமிழரை கொன்ற கொலைகாரன் ஆட்சியில் தமிழர்கள் தங்களின் நாட்டுபுற கடவுள் நம்பிக்கைகளுக்குஆடுகளையும் , கோழிகளையும் பலியிட கூடாதாம் . ஏனெனில் கொலை பாவமான காரியமாம் /

வீரியமான சிந்தனைப் ப்கிர்வு!

வை.கோபாலகிருஷ்ணன் said...

// ஏனெனில் கொலை பாவமான காரியமாம்//

’ஆடு அழுகிறதே என்று ஓணாய் அழுத’ கதை தான் இதுவும். தங்கள் ஆதங்கம் நன்கு புலப்படும் பதிவு தான், இது.

மகேந்திரன் said...

சிறந்தது எது என்று
சிந்தையில் முள்ளேற்றி
திறம்பட உரைத்திருக்கிறீர்கள்..
அனைத்தும் அருமை...

மனித உயிர்களை
காவு வாங்கியவன்
சிறு பிராணிகள் மீது
கருணை கொள்வதா?
மூளையை அடகுவைத்த
மூர்க்கவாதியின்
குணம் தெரிகிறது......

வலையுகம் said...

சகோ மாலதி

///பல இலட்சம் ஈழத் தமிழரை கொன்ற கொலைகாரன் ஆட்சியில் தமிழர்கள் தங்களின் நாட்டுபுற கடவுள் நம்பிக்கைகளுக்குஆடுகளையும் , கோழிகளையும் பலியிட கூடாதாம் . ஏனெனில் கொலை பாவமான காரியமாம் ஏன்டா நாய்களே உங்களுக்கே வெட்கமாக தெரியவில்லையா?//

சரியான கேள்வி சூப்பர் ஆனால் ஒரு திருத்தம் ஏண்டா வெறிநாய்களே என்று இருக்க வேண்டும்.

அவிய்ங்கே வெறும் நாய்களல்ல வெறிநாய்கள் பெண்களையும் குழந்தைகளையும் கடித்து குதறிய வெறிநாய்கள்

ரிஷபன் said...

நட்பிற்கும்
உறவிற்க்குமான
போராட்டத்திலும்
நட்பையே விரும்புகிறாய்.

அருமை.


// ஏனெனில் கொலை பாவமான காரியமாம்//

ஹா.. அட.. யார் சொல்வது இதை.

கவி அழகன் said...

நானும் ஆயத்தமாய் உள்ளேன்

அறிவுரை சொல்லிற ஆள பார் கொலைகாரன்

வலையுகம் said...

மாலதி அவர்களே இன்னும் தமிழ் 10ல் இணைக்கவில்லையா

இணைத்து விடுங்கள் அனைவரிடமும் இந்த பதிவு போய் சேர வேண்டும்

கோகுல் said...

naangalum samathuva ulagai kaana aayathamaai irukkirom!

kobiraj said...

''பல இலட்சம் ஈழத் தமிழரை கொன்ற கொலைகாரன் ஆட்சியில் தமிழர்கள் தங்களின் நாட்டுபுற கடவுள் நம்பிக்கைகளுக்குஆடுகளையும் , கோழிகளையும் பலியிட கூடாதாம் . ஏனெனில் கொலை பாவமான காரியமாம் ஏன்டா நாய்களே உங்களுக்கே வெட்கமாக தெரியவில்லையா?''
சாட்டைஅடி .

kobiraj said...

உங்கள் அறிமுகம் கிடைத்ததில் மகிழ்ச்சி ஓட்டு போட்டாச்சு

MANO நாஞ்சில் மனோ said...

ஏன்டா நாய்களே உங்களுக்கே வெட்கமாக தெரியவில்லையா?//

நாய்களுக்கு வெக்கம் கிடையாது சரியா....???பிஞ்ச செருப்புதான் சரி கொய்யால....

அம்பாளடியாள் said...

பல இலட்சம் ஈழத் தமிழரை கொன்ற கொலைகாரன் ஆட்சியில் தமிழர்கள் தங்களின் நாட்டுபுற கடவுள் நம்பிக்கைகளுக்குஆடுகளையும் , கோழிகளையும் பலியிட கூடாதாம் . ஏனெனில் கொலை பாவமான காரியமாம் ஏன்டா நாய்களே உங்களுக்கே வெட்கமாக தெரியவில்லையா?

நியாயமான காரமான கேள்வி .நன்றி சகோ பகிர்வுக்கு ...

Yaathoramani.blogspot.com said...

அவர் தேர்தெடுத்ததெல்லாம் மிகச் சிறந்தவையே
இந்தக் கவிதையைப் போலவே
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

கதம்ப உணர்வுகள் said...

மனதில் இருப்பது வெளிக்கொட்டுகிறது...

எண்ணங்களின் தூய்மை...
நேர்மையின் வாய்மை....

எதிர்ப்பவர்களை கொன்றுகுவித்தவன் இன்று ஊளையிடுவதை கேட்டால் விந்தையாக தான் இருக்கிறது..

அருமை மாலதி, அன்பு வாழ்த்துகள்பா... சீரிய சிந்தனைகளை கவிதையில் வடித்திருப்பது சிறப்பு.. தரமான படைப்பு...

சென்னை பித்தன் said...

அவைகளுக்கேது வெட்கம்?

RAMA RAVI (RAMVI) said...

கொலை பாவமான காரியம் என்பதை யார் சொல்கிறார்கள்?

ராஜா MVS said...

தமிழ் 10ல் இணைத்துவிட்டேன்..சகோ..

நல்ல சிந்தனை கவிதை வடிவில்.. வாழ்த்துகள்..


அவன் ஒரு மிருகம் என்பதை இந்தச் செயலின் மூலம் உறுதிப்படுத்துகிறான்...

K.s.s.Rajh said...

நல்ல மனதைத்தொடும் கவிவரிகள்

முனைவர் இரா.குணசீலன் said...

நல்லாக் கேட்டீங்க மாலதி..

குறையொன்றுமில்லை. said...

சாத்தான் வேதம் ஓதுகிரது.

பிரணவன் said...

இப்பொழுதும் கூட இவன் சட்டம் தமிழன் மீதும் அவனின் நம்பிக்கை மீதும் தான் பாய்கின்றது. . .கிடா வெட்டுபவனுக்கு ஆடுகளின் அழுகைச் சத்தம் கேட்காது. . .தமிழனின் இரத்தம் உருஞ்சியதால் என்னவோ இவனுள் இப்படியான இரக்கம். . .

அ. வேல்முருகன் said...

எல்லோரும்
எதை தேர்ந்தெடுக்க வேண்டுமென
எளிமையாய் உணர்த்தியுள்ளது
தங்கள் கவிதை

வாழ்த்துக்கள்

மாலதி said...

@ஹைதர் அலிஐயனே நான் உமது உணர்வுகளை மதிக்கிறேன் வருகைக்கு உளம் நிறைந்த பாராட்டுகள் நன்றி.

மாலதி said...

@ராஜா MVSதமிழ் 10ல் இணைத்தமைக்கு உளம் நிறைந்த பாராட்டுகள் உங்களின் முதல் அறிமுகத்திற்கும் நன்றி . வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி பாராட்டுகள் தொடர்ந்து வருகைதர வேண்டுகிறேன் .

பாலா said...

கடைசி வரி ஒன்று போதும்... அருமை.

Unknown said...

புத்தம் சரணம் கச்சாமி-இந்த
போலிகள் அறியார்! ஆம்மகளே
வெட்கம் சூடு சொரணையில்லா
வெறிநாய் அறியார் நல்மகளே கருத்தது மிக்க கவிதை-நல்ல
கனிதரும் சுவையாம் கவிதை
பொருத்தமே சொன்ன விதமேபொருள்
பொதிந்திட வந்த பதமே
நன்று நன்று! நன்றி!

புலவர் சா இராமாநுசம்

துபாய் ராஜா said...

நியாயமான அறச்சீற்றம்.

Anonymous said...

சரியான கேள்வி ...பகிர்வுக்கு நன்றி ...

Anonymous said...

""நீ
சமத்துவ உலகை
காண கனவு
காண்பது புரிகிறது""
நல்ல வரிகள்..
பாராட்டுக்கள்
தோழி

Anonymous said...

நல்ல கேள்வி...

மாலதி said...

வருகைக்கும் தரமான கருத்துகளுக்கும் பணிவான வணக்கங்களும் ப்ரட்டுகளும் தனித்தனியே அழைக்க இயலவில்லை பொறுத்தருள்க.

எஸ் சக்திவேல் said...

>கொன்ற கொலைகாரன் ஆட்சியில் தமிழர்கள் தங்களின் நாட்டுபுற கடவுள் நம்பிக்கைகளுக்குஆடுகளையும் , கோழிகளையும் பலியிட கூடாதாம் . ஏனெனில் கொலை பாவமான காரியமாம் /

சாட்டையடி!