இராஜஇராஜேஸ்வரி அவர்கள் வழங்கிய விருது

இராஜஇராஜேஸ்வரி  அவர்கள்  வழங்கிய  விருது

Saturday, 24 September 2011

மின்னஞ்சல் விடு தூது

மின்னஞ்சலே ...
என் பாட்டுடைத்தலைவனிடம்
இருந்தான செய்தி
விரைந்து  கொண்டுவா
நான் வேட்கையுடன்
காத்திருக்கிறேன்.

நாளது   தேதிவரை
சேதியில்லை.

என் மன்னவன்
மாலையுடன் வருவான் 
என மாலைவரை
காத்திருந்தேன் .
மாலையுமில்லை என்
மன்னவனுமில்லை

இரவாகிப்  போனது .

இருட்டு ...
அச்சத்தையும்  தரும்
இச்சையையும் தரும்
இரண்டும் கொடுமையானது
தீர்வுமட்டும்  ஒன்று என்னவன்.

ஏட்டில் எண்ணங்களைப்
பதிக்கலாம் ...
எண்ணுனர்வினை  எப்படிப்
பதிப்பேன் .நீ
அறிவாயா?

அவரின் அடையாளம்
கேட்டாய்
நேர்மை அவர்பாதை
உண்மை அவர்பேச்சு
சமூகநலன்அவர்கொள்கை
இப்படித்தான்  என்னுள்ளத்தில்
அவர் ...

தேடு மின்னஞ்ச்சலே
விரந்துதேடு
நெஞ்சத்தில் உள்ள
அவரை  நிசத்தில் கொண்டுவா.

      தூதுப்  பிரபந்தங்கள்  கலி வெண்பாவிற்  செய்யப் படுத்தல்  வேண்டும் 
என்பது இலக்கணம் .நமக்குஅது தெரியாது  என்பதால்  / இந்த நறுக்கு (புதுக் கவிதை
) களுக்கு இலக்கணம்  இன்மையால்  உங்கள் முன்  வாசிக்கப் படுகிறது .  

  

38 comments:

M.R said...

முன்பு புறா,மற்றும் பல .

இப்பொழுது மெயில் நல்ல உவமை

அருமை

இதை படிக்கும் பொழுது எனக்கு ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது

கனவுகளே கனவுகளே
கலைந்து செல்லுங்கள்
என் கண்மணியைக் கண்டால்
என் காதல் சொல்லுங்கள்

என்ற பாடல் நினைவிற்க்கு வருகிறது

கவி அழகன் said...

இருட்டு ...
அச்சத்தையும் தரும்
இச்சையையும் தரும்
இரண்டும் கொடுமையானது
தீர்வுமட்டும் ஒன்று என்னவன்.

இந்த அமைப்பு அம்சமா இருக்கு எனக்கு பிட்சிருக்கு

vetha (kovaikkavi) said...

தூதுப் பிரபந்தங்கள் போல சிறப்பாக வரிகள் இருக்கிறது சகோதரி. மிக எளிமையாக உள்ளது. வாழ்த்துகள். நலமாக உள்ளீர்களா? உங்களைக் காணோமே என் பக்கத்தில்! நலமுடன் வாழ இறையருள் கிட்டட்டும்.
வேதா. இலங்காதிலகம்.

கோகுல் said...

சங்க காலத்தையும் சமகாலத்தையும்
இணைக்கும் அருமையான கவிதை வாழ்த்துக்கள்!

கதம்ப உணர்வுகள் said...

மனதின் ஏக்கங்களை படைப்பதில் கூட எத்தனை தூய்மை....

நேர்மையானவன்
உண்மையானவன்
அவனே என் மன்னன்

அழகிய வரிகள் சொல்லி செல்லும் தூது கவிதை மிக சிறப்பு மாலதி...

அன்பு வாழ்த்துகள்...

Unknown said...

முதல் ஓட்டு மகளே!

மின்னஞ்சல் விடு தூது
மின்னலென மறையாது
கன்னலிது கவிச்சாறு
அன்னமென நடைபோடும்
அழகுமயில் போலாடும்

புலவர் சா இராமாநுசம்

SURYAJEEVA said...

இலக்கியம் இலக்கியத்திற்கு என்றில்லாமல் மக்களுக்கு என்று பரிணாமம் எடுத்த முயற்சி...

மாலதி said...

@suryajeevaமிகவும் சரியாக புரிந்து கொண்டமைக்கு உளம் நிறைந்த பாராட்டுகளும் நன்றிகளும்

MANO நாஞ்சில் மனோ said...

தேடு மின்னஞ்ச்சலே
விரந்துதேடு
நெஞ்சத்தில் உள்ள
அவரை நிசத்தில் கொண்டுவா.//

ஹா ஹா ஹா ஹா அருமையான தேடல், எண்ணம் ஈடேற வாழ்த்துக்கள்...

ராஜா MVS said...

இன்றைய மக்களுக்கு புரியும்படியான இலக்கிய வடிவில் தாங்கள் கவிதை அமைத்த விதம் அருமை.. சகோ..
வாழ்த்துகள்...

ராஜா MVS said...

தமிழ்10ல் இணைத்துவிட்டேன்.. சகோ..

எம்.ஞானசேகரன் said...

நல்ல கவிதை. அப்படியே உணர்வுகைப் பிரதிபலித்திருக்கிறீர்கள்!

K.s.s.Rajh said...
This comment has been removed by the author.
K.s.s.Rajh said...

@மின்அஞ்சல் மூலம் தூது நவீன தேடல் கவிதை சூப்பர் பாராட்டுகள் சகோதரி

வை.கோபாலகிருஷ்ணன் said...

//அவரின் அடையாளம்
கேட்டாய்
நேர்மை அவர்பாதை
உண்மை அவர்பேச்சு
சமூகநலன்அவர்கொள்கை
இப்படித்தான் என்னுள்ளத்தில்
அவர் ...//

உங்கள் மென்மையான உள்ளத்தில் அவர் பற்றிய உயர்ந்த அடையாள மெல்லாம் சரி தான்.

இந்த அடையாளங்கள் உள்ளவர் கிடைப்பது ரொம்பவும் கஷ்டமாச்சே!

பாவம் அந்த தூது செல்லும் மின்னஞ்சல்.

மிகச்சிறந்த பதிவு. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நட்புடன் vgk

RAMA RAVI (RAMVI) said...

மின்னஞ்சல் விடு தூது.அருமை.
//ஏட்டில் எண்ணங்களைப்
பதிக்கலாம் ...
எண்ணுனர்வினை எப்படிப்
பதிப்பேன் .நீ
அறிவாயா?//
இந்த வரிகள் அருமை.

KParthasarathi said...

மிகவும் நேர்த்தியாக உள்ளது உங்கள் கவிதை.

இராஜராஜேஸ்வரி said...

தேடு மின்னஞ்ச்சலே
விரந்துதேடு
நெஞ்சத்தில் உள்ள
அவரை நிசத்தில் கொண்டுவா.


மின்னஞ்சல் விடு தூது புதுமைப் பகிர்வு. பாராட்டுக்கள்.

காட்டான் said...

அருமயான கவிதைப்பகிர்வுக்கு நன்றி சகோதரி கால மாற்றத்தில் மாற்றம் என்ற சொல்லைத்தவிர எல்லாமே மாறவேண்டும்..!!!??

மாய உலகம் said...

நாகரீக உலகில் மின்னஞ்சலில் தூது ...உங்கள் மன்னவனுக்காக... விரைவில் அந்த நல் உள்ளத்திடம் மின்னஞ்சல் சென்று சேரட்டும்... வாழ்த்துக்கள்.. கவிதை கலக்கல்

vidivelli said...

/அவரின் அடையாளம்
கேட்டாய்
நேர்மை அவர்பாதை
உண்மை அவர்பேச்சு
சமூகநலன்அவர்கொள்கை
இப்படித்தான் என்னுள்ளத்தில்
அவர் .../

அப்படியேதான் என் உள்ளத்திலும் அவர்..

வருடங்கள் இரண்டு கடந்தும் இன்றுவரைக்கும் எதுவுமே காணவில்லை அந்த மன்னவனைப்பற்றி என்ற ஏக்கம் கவிதையில் புரிந்துகொண்டேன்.
இயலாத கட்டத்தில் மின்னஞ்சலிடம் கொடுத்துவிட்டீங்களா?
இதுவே தான் எனது ஏக்கமும் இனி வரவே மாட்டாரா?காணவே மாட்டோமா?என்ற ஏக்கம் முழைவிடத்தொடங்கிவிட்டது பலர் மனதில்.பார்த்து பார்த்து பெருமூச்சை மட்டும் வெளித்தள்ளியபடி காத்திருப்போம் அன்புச்சகோதரியே!!

நிரூபன் said...

இனிய காலை வணக்கம் சகோதரி,

மாறி வரும் தொழில்நுட்பத்திற்கு அமைவாக காதலும் மாற்றம் பெறுகின்றது என்பதனை, மின்னஞ்சலுக்காக காத்திருக்கும் காதலனைக் காணாது ஏங்கும் பெண்ணின் உணர்வுகளை கவிதையில் பகிர்ந்திருக்கிறீங்க.

நல்லதோர் கவிதை.

Muruganandan M.K. said...

மின்னங்சலில் தூதுப் பிரபந்தம். அற்புதமாக இருக்கிறது.

பாலா said...

சங்க புலவர்கள் எல்லாவற்றையும் தூது விட்டார்கள். தற்போது இருந்தால் மின்னஞ்சலையும் தூது விட்டிருப்பார்கள். அந்த குறையை நீங்கள் தீர்த்து விட்டீர்கள்.

மாலதி said...

நூரைத் தொட்டுவிட்ட பின்தொடர்வரில் எல்லோரையும் அந்த நூறாவது பின்தொடர்கிரவரை சேர்த்து வணங்கி வரவேற்கிறேன் .மாய உலகம் அந்த நூறாவது பதிவர் .

பிரணவன் said...

ஏட்டில் எண்ணங்களைப்
பதிக்கலாம் ...
எண்ணுனர்வினை எப்படிப்
பதிப்பேன் . . .
அருமையான வரிகள் mam. . .

அ. வேல்முருகன் said...

ஏட்டில் அல்ல
வலைதளத்தில் அருமையாய் பதித்தீர். ஆயினும் அந்த நேர்மையும், உண்மையும், சமூக அக்கரையும்
சமரசமாக்கும் போது..........

நிலவும் சூழலோ
நீடித்திருக்க தேவையோ
என்னவென்று சொல்வது

Anonymous said...

அருமையான கவிதை... வாழ்த்துக்கள்...

மாய உலகம் said...

ஆஹா செஞ்சுரி போட்டது நாந்தானா... கவனிக்கவில்லையே... வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்... நூறு பல்லாயிரங்களாகட்டும் .. வாழ்த்துக்கள்.. மீண்டும் சகோ விடிவெள்ளி செம்பகத்துக்கும் , உங்களுக்கும் இந்த கவிதையில் எதிர்பார்ப்பவர் விரைவில் கைக்கூடட்டும் வாழ்த்துக்கள்

rajamelaiyur said...

சூப்பர் கவிதை

பிலஹரி:) ) அதிரா said...

அலட்டல் ஏதுமில்லமல் சோட் அண்ட் சூட்டாக ஒரு கவிதை.... சூப்பர்.

Anonymous said...

ஒவ்வொரு வரியும் ஏக்கம் நிறைந்ததா இருக்கு....

நிறைய வரிகள் பிடிச்சிருந்தது...
""அவரின் அடையாளம்
கேட்டாய்
நேர்மை அவர்பாதை
உண்மை அவர்பேச்சு
சமூகநலன்அவர்கொள்கை
இப்படித்தான் என்னுள்ளத்தில்
அவர் ...""
உண்மைதான்... நன்றி தோழி

Unknown said...

அருமையான கவிதை அழகு மிகவும் பிடித்துள்ளது

சுதா SJ said...

சூப்பர் கவிதை... ரெம்ப அழகா இருக்கு... வாழ்த்துக்கள்.

கா.ந.கல்யாணசுந்தரம் said...

கவிதையின் சிறப்பு

காலம் கடந்து நிற்கும்.

பாராட்டுகள்.

jalli said...

ippaththaan unga blogai paarththean. muthal kavithai sumaar.marravai arputham.
"padimam,kuriyeedu endru puthukkavithaikkum ilakkanam undu"puthukkottai mannarkalluril peraasiriya iruntha, bala avarkal
elzhuthiya "puthukkavithai oru puthupaarvai" endra puthakam kidaiththaal vaanki padiththu paarunkal.allthe best.sister.

by. jallipatty palanisamy.kovai dt.
"

KParthasarathi said...

இலக்கணத்தை யார் கேட்டார்கள்.?வார்த்தைகளிலே நளினம் என்ன,எதுகை மோனை என்னை,அறிவு செறிந்த அர்த்தங்கள் என்ன,உங்கள் கவிதைகள் ஆர்வத்துடன் படிக்ககூடிய படைப்புகள்.நிறைய எழுதுங்கள்

jalli said...

malathikku ezhuththu nalla varuthu.
athai meampaduththavendum.
"nanpar.k.parththasarathikku..
malathin kavithakalai moththamaakp
padiththuvittu. pin oottam ittungal. ethukai,monai ellam marapu kavithaikkuththaan. malathi
kavithaikaLil 'enkum ethukai monai
illai.irukkavum koodaathu."
-athuthaan puthikavithai.
"mealum puthukkavithaikku ilakkanam
illai endru malathi kurippittuirunthaaar. atharkuththaan naan pathil solliyirunthean.
--g.palanisamy.senior reporter,
pasumaivikatan.kovaimandalam.