இராஜஇராஜேஸ்வரி அவர்கள் வழங்கிய விருது

இராஜஇராஜேஸ்வரி  அவர்கள்  வழங்கிய  விருது

Monday, 13 February 2012

காதலர்  நாள் 
கற்கவேண்டிய அகவையில் 
கல்வி கற்காமல் 
காதலில்  வீழ்ந்து 
வெம்மியும் போகவைக்கிறது .

முறையான அகவையில் 
பொருட் காரணங்களுக்காய் 
வாழ்வு கிட்டாமல் 
விம்மவும்  செய்கிறது.

இது 
தனியுடமைக்  குமுகம்.
"தானே " போல 
விரைந்து  வந்து 
அழிந்தும்  போகிறது 
அழிக்கவும்  செய்கிறது.

உடல்மட்டும்   இணைவதல்ல
உள்ளமும்  கூடவே 
கள்ளமும் இன்றி 
பள்ளமும்  நீக்கி 
சங்க  மிப்பது
உயிர்ப்பான  காதல்.

உடலால்  வருவது காமம் 
உள்ளத்தால்  இணைவதுகாதல்.
இது  கம்பன் .

அழியாக் காதலில் 
பொருளோ 
இனக்கவற்சியோ
முதன்மை  வகிப்பதில்லை.

விரைந்தொட்டும் பசைபோன்ற 
இனக்கவர்ச்சியை  இனங்காண்போம் 
உண்மைக்காதலை 
கற்றுக்  கொள்வோம் 
கற்றுக் கொடுப்போம் .

நேர்மைக் காதல் 
வெல்லட்டும் . 

            தமிழன்புடன் ....... உங்கள் மாலதி .

       இராஜஇராஜேஸ்வரி  அவர்கள் நமக்கு   தொடர்  வரிசையில் விருது வழங்கியுள்ளார்  அவருக்கு எமது பணிவான நன்றியும் பாராட்டுகளும் .
நானும்  தொடர்  விருதிற்கு ...

1  தீதும்  நன்றும்  இரமணி  ஐயா
2 . புலவர்  ஐயா  அவர்கள் .www.pulavarkural.info
3 வசந்த மண்டபம்  மகேந்திரன்  அவர்கள் .
4 கவியழகன் அவர்கள் .www.kavikilavan.blogspot.in
5  மனவிழி சத்ரியன்          அவர்களுக்கு  விருதுகளை வழங்கி  தொடர்  விருதிற்கு  அழைக்கிறேன் .

மேலும் கூட்டுதல் விவரங்கள்  அடுத்த இடுகையில் .


 

21 comments:

சத்ரியன் said...

காதலர் தின வாழ்த்துக்கள்.

உண்மை காதல் வெல்லட்டும்.

மனசாட்சி said...

உண்மை காதலுக்கு காதலர் தினம்

புலவர் சா இராமாநுசம் said...

//உடல்மட்டும் இணைவதல்ல
உள்ளமும் கூடவே
கள்ளமும் இன்றி
பள்ளமும் நீக்கி
சங்க மிப்பது
உயிர்ப்பான காதல்.//

அரியதான வரிகள் -காதலுக்கு
உரியதான நெறிகள்!
நன்று மகளே! நன்றி!

புலவர் சா இராமாநுசம்

அ .செய்யது அலி said...

நாளை காதலர் தினம் என்பதால் எல்லாப் பிளாக்கிலும் காதல் கவிதைகளாய் கொட்டுகிடக்குது
ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு தனி ஆளுமையுடன் நல்ல கருத்துக்களுடன்
உங்களின் இந்தகவிதையும் சிறந்த கருத்தைச் சொல்லும் அழகிய காதல் கவிதை
நன்றி தோழி

Ramani said...

மனம் சார்ந்த காதலுக்கும்
உடல் மற்றும் பணம் சார்ந்த காதலுக்குமான
வித்தியாசத்தை மிக நேர்த்தியாகச் சொல்லிச் செல்லும்
தங்கள் பதிவு அருமை
தொடர வாழ்த்துக்கள்

Anonymous said...

நேர்மைக் காதல் வாழ்க என அழுந்த சொல்லி இருப்பது
தேவையான் ஒன்று இக்காலகட்டத்தில்.
விருது பெற்றமைக்கு உளமார்ந்த வாழ்த்துக்கள்.

ராஜி said...

உண்மை காதல் எந்த எதிர்ப்பு வந்தாலும் தாங்கி நிற்கும்.

ராஜி said...

உங்க எழுத்துக்கு ஒரு சின்ன அங்கீகரம் என் வலைப்பூவில்.., நேரம் கிடைக்கும்போது வருகை தரவும் சகோதரி
http://rajiyinkanavugal.blogspot.com/2012/02/blog-post_13.html

ராஜி said...

உங்க எழுத்துக்கு ஒரு சின்ன அங்கீகரம் என் வலைப்பூவில்.., னேஎர்மகிடைக்கும்போது வருகை தரவும் சகோதரி
http://rajiyinkanavugal.blogspot.com/2012/02/blog-post_13.html

RAMVI said...

//உண்மைக்காதலை கற்றுக் கொள்வோம் கற்றுக் கொடுப்போம் .
நேர்மைக் காதல் வெல்லட்டும் .//

அருமையாக இருக்கு இந்த வரிகள்.சிறப்பான கவிதைக்கு நன்றி.

விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.

guna thamizh said...

அழகாகச் சொன்னீர்கள்..

விச்சு said...

கணவனும் மனைவியும் காதலிப்பதுதான் நேர்மைக்காதல்.

Anonymous said...

உண்மைக் காலிற்குக் காதலர் தினம் போதாது. காலமெல்லாம் காதலர் தினம் தானே!
காதலர்தின வாழ்த்துகள்!
காதல் பூந்தோட்டத்திலிருந்து
வேதா. இலங்காதிலகம்.

விக்கியுலகம் said...

காதல் எனும் விஷயத்துக்கு தினம் தினம் காதலர் தினமே!

ஹைதர் அலி said...

அருமையான கவிதை சகோ

மகேந்திரன் said...

அன்பு சகோதரி மாலதி,
முதற்கண் நீங்கள் விருது பெற்றமைக்கு என் வாழ்த்துக்கள்.
தொடர் விருதுக்காக என்னை தேர்ந்தெடுத்தமைக்கு
மிகுந்த நன்றிகள்.

உள்ளத்தின் தூய உணர்வோடு காதலை
நேசிக்கும் அறுபுதமான கவிதை சகோதரி.

ஹைதர் அலி said...

காதலில் வீழ்ந்து
வெம்மியும் போக வைக்கிறது

சரியாக சொன்னீர்கள் சகோ

ஹேமா said...

அன்பான காதல் வாழ்த்துகள் மாலதி.உண்மைக் காதல் என்றும் வாழும்.இனிக்கும் !

பாலா said...

உண்மைக்காதல் தோற்கவே தோற்காது. ஆனால் இப்போதிருப்பதெல்லாம் சும்மா பேன்சி காதல்தானே? அவற்றை காதல் வரிசையிலேயே சேர்க்க கூடாது. புகை, குடி மாதிரி கேட்ட பழக்கங்களில் வேண்டுமானால் சேர்த்துக்கொள்ளலாம்.

இராஜராஜேஸ்வரி said...

காலமெல்லாம் வழும் அருமையான கவிதைக்கு வாழ்த்துகள்..

பட்டிகாட்டு தம்பி said...

கவிதை வரிகள் அருமை.
நன்றி.