இங்கு ...
குறிப்பாக தமிழகத்தில்
நடக்கும் தவறுகளை
சுட்டிக்காட்டுகிறேன்.
இனவாதம்
பேசவில்லை
தமிழர் நலன்
பேசுகிறேன்.
தமிழரின் கலைகளை
போற்றுகிறேன் ...
பின்பற்றுகிறேன் ...
வணங்குகிறேன் ...
அறிமுகப் படுத்துகிறேன்
தொடரக் கோருகிறேன் .
அரசாக இருந்தாலும்
இல்லாத ...
ஆண்டவனாக இருந்தாலும்
செய்வது பிழைஎனத்
தெரிந்தால்
குன்றின் மீதேறி
குற்றம் சாட்டுகிக்றேன்.
என் அகவையையொத்த
இளைய சமூகத்திற்கு
நல்வழிக் காட்டுகிறேன்.
ஆண்தான் அரசியலும்
வீரமும் பேசவேண்டுமா
என்ன?
பாண்டிய மன்னன்
அவைக்களத்தில்
தேராமன்னா !
செப்புவது ஒன்றுடையேன்
என்றாளே என் தமிழன்னை
கண்ணகி பெண்தானே ?
போற்றுவோர் போற்றட்டும்
புழுதிவாரி தூற்றுவோர்
தூற்றட்டும்.
என் கடன்
பணி செய்து கிடப்பதே.
தமிழன்புடன் உங்கள் மாலதி .
16 comments:
இல்லாத ஆண்டவன் இல்லை என்று ஆன பிறகு இருப்பதை கற்பனை கூட வேண்டாமே தோழர்
மற்றபடி உங்கள் சுய அறிமுகம் அனைவரும் அறிந்ததே
வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடர
யாரென்ன சொன்னாலும் நீங்க உங்க வழியில் செல்லுங்கள் சகோ!
பேசுவது
நம் உரிமை..
தட்டிக்கேட்பது
நம் கடமை
இதில்
பால் வேறுபாடு இல்லை...
கொளுந்து விட்டெரியும்
தீக்கனல் சொற்களால்
தீயவைகளையும்
தீயவர்களையும்
கொளுத்திப்ப் போடுவோம் வாருங்கள் ..
சிலம்பை கைகொண்டு
நீதி கேட்டு
செவ்வாதம் புரிந்த
சித்திரப்பாவை கண்ணகி போல்
ஆயிரம் ஆயிரம் வித்துக்கள்
விளையட்டும் இப்புவியில்...
தூற்றுபவர்கள் தூற்றட்டும்...
நீங்கள் சளைக்காமல் போராடுங்கள் :-)
வரிகளின்
சொல் தோரணங்கள்
அருமை
பணிசெய்துகிடக்கிற கடன் எப்போதிலும் இனித்துகிடப்பதாக/வாழ்த்துக்கள்,நல்ல பதிவு.
பணிசெய்துகிடக்கிற கடன் எப்போதிலும் இனித்துகிடப்பதாக/வாழ்த்துக்கள்,நல்ல பதிவு.
தமிழ் கலைகள் அழிகின்றன அதை பாது காப்பது தமிழர் எம் கடமை
பிறரின் மட்டம் தட்டும்படியான விமர்சனங்களை நாம் கண்டுகொள்ளவே தேவை இல்லை. நம் எழுத்துக்கள் நேர்மையாக இருக்கும்வரை எதற்கும் பயப்படத்தேவை இல்லை. தொடருங்கள்.
நம் சிந்தனை நேராக இருந்தால் யாருக்கும் தலை குனிய வேண்டியதில்லை சகோதரி. என்ன விடயம் என்று புரியவில்லை பொதுவான கருத்தாகக் கூறுகிறேன். நானும் வெளிப்படையாகப் பேசுபவள் சிலருக்குப் பிடிக்காது.
நல்லது நடக்கட்டும்.
வேதா. இலங்காதிலகம்.
போற்றுவோர் போற்றட்டும்
புழுதிவாரி தூற்றுவோர்
தூற்றட்டும்.
என் கடன்
பணி செய்து கிடப்பதே.
அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..
அரசாக இருந்தாலும்
இல்லாத ...
ஆண்டவனாக இருந்தாலும்
செய்வது பிழைஎனத்
தெரிந்தால்
குன்றின் மீதேறி
குற்றம் சாட்டுகிக்றேன்.
>>>
இந்த தைரியம் எல்லாருக்கும் வந்துடாது. குற்றம் சாட்டுங்கள் தங்கச்சி. இனியாவது இச்சமுதாயம் திருந்துதான்னு பார்ப்போம்.
இதற்கெல்லாம் யோசித்தால்....சமூகச் சிக்கல்கள் இன்னும் சொல்ல நிறையவே இருக்கிறது மாலதி !
நினைப்பதைக் கூறும் கூர்மை
நிதர்சனம் உணர்த்தும் நேர்மை
சிறப்பான கவிதை மாலதி.
பீடு நடை போடுங்கள் சகோதரி .
இந்த உலகம் உங்களுடையது.
Post a Comment