எவைஎல்லாம்நோவைத்தருமோ
அவற்றை எல்லாம்
தொடுவதுமில்லை
தொடர்வதுமில்லை நீ .
எதுஎல்லாம்
இந்த குமுகத்தை
சீரழிக்குமோ
அவற்றை எல்லாம்
எதிர்ப்பவன் நீ .
தன்னலத்தைப்
புறந்தள்ளி
பொதுநலத்தை
முன்னெடுக்கிறவன் நீ.
முறையான கல்விதான்
கண்ணீரை விரட்டும்
"மா" மருந்து என்கிறாய் .
அதனால்தான் -உன்
பாதம்
காட்டும் பாதையை
தொடர்கிறேன் அன்பனே .
18 comments:
தலைப்பும் அதற்கான காரண விளக்கமாக அமைந்த
கவிதையும் அருமையிலும் அருமை
தொடர வாழ்த்துக்கள்
சிந்திக்க வைக்கும் கவிதை தொகுப்பு
நீங்கள் கூறும் சமூகம் அமைந்தால் குற்றங்கள் இன்றி அமைதியாக மாறும் இந்த நாடு
அருமையான கவிதை வாழ்த்துககள்..
உங்கள்
கவிதை வரிகளில் வாழும்
அந்த உருவச் சித்திரம்
நிஜமாய் உயிர்த்தெழட்டும்
சமூகத்தில்
கவிதை அருமை பாராட்டுக்கள் தோழி
அப்படி பட்டவனை மக்கள் அனைவரும் தொடர்வார்கள் என்பது தான் வரலாறு
எல்லோரும் இப்படி நல்லவராக இருந்தால் பிரச்சனையே இல்லை
தொடர எத்தனிக்கும்
சுவடு
மிக நன்று என்பதே
சரி...
சரியாக முடிவெடுக்கும்
சுவடுகளின் தடங்களை
சுவாசித்துச் செல்லலாம்....
"உன்னைத் தொடர்வதேன்" என்று யோசித்தேன்.நல்ல கவிதைகள் தருவதால்தான் என்று பதில் கண்டேன்.
மாலதி அவர்களுக்கு
//தன்னலத்தை புறந்தள்ளி பொதுநலத்தை
முன்னெடுக்கிறவன் நீ//
உங்கள் கவிதை பதிவுகளும் பொது நலத்தை முன்னெடுக்கின்றன
அரட்டை வெட்டி பொழுதுபோக்கு போன்ற தன்னலத்தை பின்னூக்கு தள்ளுகின்றன வாழ்த்துக்கள் சகோ
முறையான கல்லிதான் கண்ணீரை விரட்டும் மாமருந்து இக்கருத்து நிச்சயம் உண்மை அக்கா
நல்ல எண்ணங்கள் தொடரும் மனிதர்களால்தான் நல்ல சமூகம் உண்டாகிறது.நல்ல சிந்தனை சொல்லும் கவிதை !
நல்ல கவிதை வாழ்த்துக்கள்.
நல்ல சிந்தனை... நல்ல கவிதை...தொடருங்கள் சகோதரி...
முறையான கல்வியால் கண்ணிர் மட்டுமல்ல எத்தனையோ வெல்லலாம். நல்ல சிந்தனை. வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
வரிகளுக்கு ஏற்ற மனிதன் கிடைப்பது அரிதே .
இது காதல் கவிதையா?
முறையான கல்விதான்
கண்ணீரை விரட்டும்
"மா" மருந்து ஐயமில்லாத உண்மை!
அருமையான கவிதை வரிகள்.. பாராட்டுக்கள்..
படமும் கவிதையும் அருமை சகோதரி . வாழ்த்துக்கள்
Post a Comment