தீமைகளை எதிர்த்தான
நல்லவர்களின் கைக்கோர்த்தலும்
ஒற்றுமையின்மையும் தான்
அறம்(நீதி ) அழிவதற்கு
மூகமையான காரணம் .
எய்ச்சுகிறவன் இருவர்
பாதிக்கப் படுவது
பலர் கோழைத்தனம்
தானே எதிர்க்கமை?
தீயவர்களின்
தீமையால் அல்ல
நல்லவர்களின்
கோழைத்தனத்தால் தானே
அறம் விலைபேசப்
படுகிறது ?
நல்லவனாக.....
கோழையாக ...
வாழ்வதைவிட
வீரனாக வாழ்வதே
நாட்டுக்கும் நல்லது
வீட்டுக்கும் ஏற்றது .
தீயதை ஒன்றுகூடி
எதிர்ப்போம்
நல்லதை பாராட்டி
மகிழ்வோம் .
13 comments:
நல்லவனாக.....கோழையாக ...
வாழ்வதைவிட வீரனாக வாழ்வதே
நாட்டுக்கும் நல்லது வீட்டுக்கும் ஏற்றது
சிறப்பான வரிகள்.. பாராட்டுக்கள்..
சரியாக சொன்னிர்கள்.
அருமையான பதிவு
கோழையாக வாழ்வதைவிட
வீரனாகச் சாவதே சாலச் சிறந்தது
இன்றைய நிலையில் அனைவருக்கும் தேவையான
அருமையான கருத்தை வலியுறுத்திப்போகும் பதிவு அருமை
பகிர்வுக்கு நன்றி
நல்லதையும்,நல்லவர்களையும் அவர்களது செயலையும் பாராட்டி மகிழ்வோம்/நன்றி,வணக்கம்/
வீரனாக வாழ்வதே நாட்டுக்கு நல்லது சிந்திக்க வைக்கிறது....
நிறைய
மனித மனங்களை
தட்டி உணர்த்தும் வினா
இங்கு
நமக்கென்ன என்றுதான்
நிறைய மனிதர்கள்
வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்
கோழையாகவே
கோழையாக பலநாள் வாழ்வதைவிட
வீரனாக ஒருநாள் வாழ்வதே விரம்
சமூகத்தை நோக்கி நீங்கள் எழுப்பும் ஒவ்வொரு வினா கவிதையும் அருமை
பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் தோழி
நைவினை நணுகேல் எனக் கூறினாலும்
சிலவற்றை கண்டு ரௌத்திரமும் பழக வேண்டும்....
விவேகமுள்ள வீரம் குருதியில்
விளைந்திருக்க வேண்டும்....
//நல்லவர்களின்
கோழை தனத்தால்
அறம் விலை பேசப்படுகிறது//
உண்மைதான் மாலதி.
இங்கே எல்லாரும் நல்லவர்களாக காட்டிக்கொள்ளும் முயற்சியில் கோழைகளாகவே இருக்கிறோம்.
நல்ல சிந்தனை கவிதை சகோ
சமுதாய விசயங்களில் எந்த அக்கறையும் இல்லாமல் வேடிக்கை பார்க்கும் பதிவுலகத்திற்கு இது நிறைய பொருந்தும் சகோதரி....
நல்ல கருத்துடை கடமை வரிகள். வாழ்த்துகள் சகோதரி.
வேதா. இலங்காதிலகம்.
நல்ல சிந்தனை.தைரியமாக வாழ்வதே வாழ்வு.கற்றுக்கொண்டே வாழ்கிறோம் மாலதி !
சமூக நலன் சார்ந்த கவிதை, பாராட்டுக்குரியது.
வாழ்த்துகள்.
Post a Comment