விழி இழந்த ஒருவனுக்கு
இருளும் ஒன்றுதான்
ஆயிரம் வண்ண
விளக்குகளும் ஒன்றுதான்.
இன்று ...
அறிவைச் சொன்னாலும்
ஏற்க்காமைக்கு காரணமும்
இதுதான்.
எளிமையான
உணவுகளையே உண்டு
பழகியவனுக்கு
சற்று கடினமான
உணவுகள் செரிக்கவா
செய்யும் கழிச்சல்தான்
காணும் .
அறிவை ...
கற்ப்பிக் கிறவர்களும்
கற்றுக் கொள்கிறவர்களும்
மிகவும் குறைவே .
முடைநாற்றம் வீசும்
கண்மூடித் தனங்கள்
காட்டுத்தீயாய்
பரவி அழிக்கும் .
அறிவோ நொண்டி
வண்டியில் பயணிக்கும்
உலகிது .
வழிகாட்ட வந்தவரையே
வெட்டிசாய்க்கும்
வேடிக்கையும் பார்க்கும்.
தெளிந்த அறிவு
முதற்க்கண் பண்படவேண்டும்.
பின்னர்
பண்படுத்தத் தொடங்க
வேண்டும்.
பாலை
நிலத்தையும்
சோலையாக்கிக் காட்டலாம்
என்பதே என்எண்ணம் .
அறிவைப் புகட்டுவதும்
புகட்ட எண்ணுவதும்
இத்தன்மைதே .
இன்றைய நிலையில் நேர்மையாக இருப்பவர்கள் அரிதானவர்கள் என தங்களுக்குள்ளாகவே கற்பிதம் செய்து கொள்ளுகிறார்கள் நான்உண்மையானவன் நேர்மையானவன் கதாநாயகத்( hero )தன்மை கொண்டவனாக நான் உண்மையுடன் இருப்பேன் என ஏன்நினைப்பதில்லை அப்படி நேர்மையனவனவனைப் பற்றி எழுதினால் வனத்தில் இருந்து வந்தவனைபோல கருதுகிறார்கள் நானும் அப்படித்தான் என ஏன் சொல்ல இயலுவதில்லை அருள்கூர்ந்து பதில் அளிப்பீராக .
தமிழன்புடன் மாலதி .
இருளும் ஒன்றுதான்
ஆயிரம் வண்ண
விளக்குகளும் ஒன்றுதான்.
இன்று ...
அறிவைச் சொன்னாலும்
ஏற்க்காமைக்கு காரணமும்
இதுதான்.
எளிமையான
உணவுகளையே உண்டு
பழகியவனுக்கு
சற்று கடினமான
உணவுகள் செரிக்கவா
செய்யும் கழிச்சல்தான்
காணும் .
அறிவை ...
கற்ப்பிக் கிறவர்களும்
கற்றுக் கொள்கிறவர்களும்
மிகவும் குறைவே .
முடைநாற்றம் வீசும்
கண்மூடித் தனங்கள்
காட்டுத்தீயாய்
பரவி அழிக்கும் .
அறிவோ நொண்டி
வண்டியில் பயணிக்கும்
உலகிது .
வழிகாட்ட வந்தவரையே
வெட்டிசாய்க்கும்
வேடிக்கையும் பார்க்கும்.
தெளிந்த அறிவு
முதற்க்கண் பண்படவேண்டும்.
பின்னர்
பண்படுத்தத் தொடங்க
வேண்டும்.
பாலை
நிலத்தையும்
சோலையாக்கிக் காட்டலாம்
என்பதே என்எண்ணம் .
அறிவைப் புகட்டுவதும்
புகட்ட எண்ணுவதும்
இத்தன்மைதே .
இன்றைய நிலையில் நேர்மையாக இருப்பவர்கள் அரிதானவர்கள் என தங்களுக்குள்ளாகவே கற்பிதம் செய்து கொள்ளுகிறார்கள் நான்உண்மையானவன் நேர்மையானவன் கதாநாயகத்( hero )தன்மை கொண்டவனாக நான் உண்மையுடன் இருப்பேன் என ஏன்நினைப்பதில்லை அப்படி நேர்மையனவனவனைப் பற்றி எழுதினால் வனத்தில் இருந்து வந்தவனைபோல கருதுகிறார்கள் நானும் அப்படித்தான் என ஏன் சொல்ல இயலுவதில்லை அருள்கூர்ந்து பதில் அளிப்பீராக .
தமிழன்புடன் மாலதி .
22 comments:
அப்படி இல்லாதவர்களுக்கு
இருக்க இயலாதவர்களுக்குத்தான்
இந்தக் குழப்படி
தங்கள் கேள்வி மிகச் சரியே
பகிர்வுக்கு நன்றி
தீட்டிய
வரிகளில் உள்ள வினாக்களுக்கு
அந்த வரிகளிலேயே பதில் இருக்கு
ஆழமாய் வாசிப்பவர்கள் அதை உணர்வார்கள் தோழி
நல்ல கவிதை
சிறப்பான சிந்தனை தோழி
அருமை.
வாழ்த்துகள்.
என்னை ஹீரோவாக்கும் முயற்சி செய்தாலும் கடைசியில் காமெடி ஹீரோவாகவே மாறிவிடுகிறது :) இந்த போஸ்ட் கடைசி பத்தி சத்தியமா எனக்கு விளங்கயில்ல!
மாலதி...உலகம் இருட்டில்தான்.வெளிச்சம் பிடிக்கும் எங்களை முட்டாள் என்கிறார்கள்.இதுதான் இன்றைய உலகம் !
கண்டிப்பாக நேர்மையானவர்கள் அனேகம்பேர் உள்ளனர். வாக்கிலும் செயலிலும் நேர்மையுடையோர் மற்ற தீய செய்ல்களைவிட்டு சற்று ஒதுங்கித்தான் உள்ளனர். உலகம் மாறிவிட்டது. தம் செயலை எப்போதும்போல தொடர்ந்துகொண்டுதான் உள்ளனர்.
//நேர்மையனவனவனைப் பற்றி எழுதினால் வனத்தில் இருந்து வந்தவனைபோல கருதுகிறார்கள் நானும் அப்படித்தான் என ஏன் சொல்ல இயலுவதில்லை//
பதில் சொன்னால் அதே வனத்தின் இன்னொரு பிரதிநிதியாக நினைத்துவிடக் கூடும் !
தெளிந்த அறிவு
முதற்க்கண் பண்படவேண்டும்.
பின்னர்
பண்படுத்தத் தொடங்க
வேண்டும்.
சரியான வார்த்தை!
ஆம் நான் சிறந்தவன், உண்மையானவன், கதாநாயகத் தன்மை கொண்டவன் என்று நேர்மை வழி நடந்தால் பாதித் துன்பம் குறையும். எனக்கென்ன என்பது துன்பமே தரும். வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
இந்த உலகமே இப்படித்தான் மாலதி. கவலையை விடுங்கள் . அறிவான வார்த்தைகளைச் சொன்னால். இவவுக்குத்தான் எல்லாம் தெரியுமோ. என்பார்கள் . வித்துவச் செருக்கு என்பார்கள். உங்கள் கடமையைச் செய்யுங்கள். பலனை எதிர்பாராதீர்கள். உண்மையைச் சொன்னால் உறைக்கும் பூமி இது . என்ன ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். கவலைப்பட வேண்டாம் சகோதரி.அறிவு வெளிப்பட நாளாகும்
http://kowsy2010.blogspot.de/2012/03/blog-post.html
C
Supper unmai
நேர்மையாளர்கள் பிழைக்க தெரியாதவர்கள் என்று சமூகம் பரிகாசம் செய்வதால் வந்த வினை.
கருத்தான கவிதை!
\\\\\\\நேர்மையனவனவனைப் பற்றி எழுதினால் வனத்தில் இருந்து வந்தவனைபோல கருதுகிறார்கள் நானும் அப்படித்தான் என ஏன் சொல்ல இயலுவதில்லை அருள்கூர்ந்து பதில் அளிப்பீராக .////
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தன் பலங்களை நினைக்கும் போது, தான் நேர்மையானவன் என்ற எண்ணமும் உண்டு, தன் பலவீனங்களை நினைக்கும்போது தான் நேர்மையற்றவன் என்ற எண்ணமும் உண்டு! பலவீனக்களை பற்றியே அதிகம் சிந்திப்பவர்களே அப்படி நினைக்கிறார்கள் என்று எனக்கு தோன்றுகிறது!
நேர்மையின் இயல்புத் தன்மையை
புரிந்து கொள்ளாதவர்கள் பேசும் பேச்சு இது சகோதரி.
நேர்கொண்ட பார்வையும், நிமிர்ந்த நன்னடையும்..
எதிர் நிற்பவரின் விழி பார்த்து பேசும் தன்மையும்...
மறைவிடம் இருப்பவரும் முறைவில்லாது இருக்கவேண்டும்
என்ற எண்ணமும்.. தழைத்தோங்கி இருந்தால் நேர்மை என்பது
நிதர்சனம்.
இதிலிருந்து வழுவுபவர்கள்..பிதற்றும் பேச்சுகளை
நாம் கவனிக்க வேண்டாம்..
நேர்வழி நிறை வழி...
அருமையான கவிதை சகோதரி.
நேரமைக்கு என்றுமே செருக்குடன் சொல்லும் பாங்கு என்று ஒன்று உண்டு..கவிதை நல்லா இருக்கு சகோ!
அறிவோ நொண்டி வண்டியில் பயணிக்கும் உலகிது .
வழிகாட்ட வந்தவரையே வெட்டிசாய்க்கும் வேடிக்கையும் பார்க்கும்.
நேர்மையாக இருந்தால் துன்பம் மெத்த உண்டு
நாமும் நேர்மையானவன் உண்மையானவன் என்பது நம் செயலைப் பொறுத்தே அமைகிறது .
உங்கள் வலைப்பூவின் தலைப்பிற்கு கீழே உள்ள வார்த்தைகளை அப்படியே வெளிப்படுத்துவதாக உள்ளது உங்களது கவிதை.
கூரிய ஈட்டி போல் என் மனதை குத்தியது உங்கள் கவி. அறியாமை எனும் இருளுக்கு அகல் விளக்காய் அமைந்தள்ளன..மாலதி அக்கா
//வழிகாட்ட வந்தவரையே
வெட்டிசாய்க்கும்
வேடிக்கையும் பார்க்கும்.//
உலகம் அப்படி இருக்கிறது.இதில் நேர்மையானவனுக்கு இடம் குறையத்தான் செய்கிறது.
மிகச் சரியாக சொன்னீர்கள்.
அதற்கு முதலில் தன்னம்பிக்கை வேண்டும். பாரதிக்கு இருந்ததே அந்த நம்பிக்கை.
பொய்க்குங் கலியை நான் கொன்று
பூலோகத்தார் கண்முன்னே
மெய்க்குங் கிருத யுகத்தினையே
கொணர்வேன்! தெய்வ விதியிஃதே "
என்று சொல்ல எவ்வளவு திண்மை வேண்டும். அது வேண்டும் நமக்கெல்லாம்
Post a Comment