பழங்கால பெண்கள்
காதலைக்
கண்மூடித்தனமாய்
அணுகவில்லை .
கல்வி கற்றவனாக ...
வீரனாக ....
நேர்மையன வனாக...
வளப்பம் நிறைந்த
நாட்டவனாக...
இப்படி காதலனின்
உண்மை
நம்பகத்தன்மைகளை
அறிந்தே காதலில்
வீழ்ந்தனர்
காதலனை வீழ்த்தினார்.
காதலில் அப்போது
உறுதியும் இருந்தது .
நேர்மையும் பிறந்தது
இல்லறமும் நல்லறமே
மாறியது .
இன்றோ ...
உள்ளத்தைக் கணக்கில்
கொள்ளாமல்
கள்ளத்தை உள்ளத்திலேந்தி
உடலை இலக்காய்
கொண்டு
பொன்னே...
தேனே என வழிந்து....
விரைந்து திகட்டிப் போய்
சீரழிகின்றனர் .
விட்டுக் கொடுத்து
வாழ்வோம் .
தட்டிக் கொடுத்து
தேற்றுவோம்.
தமிழ்
பாரம்பரியத்தை
பண்பாட்டைக் காப்போம்.
மீட்ப்போம்.
19 comments:
அருமை சகோ..சிறப்பான கவிதை..மிக்க நன்றி.
சரியாக சொன்னீர்கள் இன்றைய காதலை.
சரியான வார்த்தை பிரயோகம் சகோதரி..
கால மாற்றத்துக்கு ஏற்ப காதலரை தேர்ந்தெடுக்கும் பழக்கம்
மாறிக்கொண்டே இருக்கிறது..
போர் வீரன்,ஜல்லிக்கட்டு வீரன், இளவட்டக் கல் தூக்குவோர்,
ஒயிலாட்ட நாயகன், ........
இப்படித் தொடர்ந்து .................................
பணம் என்ற கூட்டுக்குள் அடைந்து
உடல் உணர்சிகளுக்கு உட்பட்டு
இன்று சீரழிந்து தான் போயிருக்கிறது....
எல்லாம் வட்டச்சுற்றின் மாயை...
அருமை.
வாழ்த்துகள்.
உண்மைதான் மாலதி.இன்றைய காதலில் நேர்மை,உண்மை மிகமிகக் குறைவு.ஏதோ ஒரு சுயநலம்தான் அங்கு !
சரியா சொன்னீங்க
ஆனால் பழங்காழ பெண்களின் காதலை போல இந்த கால பெண்களின் காதலை பார்ப்பது மிக கடினம்
இப்படிப்பட்ட காதல்தான் பல சமூக மாற்றங்களுக்கு முக்கிய காரணியாக இருந்தன. ஆனால் இந்த காலத்தில்.....
சொன்னால் கலாசார மாற்றமாம்!
இக்காலம் .ன்றும் மலர்ந்தால் சந்தோஷம்...
உண்மைதான் தோழி
அதிவிரைவாய்
ஓடும் காலமும்
அதை
துரத்தி ஓடும் நாகரீகாமும்
இவை இரண்டினையும் முந்துவாதாக
பாவித்து ஓடும் வாழும் மனிதர்களும்
காதலின்
மெய் உணரவும்
விட்டுகொடுத்தும்
தட்டிக்கொடுத்தும் வாழ
நாகரீக மனிதர்களுக்கு
நேரமில்லை
நல்ல கவிதை
காதலில் அப்போது உண்மை உறுதி இருந்தது உண்மைதான் சகோ உணருமோ இன்றைய சமூகம் .
தமிழ் பாரம்பரியத்தை
பண்பாட்டைக் காக்க களமிறங்கிய அருமையான கவிதைக்கும், சிந்தனைக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு சிறப்பு வாழ்த்துகள்..
நல்ல சமூக அக்கறையுள்ள கவிதை!
உங்களது இந்த இடுகையை வலைசரத்தில் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன் ..
http://blogintamil.blogspot.in/2012/04/blog-post_12.ஹ்த்ம்ல்
நன்றி
குணா
காதல்
இன்னும் இருக்கிறது.
இன்று
அச்சொல்லுக்கான பொருள் தான் மாறிவிட்டது.
பண்பாட்டுக்காதல் பற்றிய தங்கள் பண்பான வரிகள் நன்று உண்மை.எம்மால் பேசத்தான் முடியும்...கல்வி முறையில் காதல் பற்றியும் நிறைய வைக்கலாம்.- காமம் பற்றிய விளக்கங்கள் கொடுத்து.
வாழ்த்துகள் சகோதரி.
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
நல்ல சிந்தனை. கண் விழித்துப் பாரம்பரியம் காக்கும் கலாச்சாரக் காதல் மலர மாலதி சிந்தனை வழியிடட்டும். வாழ்த்துகள் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
காலத்திற்கேற்ற கருத்தான கவிதை.
வாழ்த்துக்கள் மாலதி. பகிர்ந்தமைக்கு நன்றிகள்.
nalla pathivu nigalkala avalathai solluvathaga ullathu
Post a Comment