பன்றிகளுக்கும்
நாய்களுக்கும் ....
கழுதைகளுக்கும் ....
குதிரைகளுக்கும் ....
கோட்டான்களுக்கும் ...
மாடுகளுக்கும் ...
மனிதர்களுக்கும் ...
இடையிலான கலப்புத்
திருமணத்தை
தடுத்து நிறுத்துவோம் .
இந்த முறைமீறிய
திருமணம் இங்கு
தேவையில்லை ...
தூய மனிதத்திற்க்குள்ளே...
சமயங்க லேது ...
சாதி தானேது ....
ஏற்றத் தாழ்வுதான்
எது ?
14 comments:
///தூய உள்ளங்களுக்கிடையே ஜாதி ஏது///
உண்மை சகோ ., சிந்தனையை தூண்டும் அருமையான கவிதை ..!
அதானே...., நல்லா கேட்டீங்க
வித்தியாசமான முறையில் சொல்லிப் போனவிதம்
மனம் கவர்ந்தது
தொடர வாழ்த்துக்கள்
மிக அருமை அக்கா தலைப்பார்த்து முதல பயந்தேன் அப்புறம் ஓகே சூப்பர்...............
நீங்கள் கூறியவாறுதான் திருமணங்கள் நடை பெறுகின்றன.
கலப்பின்றி
காதலர் களித்திருக்க
கலாச்சாரப் புரட்சி
கனிய வேண்டும்
அன்று
தனக்கென்றாலும்
பிறருக்கென்றாலும்
பிதற்றாமல் இருப்பர்
அருமை
வாழ்த்துக்கள்
(சமயங்களேது) திருத்தி கொள்ளவும்
விஜய்
பிறப்பினில் நாம்
மனிதன் எனும் ஓரினமே
என்று கருத்தினில்
உரைத்திட வந்த கவி அழகு...
சிந்திக்க வைக்கும் வரிகள் அருமை .
உள்ளங்கள் எல்லாமே தூசு படிந்து கிடக்கிறதே மாலதி.
சாதி கிடப்பில் இருந்து எப்போதுதான் மீளுமோ சமூகம்..
மனிதனின் மனசு சரியில்லை...!!!
சமயங்க ளேது ...
சாதி தானேது ....
ஏற்றத் தாழ்வுதான் எது ?
தூய மனிதம் படைத்த அருமையான கவிதைக்குப் பாராட்டுக்கள் !
மனமது ஒன்றே,மனிதமும் ஒன்றே..
மாசுபட்ட வரலாறிது..சாதிகளாலும் மதத்தாலும்..
சகோ
சாதி எனும் மடமையும் மதம் எனும்
மாயையும் சாகவேண்டும்..சரியாகச்சொன்னீர்கள்.வாழ்த்துக்கள் சொந்தமே
சமயங்க ளேது ...
சாதி தானேது ....
ஏற்றத் தாழ்வுதான் எது ?
என்று வார்த்தையில் தான் கேட்கிறோம்.. இன்னும் அப்படியே தானே நிலவுகிறது சகோதரி. திருந்துவார் யாருமில்லையே! நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
Post a Comment