இராஜஇராஜேஸ்வரி அவர்கள் வழங்கிய விருது

இராஜஇராஜேஸ்வரி  அவர்கள்  வழங்கிய  விருது

Monday 6 August 2012

சாவைத்தழுவா விடியலைத்தேடுகிறேன்



எந்த மை கொண்டு
எழுதப்  பட்டதென
புரியவில்லை
அழிய மறுக்கிறது
இதயதிலுன் பெயர் .

கண் மூடித்தனங்கலோடில்லை
கட்டுப் பாடுகளுடன்
சிந்தித்தேன் ...
வளம்  கொழிக்காவிட்டாலும்
கேடுகள்
நிகழ  வாய்ப்பே
இல்லை .
நமக்கான சிறகுவிரித்தலில் .

உனதான
பாதைகள்  என்
வாழ்க்கைக்கு
வலு  சேர்க்கிறது .

சிதறிக்  கிடக்கும்
உன் சிந்தனைக்  களம்
என்னுள் சிலிர்ப்பைத்தருகிறது .

உனதான
வாழ்வியல்
விளக்கங்கள்
என்னை
வசீகரிக்கிறது .

எதிர்  நீச்சல்
அல்ல...
இலக்கணமாய்
உன் பதிவுகள் .

உன் ...
சகாப்த்தத்தில்
நானும் சாவைத்தழுவா
விடியலைத்  தேடுகிறேன் .

                 -  தமிழன்புடன்  மாலதி

15 comments:

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

நேர்மறை சிந்தனையுடன் நேர்த்தியான வார்த்தைகளுடன் நெஞ்சம் கவர்கிறது கவிதை.

”தளிர் சுரேஷ்” said...

சிறப்பான படைப்பு ! வாழ்த்துக்கள்!
இன்று என் தளத்தில் மழை!ஹைக்கூக்கள்!http://thalirssb.blogspot.com/2012/08/blog-post_6.html

Subramanian said...

சரணகதி அடைதலின் முழுமையை காட்டுகிறது தங்கள் படைப்பு.

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல வரிகள்... நன்றி...


என் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?

MARI The Great said...

///எந்த மை கொண்டு எழுதப்பட்டது///

அசத்தலான சிந்தனை!

ஜீவனுள்ள கவிதை!

Seeni said...

unarvu poorvamaana kavithai!

MANO நாஞ்சில் மனோ said...

உனதான பாதைகள் என் வாழ்க்கைக்கு வலு சேர்க்கிறது//

வாவ்..........மார்வலஸ்....! வாழ்த்துகள்...!

கவி அழகன் said...

Vasithu rasithen unkal kavithaikalai

ஹேமா said...

மை கொண்டெழுதிய வாழ்வோடு காத்திருக்கும் சாவைத்தழுவா விடியல் !

Anonymous said...

நல்வாழ்த்து கவிதைக்கு.
நலமா?
வேதா. இலங்காதிலகம்.

அ. வேல்முருகன் said...

தமிழுக்குத் தொண்டுசெய்வோன் சாவ தில்லை
தமிழ்த்தொண்டன் பாரதிதான் செத்த துண்டோ?


என பாரதிதாசன் கூறியிருக்கிறார். எனவே மரணமென்பது உடலில் இல்லை

நம்பிக்கைபாண்டியன் said...

////சிதறிக் கிடக்கும்
உன் சிந்தனைக் களம்
என்னுள் சிலிர்ப்பைத்தருகிறது /////

அழகிய வரிகள்
:):):)

Athisaya said...

வென்றுவிட்ட கவிதை இது.வாழ்த்துக்கள்.சந்திப்போம் சொந்தமே!

இராஜராஜேஸ்வரி said...

எந்த மை கொண்டு
எழுதப் பட்டதென
புரியவில்லை இந்த கவிதையும்...

அழிய மறுக்கிறது ....

இராஜராஜேஸ்வரி said...

Congratulationssssss for getting AWARD From VAI.GOPALAKRISHNAN SIR..