இராஜஇராஜேஸ்வரி அவர்கள் வழங்கிய விருது

இராஜஇராஜேஸ்வரி  அவர்கள்  வழங்கிய  விருது

Thursday, 24 January 2013

இலக்கணத்தைப் படைப்போம் வா.

வீசுகின்ற   தென்றலும் நீ
பேசுகின்ற  மொழியும் நீ
சுவாசிக்கின்ற காற்றும் நீ
கற்கின்ற  பாடம் நீ.

அன்பையே உன்னுள்ளத்தில்
காட்டு  கின்றாய்
அரவணைத்து  தாயையப்போல்
தேற்று  கின்றாய் .

என் கண்ணீருக்கு
விடைக்கொடுக்க  நினைக்கின்றாய்.
காலம் போல்கடமையை
நீ  செய்கின்றாய்.

கள்ள  மில்லா
உள்ளத்தைக்  காட்டுகிறாய்.
கவிஎழுத  ஒரு
மொழியை  வழங்குகிறாய்.

பால் நிலவே 
பருவத்தின் செழிப்பே ....
உன்  விழிஎழுதும்
பா  வினங்கள்கோடி .

நம்  இலக்கே
இலக்கணமாய்  வாழ்வதுதான் .
என்றாலும்  புதிய
இலக்கணத்தைப்  படைப்போம்  வா.

9 comments:

Ramani said...

அருமை அருமை
இலக்கியத்தை இலக்கணம் படைக்க அழைத்தது
மனம் கவர்ந்தது.வாழ்த்துக்கள்

s suresh said...

அருமையான கவிதை! நன்றி!

கவியாழி கண்ணதாசன் said...

அருமை.வாழ்த்துக்கள்

senthil kumar said...

super

கவிஞா் கி. பாரதிதாசன் கி. பாரதிதாசன் said...


வணக்கம்!

புத்தம் புதிய இலக்கணத்தைத் தீட்டிடுக!
நித்தம் இனிமை நிலைத்து!

கவிஞா் கி. பாரதிதாசன்
பிரான்சு

Sasi Kala said...

நிச்சயம் புது இலக்கணம் படைக்க வீசு தென்றலாய் வருவாங்க தோழி.

கோமதி அரசு said...

கவிதை நன்றாக இருக்கிறது.
வாழ்த்துக்கள்.

இராஜராஜேஸ்வரி said...

சுவாசிக்கின்ற காற்றும் நீ
கற்கின்ற பாடம் நீ.
என புதிய இலக்கணம் படிக்கும் அருமையான கவிதை ..!
பாராட்டுக்கள்..

Anonymous said...

இலக்கண வாழ்வின் அழைப்பு நன்று.
இனிய வாழ்த்து.
(முன்பு பல தடவை கருத்திட்டேன்.)
வேதா. இலங்காதிலகம்.