இராஜஇராஜேஸ்வரி அவர்கள் வழங்கிய விருது

இராஜஇராஜேஸ்வரி  அவர்கள்  வழங்கிய  விருது

Sunday 14 July 2013

பித்தம் தெளிந்தேன் ....



      வணக்கம் . போராட்டம்தான்  ஒருமனிதனை  செழுமைப்படுத்துகிறது .அல்லது அவனை குப்புறத்  தள்ளி கேவலப்படுத்துகிறது . என்பதான  எனது எண்ணம்  உண்மையாகிப் போனது . சறுக்குமரத்தில் முறையில்லாமல்  ஏறி  வழிதெரியாமல்  விழுந்து  கிடந்தேன் எந்த புரட்ச்சி யாளர்களும்  என்னைக் காக்க  வரவேயில்லை .      இந்த சமூகம் சுயநலம் உள்ளது அதில்  முதலில்  தன்னை மட்டுமே  உயர்த்திக் கொள்ள  வேண்டும்  கடினமாக உண்மையாக  உழைக்க வேண்டும்

       பொருள்  தேடவேண்டும் . அருள் இல்லாதவர்களுக்கு மேலுலகத்தில் இடமில்லை பொருள்  இல்லாதவர்க்கு இந்த உலகத்தில் இடமில்லை என்பதை சற்று காலம்  கடந்து  உணர்ந்து கொண்டேன் .    கொள்கைகள் கோட்பாடுகள்  எதுவுமே  எனது எனது சோகத்தையும்  துன்பத்தையும்  தீர்க்க வரவேயில்லை . எந்த ஆபத்தாண்டவனும் என்னை தூக்கி நிறுத்த வரவேயில்லை . வழமைபோல  நானே  விழுந்தேன்  நானே எழ முயல் கிறேன் . இந்த போராட்டத்தில்  கோழைகள்  எடுக்கும் கீழான முடிவு கூட எடுக்கத் துணிந்தேன்  அனால் தற்கொலை செய்துகொள்ளவில்லை செய்து கொள்ளவும் மாட்டேன் அனால்  எனது முந்தய முடிவில் எந்த  மாற்றமும் இல்லை . என்னமுடிவு என்பதுதானே உங்கள் வினா? காலம் வரட்டும் நானே சொல்லுகிறேன்.

       காதலில், அல்லது துன்பத்தில்  துடிப்பவர்கள்  ஒன்றை முழுமையாக  அறிந்து கொள்ள வேண்டும்  அதாவது  உலகத்தோடு  ஓட்ட ஒழுகல்  என்பது வள்ளுவம்  இந்தபெரும்பான்மை  உலகம் எங்கு ஓடுகிறதோ  அங்கே  நாமும் ஓடவேண்டும் . தனித்து நின்றால்  பித்து பிடித்தவன் ஆகிப்போவோம்  எந்த  துன்பத்திற்கும் காரணம்  என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும்  நேற்று என்பது உடைந்துபோன பானை ... நாளை என்பது மதில் மேல் உள்ள பூனை ... இன்று என்பது  கையில் உள்ள வீணை ... ஆம் நேற்றைய  நிகழ்வை  அசைபோட்டால்  இன்றும் நாளையும் நமது வாழ்வில் காணமல் போய்விடும்  நாளைய தினத்தை  எண்ணி கவலைப்பட்டால்  இன்றைய  கையில் உள்ள வீணையின்  நாதம் நமக்கு மகிழ்வைத்தராது  நாம் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றே  கடந்த காலங்களையும்  எதிர்கலாத்தையும்  சிந்திப்பதால்  ஒன்றும்  போவது இல்லை.       இன்றைய நாளை முறையாக திட்டமிட்டு  செலவிட்டால்  எதிர்காலம்  நமக்கு ஒளிமிக்கதாக மாறிப்போகும் . என்பது எனக்கு சற்று காலம் கடந்து புரிய வந்தது . இன்றைய  நாளில் ஆன்மீகத்தை உள்ளடக்கிய  தேர்ந்த ஆசான்கள் இளைஞ்சர்களுக்கு  தேவையாக  இருக்கிறது .
அடுத்த பதிவில்  பேசுவேன் ....


அன்புடன்  மாலதி .

20 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

நேற்று இன்று நாளை பற்றி அருமையான விளக்கம்.

பித்தம் தெளிந்ததில் மகிழ்ச்சியே.

இனி சித்தம் குளிர நல்வாழ்த்துகள்.

மாலதி said...

கருத்திற்கு பணிவான நன்றியும் பாராட்டுக்களும்

திண்டுக்கல் தனபாலன் said...

என்ன சொல்வதென்று தெரியவில்லை... மிக்க மகிழ்ச்சி...

தன்னுள் உணர்ந்த உங்களுக்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள் பல... தொடர்க...

நன்றி...

எம்.ஞானசேகரன் said...

எப்படியோ ஒரு வழியா திரும்பி வந்தாச்சு, ம்...... கலக்க ஆரம்பிங்க!
பிரமாதமான எழுத்து நடை உங்களுக்கு இருக்கிறது. ஒரு சிறந்த பதிவரை இழக்க இருந்தோம். மீண்டு(ம்) வந்ததற்கு வாழ்த்துக்கள்.

Seeni said...

mmm...

pesunga..

MANO நாஞ்சில் மனோ said...

நாளைய தினத்தை குறித்து கவலைப்படாதே ஒவ்வொரு நாளுக்கும் அதன் அதன் பாடுகள் போதும்னு பைபிளில் ஒரு வசனம் உண்டு, அதை விரிவாக சொல்லிவிட்டீர்கள்.

Athisaya said...

ஆகா....அருமை!இது தான் இன்று நிஜம்..வாழ்த்துக்கள்.

JOKER said...

எண்ணத்தின் வெளிப்பாடு மிகவும் அருமை.
அனுபவம் உலகில் விலை மதிப்பில்லாத சொத்து.
கடந்த காலம் கற்றுத்தந்த பாடம் நிகழ்காலத்தை
எளிதாக பயணிக்க உதவி செய்யும்.தொடருங்கள் வாழ்த்துக்கள்.

சத்ரியன் said...

அநுபவம் சிறந்த ஆசான். ஒருமுறை சுயம் உணர்ந்துக்கொண்டால் தொடர்ந்து ஒளியூட்டியபடியே இருக்கும்.

கோழை குணத்தை விரட்டியடித்தமைக்குப்
பாராட்டுக்கள், மாலதி.

KParthasarathi said...

"நேற்று என்பது உடைந்து போன பானை,நாளை என்பது மதில் மேல் உள்ள பூனை,இன்று என்பது கையில் உள்ள வீணை " எவ்வளவு அழகாகவும் தீர்மானமாகவும் சொல்லி இருக்கிறீர்கள்.இது உண்மை முற்றிலும்.
நம் வாழ்வு எப்படி அமையவேண்டும் என்பது நாம் இன்று செய்கின்ற வேலையை பொருத்துதான். நல் வாழ்த்துகள்

எஸ் சக்திவேல் said...

காதலை விட்டு வேறு தலைப்புக்களில் எழுதுங்களேன்.

தி.தமிழ் இளங்கோ said...

அன்புள்ள சகோதரி திருமதி மாலதி அவர்களுக்கு வணக்கம்! நமது மூத்த வலைப்பதிவர் அய்யா திரு வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்கள், தனது நலைத்தளத்தில் ”நினைவில் நிற்கும் பதிவர்களும், பதிவுகளும்” என்ற தலைப்பினில் வலைப்பதிவர்களை அறிமுகப்படுத்தும் தொடர் ஒன்றினை தொடங்கி எழுதி வருகிறார்.

தங்களின் வலைத்தளத்தினை இன்று (14.06.2015) அறிமுகம் செய்து தங்கள் எழுத்துக்களை சிறப்பித்து எழுதியுள்ளார், என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இது ஒரு தகவலுக்காக மட்டுமே. தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.

அவரது வலைத்தளத்தின் இணைப்பு இதோ:
நினைவில் நிற்போர் - 14ம் திருநாள்
http://gopu1949.blogspot.in/2015/06/14.html

yathavan64@gmail.com said...

அன்புடையீர்,
வணக்கம்.
தங்களின் வலைப்பதிவுகளில் சில,
இன்று (14/06/2015), அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்களால் பாராட்டிப் புகழ்ந்து, அடையாளம் காட்டப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது
அவரது வலை தளத்தில்: http://gopu1949.blogspot.in/
என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
பாராட்டுகள். வாழ்த்துகள்.

இணைப்பு: http://gopu1949.blogspot.in/

நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
FRANCE

yathavan64@gmail.com said...

அன்புடையீர்,
வணக்கம்.
தங்களின் வலைப்பதிவுகளில் சில,
இன்று (14/06/2015), அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்களால் பாராட்டிப் புகழ்ந்து, அடையாளம் காட்டப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது
அவரது வலை தளத்தில்: http://gopu1949.blogspot.in/
என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

பாராட்டுகள். வாழ்த்துகள்.
இணைப்பு: http://gopu1949.blogspot.in/

நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
FRANCE

yathavan64@gmail.com said...

அன்புடையீர்,
வணக்கம்.
தங்களின் வலைப்பதிவுகளில் சில,
இன்று (14/06/2015), அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்களால் பாராட்டிப் புகழ்ந்து, அடையாளம் காட்டப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது
அவரது வலை தளத்தில்: http://gopu1949.blogspot.in/
என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

பாராட்டுகள். வாழ்த்துகள்.
இணைப்பு: http://gopu1949.blogspot.in/

நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
FRANCE

சீராளன் said...

வணக்கம் மாலதி !

பித்தம் தெளிவித்த பேராற்றல் எல்லாமே
நித்தம் கொடுப்பாய் நெகிழ்ந்து !

தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

சீராளன் said...

நேரமிருப்பின் என்னுயிரையும் நேசிக்கலாமே ! நன்றி
http://soumiyathesam.blogspot.com/

Iniya said...

வணக்கம் மாலதி!
நேற்று என்பது உடைந்து போன பானை,நாளை என்பது மதில் மேல் உள்ள பூனை,இன்று என்பது கையில் உள்ள வீணை "//அனுபவங்களை எத்தனை துல்லியமாக வெளிப்படுத் தியுள்ளீர்கள்.எழுத்துக்களில் தான் எத்தனை அழகு நேர்த்தி.ம்..ம்.ம் தங்கள் எழுத்தாற்றல் கண்டு உண்மையில் பிரமித்து தான் போனேன். எக்காரணத்தைக் கொண்டும் நிறுத்தாதீர்கள்மா. தொடர்கிறேன் தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள் ...!

Iniya said...

வணக்கம் மாலதி!
நேற்று என்பது உடைந்து போன பானை,நாளை என்பது மதில் மேல் உள்ள பூனை,இன்று என்பது கையில் உள்ள வீணை "//அனுபவங்களை எத்தனை துல்லியமாக வெளிப்படுத் தியுள்ளீர்கள்.எழுத்துக்களில் தான் எத்தனை அழகு நேர்த்தி.ம்..ம்.ம் தங்கள் எழுத்தாற்றல் கண்டு உண்மையில் பிரமித்து தான் போனேன். எக்காரணத்தைக் கொண்டும் நிறுத்தாதீர்கள்மா. தொடர்கிறேன் தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள் ...!

ஊமைக்கனவுகள் said...

காலம் என்பது பற்றிய நல்ல கருத்தாடல்...!

உங்களின் எழுத்து சுவாரசியம்.

தொடர்கிறேன்.

நன்றி