இராஜஇராஜேஸ்வரி அவர்கள் வழங்கிய விருது

இராஜஇராஜேஸ்வரி  அவர்கள்  வழங்கிய  விருது

Monday 3 August 2015

இன்றைய தேவை போராட்டம் அல்ல மனமாற்றமே !

                       

     சில நாள்களாக மதுஒழிப்பு போராட்டம் என்ற பெயரில் வன்முறையை கட்டவிழ்த்து விட்டு இருக்கிறார்கள்  இது 2016 தேர்தலுக்கு முன்பான நாடகத்தின் ஒரு முன்னோட்டம்  எனலாம் இவர்கள் உண்மையில்  அறிவு என்ற ஆயுதத்தை பயன் படுத்த வில்லையோ என சிரிக்கத்தோன்றுகிறது .
நாற்றம் வீசும் அரசியல் தன்னலம் என்றால் இதில் ஒன்றும் புதுமையோ ... ஒன்றும் இருக்கப் போவதில்லை.

     ஆளும் தலைமையை வீழ்த்தும் வியூகம் என்றாலும் இது வேடிக்கையே
ஏனெனில் இதே வியூகத்தை ஆளும் தரப்பு கையில் எடுத்துக் கொள்வதாக வைத்துக் கொள்வோம் எதிர் தரப்பின் நீலிக் கண்ணீர் கடலில் கரைத்த பெருங்காயம் ஆகிவிடும் அதாவது சாராயக்  கடையை மீண்டும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மூடுவோம் என்ற ஒற்றை வார்த்தையை வ்ளியிட்டல் எல்லாமே தவிடு பொடி  ஆகிவிடும்.இதனால்  நாட்டுக்கோ மக்களுக்கோ எதாவது பயன் உண்டா என்றால் இல்லை என பால் குடிக்கும் பப்பகூட சொல்லிவிடும் .

          உண்மையில் என்ன செய்யவேண்டும் மக்களிடம் செல்லவேண்டும் மதுவின் தீமை களையும்  அதன் கொடுமைகளையும் மக்களிடம் அறிவு பூர்வமாக  எடுத்துச் சொல்லவேண்டும்  இப்படி கொஞ்சம் கொஞ்சமாக மக்களின்  அதாவது குடிக்கு அடிமையாகிப் போனவர்களிடம் குடியின் தீமைகளை சொல்லாதவரை கடையை மூடுவதலோ அல்லது அடித்து நொறுக்கி  வன்முறையைத் தூண்டுவதலோ எந்த மாற்றமும் வரப்போவதில்லை . குடிக்கு அடிமையாகிப் போன ஒருவரால் உடனே அந்த பழக்கத்தில் இருந்து விடுபட  இயலாது குடிக்கு பழகிய ஒருவர் திடிரென குடியை விட்டுவிடவும் கூடாது இதானால் பல விரும்பத் தகாத விளைவுகளை குடிவெறியர் களுக்கு உண்டாகும் என்பது மருத்துவ அறிவு கொஞ்சமேனும் உள்ளவர்களுக்கு தெரியும் .

     அப்படியானால் குடியை ஆதரிக் கின்றீர்களா எனவினவக்   கூடும் நமது நோக்கம்  குடியை ஆதரிப்பது அல்ல மாறாக கடுமையாக எதிர்ப்பது எனவே உண்மையான மக்கள் பற்றாளர்கள் என்றால் மக்களிடம் செல்லுங்கள் அல்லது இந்த வன்முறை நாடகத்தை நிறுத்துங்கள் என்பதுதான் நமது கொள்கை .


4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

உண்மை... குடி என்கிற மனநோய்க்கு மனமாற்றம் தான் தேவை...

Joker said...

அருமையான பதிவு. மது கடைகளை இயக்கம் நேரத்தை படிப்படியாக குறைத்து கட்டுக்குள் கொண்டு வரலாமே.

http://bharathidasanfrance.blogspot.com/ said...


ஐயா வணக்கம்!

இன்று உங்கள் வலைப்பூவை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.

http://blogintamil.blogspot.fr/2015/08/blog-post_9.html

Unknown said...

என்பெயரில்மற்றொருதளம்கண்டதில் மிக்கமகிழ்சிதோழி,
ஐயாபரதிதாசன்அவர்களால்தான் நான் இங்குவரமுடிந்தது
ஐயாவுக்குதான் நான் நான்றிசொல்ல வேண்டும்,