இதைப் பற்றி தமது அறிவு எல்லைக்கு எட்டியவரை அவரவர்களின் தரத்திற்கு ஏற்றவாறு ஊளையிடுகிறார்கள். பாவம் என எண்ணத்தோன்றுகிறது இப்படி எல்லாம் பேசி வயிறு வளர்க்க வேண்டி இருக்கிறதே என எண்ணி வேதனைப் படவேண்டி இருக்கிறது. .சாராயக் கடையை படிப்படியாகவோ அல்லது கால்படி கால்படியகவோ அல்லது லிட்டர் லிட்டரகவோ முழுமையாக மூட இயலுமா?அல்லது மூட முடியுமா?
அறிவை சற்று தீட்ட முயற்சி செய்வோம் குடிவொறிக்கு 45 ஆண்டுகளாக நாம் பழகி விட்டோம் இவர்களில் பாலர் குடிக்காமல் உயிர் வாழ இயலாது என்ற நிலையில் உள்ளார்கள் இவர்களை என்ன செய்யப் போகிறோம்? சிலர் குடிக்கவில்லை என்றால் கை நடுக்கம் முதல் பலவேறு உளவியல் சிக்கலில் சிக்கித்தவைக்கின்றனர் இவர்களை என்ன செய்ய இயலும்?இந்த பிழைப்பை நம்பி பல குடும்பங்ககள் வாழ்கின்றனர் இவர்களுக்கு என்ன மாற்றுத் திட்டம்? குடியை தொடவும் முடியாமல் விடவும் முடியாமல் சிக்கித்தவிக்கின்ற சுய நினைவு இல்லாமல் கிடக்கிறவர்களை என்ன செய்யப் போகிறோம்?
இது மட்டுமா? உடனே சாராயக் கடையை மூடினால் அடுத்த நிமிடமே ஊருக்கு ஊர் சாராயம் காய்ச்சத் தொடங்கி விடுவார்கள் விரைவாக ஈடு கட்ட இயலாமல் போகும் நிலையில் கள்ளச் சாராயம் விசச் சாராயமாக மற்றம் பெரும் காரணம் விரைவு கருதி எதை வேண்டுமானாலும் போட்டு தயாரிக்கும் போது விசமாக மாறும் நிச்சயமாக கள்ளச் சாராய சாவுகள் நிகழும் இதற்க்கு யார் பொறுப்பு ஏற்ப்பது? ஆள்வோர் முதல் காவல்துறையினர் முடிய பலரின் தலை உருளும் சாராயகடையை மூடு என்பவர்கள் அப்போதும் கூச்சலிட்டுக் கொண்டே இருப்பார்கள் மக்களோ அறியாமையில் உழல்வார்கள். என்ன செய்யப் போகிறோம்?
மக்கள் மீது உண்மையான அரசியல் கட்சி என்றால் மக்களை சந்தித்து குடி வெறிக்கு... குடிக்கு அடிமையாகிப் போனவர்களை ... இளைய தலைமுறையினரிடம் சென்று அவர்களை ஆற்றுப் படுத்த (வழிநடத்த ) வேண்டும் குடியால் வரும் உடலியல் உளவியல் சிக்கல்களை பட்டியலிட்டு அவர்களை வழிநடத்த வேண்டும். குடியினால் வரும் கேட்டை அறிவு அடிப்படையில் விளக்கினால் அடுத்தகட்ட தலைமுறை குடியை வெறுக்க வைக்க இயலும் இதைத்தான் முதலில் செய்யவேண்டும் . இதை விடுத்து எதைச் செய்தாலும் அது சாராயத்தை வைத்து நடத்தும் மட்டரகமான அரசியல் பிழைப்புவாதமே என்ன செய்யப் போகிறோம்?
7 comments:
விட முடியாத எந்த கெட்ட பழக்கமும் இல்லை...
நீங்கள் சொல்வது போல் முதலில் உணர வைக்க வேண்டும்...
உங்களது எண்ணமும் எனது எண்ணமும் அப்படியே பொருந்தி போகிறது
மாலதி, என்னால் படிக்க இயலவில்லை.சிவப்பு பின்னணியில் கருப்பு எழுத்து கஷ்டப்படுத்துகிறது.Select பண்ணி reverse பண்ணவும் முடியவில்லை.கொஞ்சம் மாற்றி அமையுங்க.
வெகு காலத்திற்கு பின்பு எழுத துவங்கிவிட்டீர்கள் போல இருக்கிறது. வாழ்த்துக்கள்
அருமையான பதிவு.
முதலில் விற்பனை நேரத்தை குறைத்து, பார்களை முற்றிலும் அகற்றி, கடுமையாக காவல்துறை கெடுபிடிகளுடன் தாங்கள் கூறியதையும் செயல்படுத்தினால் தமிழகம் மதுவில் இருந்து ஓரளவு மீண்டு வர 3 ஆண்டுகளாவது ஆகும்.
அருமை
அருமை
Post a Comment