இராஜஇராஜேஸ்வரி அவர்கள் வழங்கிய விருது

இராஜஇராஜேஸ்வரி  அவர்கள்  வழங்கிய  விருது

Saturday, 18 June 2011

கனவுலகில் வாழ்பவள் இல்லைஆயிரம் மலர்கள்
பூத்துக் குலுங்கும்
கல்லூரி தோட்டத்தில்
பூத்த புதுமை
மலரென்றாய்.

காதலில் தோற்று
கல்லறைக்கு
அனுப்புவோருக்கு
நடுவே ...
கலங்கரை
விளக்காய்  நின்றாய்
என்றாய் .

சட்டைப்பையின்
கனத்தை
கணக்கெடுக்காமல்
உண்மைக்காதலை
வென்று எடுத்தேன்
என்றாய்.

உண்மையை ...
எளிமையை கண்டு
இகழ் கிறவர்களுக்கு
நடுவே வலிமை
நிறைந்த 
வாழ்க்கைப்பாதையை
தேர்வு  செய்தேன் என்றாய்.

மனிதத்தை
மதிக்கத்தெரிந்ததால்
என்னை முழுமையாக
தத்தெடுத்துக்  கொண்டேன்  என்றாய்.

உயிரே ...
நான் கணவுலகில்
வாழ்கின்றவள்  இல்லை .

உன் ...
கண்ணெதிரே
வாழ எண்ணுகின்
அதனால்தான் அன்பே .

       மாறுபட்ட  கோணத்தில்  இந்த  இடுகை   பதிவு  செய்ய எண்ணினேன்  மீண்டும்  இந்த இடுகையும்  காதலை  மையப்படுத்தியே  அமைந்து விட்டது . 

24 comments:

Ramani said...

தலைப்பைக் கொண்டும் ஒவ்வொரு பத்தியிலும்
சொல்லிச் செல்லுகின்ற விஷயங்களைத் தொடர்ந்தும்
நானும் இதை வேறு கோணத்தில் சொல்லி செல்லுகிறீர்கள்
எனத்தான் நினைத்தேன்
முடிவில் இது காதல் கவிதையாகிப் போனாலும்
நல்ல கவிதையாகத்தானே உள்ளது
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

சி.பி.செந்தில்குமார் said...

காதலில் எல்லா கோணங்களும் மாறுபட்டதே

வை.கோபாலகிருஷ்ணன் said...

மாறுபட்ட கோணங்களின் உணர்வே தான் காதல் என்பதே. நல்ல கவிதை. நன்றி.
வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

ஜீ... said...

அருமை!

மைந்தன் சிவா said...

ம்ம்...தலைப்பில் ஒரு சின்ன எழுத்துப்பிழை மட்டுமே!

கவி அழகன் said...

ம்ம் எங்கேயும் காதல்

# கவிதை வீதி # சௌந்தர் said...

வித்தியாசமான சிந்தனையில் வித்தியாசமான கவிதை..

A.R.ராஜகோபாலன் said...

மனதை அள்ளிச் சென்ற
அற்புத கவிதை
உணர்வுகளின் வழியே
உள்ளத்தை
உறுதி செய்த கவிதை

சி.பி.செந்தில்குமார் said...

பதிவில் பல எழுத்துப்பிழைகள்.. சாம்ப்பிள் பிழை டைட்டில்லில் வரும் கணவு - கனவு

நிரூபன் said...

கணவுலகில்//

பேய்கள்/ கணங்களின் உலகினைத் தான் இங்கே கவிஞர் சுட்டுகிறார் சகோ.

நிரூபன் said...

ஆண்களின் புரிதலற்ற வினாக்களுக்குப் பலியாகும் பெண்களின் உணர்வுகளைக் கவிதையாக்கியிருக்கிறீங்க.

சௌந்தர் said...

நல்லா எழுதி இருக்கீங்க..!!!

மாறுபட்ட கோணத்தில் இந்த இடுகை பதிவு செய்ய எண்ணினேன் மீண்டும் இந்த இடுகையும் காதலை மையப்படுத்தியே அமைந்து விட்டது .///

காதலில் இருந்தால் எதை பற்றி எழுதினாலும் அது காதலில் வந்து முடிந்து விடும்

மாலதி said...

எல்லோருக்கும் பணிவான வணக்கங்கள் எமது இடுகை மாறுபட்ட இடுகை உங்களின் அதிமேலான கருத்துகளை பதிவு செய்யலாம். பிழை இருந்தால் அருள் கூர்ந்து சுட்டிகட்டுக அப்போதுதான் நான் சிறக்க இயலும் .

இராஜராஜேஸ்வரி said...

மாறுபட்ட அருமையான கவிதை. பாராட்டுக்கள்.

Anonymous said...

காதலில் கனவு மட்டுமே சுகம்..

Anonymous said...

//நான் கணவுலகில்//
க ன வு...

fine good post..:)

ஸ்பார்க் கார்த்தி said...

அன்பு சகோதரி உங்கள் எழுத்து மேலும் வளம் பெற வாழ்த்துக்கள்

நாய்க்குட்டி மனசு said...

காதலில் ஜெயித்து கூட கல்லறைக்கு அனுப்புபவர்கள் உண்டு

ஹேமா said...

நடிப்பில்லாத காதலைத்தான் மனங்கள் விரும்புகிறது மாலதி.மாறுபட்ட சிந்தனை நல்லாவேயிருக்கு !

vidivelli said...

very nice
supper
congratulation

இராஜராஜேஸ்வரி said...

http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_23.html

தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். கருத்துரைகளை அறியப்படுத்தவும். நன்றி.

vidivelli said...

எனது பக்கம் லெப்.கேணல் புரட்சிநிலாவின் தொடர் ஓடுகிறது ஓடிவாங்கோ..

இன்றைய கவிதை said...

கவிதை அருமை...

காதலும் கூட...!

-கேயார்

குணசேகரன்... said...

ஒவ்வொரு கவிதையும் உங்கள் பதிவின் நடை அருமை..மன உணர்வுகளை தொடுகிறது.பகிர்தலுக்கு நன்றி.