இராஜஇராஜேஸ்வரி அவர்கள் வழங்கிய விருது

இராஜஇராஜேஸ்வரி  அவர்கள்  வழங்கிய  விருது

Sunday, 12 June 2011

நீ என்னுள்ளத்தை ஆக்கிரமித்து கொண்டதால் ...

உன்....
தேடலின்
தகுதிகாண் பருவத்தில்
நான்வெற்றி
பெற்றதாய் சொன்னாய் .

என்னை...
வேண்டுமென்றே
சீண்டிப்பார்த்து
என்சகிப்புத்தன்மையை
அளவிட்டதாக கூறினாய்.

இன்பத்திலும்
துன்பத்திலும்
எனது உளவியலை
படம்பிடித்ததாக
பகிர்ந்துகொண்டாய்.

மற்றவர்களுடனான
தொடர்பில்
நான் தேர்ச்சிபெற்றதாக
அறிவித்தாய்.

முதியோர்களுக்கு
அக மகிழ்வுடன்
நான் உதவியதை
பரவசத்துடன்
பட்டியலிட்டாய்  .

என்னவனே ...
இவை எல்லாம்
நீ ...
என்னுள்ளத்தை
ஆக்ரமித்துக்
கொண்டதால்
அல்லவா நிகழ்ந்தது ?

34 comments:

மைந்தன் சிவா said...

//என்னவனே ...
இவை எல்லாம்
நீ ...
என்னுள்ளத்தை
ஆக்ரமித்துக்
கொண்டதால்
அல்லவா நிகழ்ந்தது ? ///
ஹிஹி ஆமா ஆமா அதனால் தானே!!

Ramani said...

தான் எவ்வித மாறுதலையும் அடையாமல்
தான் பக்கத்தில் இருப்பதாலேயே
பல மாறுதல்களைச் செய்யும்
பொருளுக்குப்பெயர் கிரியாஊக்கி
எனப் பெயர் என சிறுவயதில்
படித்த ஞாபகம்
நீங்கள் அதை சுருக்கமாக
என்னவன் என்கிறீர்கள்
அருமை அருமை
நல்ல படைப்பு தொடர வாழ்த்துக்கள்

தமிழ் உதயம் said...

காதல் வந்தால் வரக்கூடியதே வந்துள்ளது. வாழ்த்துகள்.

யாதவன் said...

ஆமாம் ஆமாம் அப்படி என்று தான் நினைக்கிறேன்

A.R.ராஜகோபாலன் said...

நேசித்தலின்
நேர்மை
நம்மை
நேசிப்பவர்களின்
நேசத்தை
அங்கிகரிப்பதில் தான்
அழகாகிறது
அந்த
அழகை
அற்புதமாய்
சொன்ன விதம்
அருமை தோழி

வை.கோபாலகிருஷ்ணன் said...

//என்னவனே ...
இவை எல்லாம்
நீ ...
என்னுள்ளத்தை
ஆக்ரமித்துக்
கொண்டதால்
அல்லவா நிகழ்ந்தது ?//

ஆம் ஆம்
அதே அதே

பதிவுக்குப்பாராட்டுக்கள்

kalamaruduran said...

ரசித்தேன்!!!

ஸ்ரீராம். said...

காதலாகிக் கசிந்து....

குணசேகரன்... said...

இதுதான் காதலா...அருமை.

ஹேமா said...

இத்தனை மதிப்பெண்கள் உங்கள் காதலுக்கு.மனதுக்குப் பிடித்தவர்கள் எது செய்தாலும் புள்ளிகள் கூடிக்கொண்டே போகும் !

நிரூபன் said...

புதிதாக மனதினுள் புகுந்த ஓர் இதயத்தின் உணர்வுகளினால் உண்டாகும் மாற்றங்களை உங்கள் கவிதை அழகாகச் சொல்லி நிற்கிறது.

சி.பி.செந்தில்குமார் said...

அண்ணன் அரசியல்வாதி போல.. அண்ணியை ஆக்ரமிச்ச்ட்டாரு ஹா ஹா

Rathnavel said...

நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

அசத்தல் கவிதை .. படிக்கும் போதே மனதை ஏதோ செய்கிறது..

ஆர்.கே.சதீஷ்குமார் said...

தெளிவான வரிகள்

vidivelli said...

//என்னவனே ...
இவை எல்லாம்
நீ ...
என்னுள்ளத்தை
ஆக்ரமித்துக்
கொண்டதால்
அல்லவா நிகழ்ந்தது ?//


நல்லாயிருக்குங்க!!!


!!நம்ம பக்கமும் உங்க கருத்துக்காக காத்திருக்கிறது!!

கந்தசாமி. said...

காதல் என்ற உணர்வால் வந்ததா! இல்லை காதலனின் பழக்கங்கள் தொற்றி கொண்டதா ...!! கவிதை அருமை சகோதரி ..

jaisankar jaganathan said...

கவிதை அருமை

உலக சினிமா ரசிகன் said...

எழுத்தாளர் சுஜாதா கதையை திருடி ஹாலிவுட்காரன்கள் படமெடுத்து விட்டான்கள்.முழு விபரமறிய எனது வலைப்பக்கம் வாருங்கள்.

சே.குமார் said...

அருமை.

இராஜராஜேஸ்வரி said...

நீ ...
என்னுள்ளத்தை
ஆக்ரமித்துக்
கொண்டதால்
அல்லவா நிகழ்ந்தது ? //

வாழ்த்துக்கள்.

சங்கவி said...

..முதியோர்களுக்கு
அக மகிழ்வுடன்
நான் உதவியதை
பரவசத்துடன்
பட்டியலிட்டாய் ..


அழகான அர்த்தமுள்ள வரிகள்...

சந்ரு said...

அழகான வரிகள்... காதலால் வந்த வரிகள்

சந்திரகௌரி said...

மாலதியின் சிந்தனை, மகிழ்ச்சியைத் தருகின்றது. அழகான கவிதை

பிரவின்குமார் said...

தங்களது யதார்த்தமான கவிதைகள் மிகவும் அருமை..!!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

கவிதையின் எதார்த்தம் மனதினை மெலிதாய் வருடி விட்டுச் செல்கிறது!

எல் கே said...

நல்லா இருக்குங்க

ரிஷபன் said...

நேசம் பூத்தூவி போயிருக்கிறது.. கவிதை முழுக்க.

அம்பாளடியாள் said...

பதிவர்களுக்கு இன்று எனது வலைத்தளத்தில் ஒரு விருந்து வைத்துள்ளேன் சென்று அனுபவியுங்கள்
வாழ்த்துக்கள்.........

Harani said...

மாறுபட்டிருக்கிறது இந்தக் கவிதை. அன்பு என்பது இயல்பாய் கசிந்து வருவது. அது உரிய மனத்தின் அனுமதியின்றி உள்ளே நுழைந்துவிடமுடியாது. ஆக்கிரமித்துக்கொண்டாய் என்கிற சொற்களில் அனுமதிதுவிட்ட உள்ளத்தின் அளவிடற்கரிய அன்பு வெளிப்பட்டு நிற்கிறது. ஆகவேதான் அந்த அலாதியான அதிகமான அன்பே எல்லா பரிசோதனைகளையும் நடத்த அனுமதிக்கிறது. அதனை சுகமாக அனுபவிக்கிறது. அருமையான கவிதை. பெண்களுக்கு இருக்கவேண்டிய தெளிவு இது. தகுதிகாண்பருவம் போன்ற சொற்களைப் பயன்படுத்தும்விதம் அழகாக வருகிறது.

Harani said...

மாறுபட்டிருக்கிறது இந்தக் கவிதை. அன்பு என்பது இயல்பாய் கசிந்து வருவது. அது உரிய மனத்தின் அனுமதியின்றி உள்ளே நுழைந்துவிடமுடியாது. ஆக்கிரமித்துக்கொண்டாய் என்கிற சொற்களில் அனுமதிதுவிட்ட உள்ளத்தின் அளவிடற்கரிய அன்பு வெளிப்பட்டு நிற்கிறது. ஆகவேதான் அந்த அலாதியான அதிகமான அன்பே எல்லா பரிசோதனைகளையும் நடத்த அனுமதிக்கிறது. அதனை சுகமாக அனுபவிக்கிறது. அருமையான கவிதை. பெண்களுக்கு இருக்கவேண்டிய தெளிவு இது. தகுதிகாண்பருவம் போன்ற சொற்களைப் பயன்படுத்தும்விதம் அழகாக வருகிறது.

எஸ் சக்திவேல் said...

நன்றாக எழுதுகிறீர்கள். என்றாலும், உங்களிடம் இருந்து காதல் தவிர்ந்த கவிதைகளைம் எதிபார்க்கிறேன். காதல் கவிதைகள் புரிபடுதில்லை.(நான் பாதி கிழவன் ஹீ ஹீ!);

மாலதி said...

வருகைக்கும் கருத்துகளுக்கும் உளம் கனிந்த பாராட்டுகளும் நன்றிகளும் மற்றும் ஒரு செய்தி வெறுமனே பாராட்டுகள் தவிர்க்கலாமே குறைகளை சொல்லுங்கள் தவிர்த்துக்கொள்ளுகிறேன்.காதல் மட்டும் எழுதுவேன் என அடம் பிடிக்கவில்லைனான் எல்லாமும் வரும் தேவைகருதி காதலை முதன்மை படுத்த படுகிறது .நன்றி.

kavithai said...

''..எல்லாம்
நீ ...
என்னுள்ளத்தை
ஆக்ரமித்துக்
கொண்டதால்
அல்லவா நிகழ்ந்தது ? ''
ஆம் காதல் பல ஆச்சரியங்களை நிகழ்த்தும் தான்...
Vetha. Elangathilakam.
http://www.kovaikkavi.wordpress.com