நானும் சராசரி
பெண்தான் .
என்னுள்ளும்
ஆயிரமாயிர
போராட்டங்கள் .
பலமுனையிலிருந்தும்
நெருக்குதல்கள்.
தாக்கு பிடிக்கயியலா
எத்தனையோ
சுமைகள்
கொடுமைகள் .
வறுமையோடு
போராடுவது
தற்கொலைக்கு
ஒப்பானது .
வழ்கையினுடனான
எனது போராட்டத்தில்
நானே தலைமை
தாங்குகிறேன் .
நானே வீரனுமாகிறேன் .
தோல்வி காணும்
போது எல்லாம்
எவரும்
ஆறுதால் கூறவுமில்லை.
தட்டிக்கொடுத்து
உற்சாக படுத்தவுமில்லை
இதற்காக
நான் ...
கலங்கியதுமில்லை.
இந்த சமூகம்
கற்று கொடுக்காத
போதும்
கட்டைவிரலை
கேட்கிறது .
35 comments:
வறுமையோடு
போராடுவது
தற்கொலைக்கு
ஒப்பானது .//
அதை அனுபவிச்சவங்களுக்குதான் அதன் பாரம் என்னான்னு புரியும் மாலதி....அருமை...!!!
வழ்கையினுடனான
எனது போராட்டத்தில்
நானே தலைமை
தாங்குகிறேன் .
நானே வீரனுமாகிறேன் . //
ஏனெனின் நான் உழைக்கிறேன், மற்றவர்களை எதிர்பாராமல்....சூப்பர் மாலதி....!!!!
தோல்வி காணும்
போது எல்லாம்
எவரும்
ஆறுதால் கூறவுமில்லை.
தட்டிக்கொடுத்து
உற்சாக படுத்தவுமில்லை
இதற்காக
நான் ...
கலங்கியதுமில்லை.//
அப்பிடியே நாஞ்சில் மனோ கேரக்டர்......!!!!
இதற்க்காக நான் கலந்கியதும் இல்லை,
கலங்க போவதும் இல்லை.......
இந்த சமூகம்
கற்று கொடுக்காத
போதும்
கட்டைவிரலை
கேட்கிறது .//
ம்ஹும் ம்ஹும்.....!!! நான் அசரபோவதுமில்லை.....!!!!
அப்பிடியே நான்....
உங்கள் கவிதையில்..............
எனக்கு இப்போ இன்னும் தன்னம்பிக்கை வந்து விட்டது மாலதி......சூப்பர் டூப்பர் சாடல்,
நாம் யாரையும் நம்பி இல்லை....!!!
துரோணரின் சிலை கொண்டுதான்
ஏகலைவன் கற்றுகொள்கிறான் ஆயினும்
அர்ச்சுனனுக்காக கட்டைவிரல் கேட்கும்
துரோணரின் துரோக எண்ணம்போல்
கற்றுத்தராது போயினும் கட்டைவிரல் கேட்கும்
துரோ(ணா)க சமுதாயத்தை மிக அழகாகப்
படம்பிடித்துக்காட்டி இருக்கிறீர்கள்
சூப்பர் பதிவு தொடர வாழ்த்துக்கள்
தனி ஒரு பெண்ணின் போராட்டத்தை சொல்லி இறுதியில் ஒரு அற்புத வரி சொல்லியிருக்கிறீர்கள்
இந்த சமூகம்
கற்று கொடுக்காத
போதும்
கட்டைவிரலை
கேட்கிறது .
சமுகத்துக்கு ஒரு சாட்டை அடி
///வாழ்கையினுடனான
எனது போராட்டத்தில்
நானே தலைமை
தாங்குகிறேன் .///
மிகவும் அருமையான வரிகள்.
கற்று கொடுக்காத
போதும்
கட்டைவிரலை
கேட்கிறது .//
பகிர்வு பாரமானது தோழி.
இந்த சமூகம்
கற்று கொடுக்காத
போதும்
கட்டைவிரலை
கேட்கிறது .//
சீராக
சிறப்பாக
நேராக
நெருப்பாக
வந்த கவிதை
திடீரென
சமூகத்தின்
சிரம் தட்டியது
அமர்க்களம்
//தோல்வி காணும் போது எல்லாம்
எவரும் ஆறுதல் கூறவுமில்லை.
தட்டிக்கொடுத்து உற்சாக படுத்தவுமில்லை//
கவிதையில் தங்கள் வேதனைகளை ஓரளவு உணரமுடிகிறது.
நல்ல தோழிகளுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.
[நம் பதிவர்களான திருமதி சாகம்பரி அவர்களும் திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களும் கூட உங்கள் பிரச்சனைகளுக்கு நல்ல ஆறுதலும், ஆலோசனைகளும் தரக்கூடியவர்கள்]
இவர்களைப்போன்றவர்களுடன் அடிக்கடி தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
தனிமையில் இறை வழிபாடும் பிரார்த்தனைகளும் மனதிற்கு மகிழ்ச்சியைத்தரக்கூடும்.
தன்நம்பிக்கைதான் வாழ்க்கையின் வெற்றிக்கு உதவும். எந்த சூழ்நிலைகளிலும் நம்பிக்கையை இழக்காதீர்கள்.
வாழ்க்கைப் போராட்டங்களில் வெற்றிபெற என் அன்பான வாழ்த்துக்களும், ஆசிகளும்.
அன்புடன் vgk
இன்றைய உண்மை நிலை சொல்லும் கவிதை
மனசை தொட்ட கவிதை
அதிலும் அந்த கடைசி வரிகள்
/இந்த சமூகம்
கற்று கொடுக்காத
போதும்
கட்டைவிரலை
கேட்கிறது /.
சூப்பர்
வறுமையோடு
போராடுவது
தற்கொலைக்கு
ஒப்பானது //
முற்றிலும் உண்மை.
சகோ ..கவனிக்கவும்..
" வழ்கையினுடனான "
இந்த சமூகம்
கற்று கொடுக்காத
போதும்
கட்டைவிரலை
கேட்கிறது .//கொடுமை ...
சமூகம் இழைக்கும் சிறு சிறு தவறுகளால் தான், ஒரு மனிதனது வாழ்விக் மனோதத்துவ நிலையில் அவனது முன்னேற்றம் தடைப்படுகிறது என்பதனைத் தத்துவம் நிரம்பிய கவிதையாகத் தந்திருக்கிறீங்க.
சமூகம் எப்பத்தான் யாரைத்தான் விட்டு வைக்குது.கண்ணை மூடி காதையும் மூடிக்கொண்டு எங்களின் வழி நடக்கிறதுதான் சரி மாலதி.ஆனால் சரியா நடப்போம் !
இந்த சமுகம் நம் கண்ணோட்டத்தில் தான் இருக்கின்றது, இழிபட்ட சமுதாயத்தில் இருப்பதை என்னி ஆழ்ந்த வருத்தம் கொள் எங்கின்றார் விவேகானந்தர். . .
ஆழமான வரிகள், வாழ்த்துக்கள். . .
kavithai கவிதை நீட்
தோல்வி காணும்
போது எல்லாம்
எவரும்
ஆறுதால் கூறவுமில்லை.
தட்டிக்கொடுத்து
உற்சாக படுத்தவுமில்லை
இதற்காக
நான் ...
கலங்கியதுமில்லை.
அருமயான கவிதைகளை தந்துகொண்டிருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்களுடன்,நன்றிகளும்
ஆறுதால் கூறவுமில்லை.
தட்டிக்கொடுத்து
உற்சாக படுத்தவுமில்லை
இதற்காக
நான் ...
கலங்கியதுமில்லை.
நேரே நடக்க வேண்டியது தான்..நல்ல வரிகள்...
Vetha.Elangathilakam
http://www.kovaikkavi.wordpress.com
அருமை..
பாரதி கண்ட புதுமைப் பெண்ணே
வாழ்த்துக்கள்..
சிவயசிவ - விற்கு வருகை தந்தமைக்கு நன்றி..
தங்கள் தளத்தில் இணைந்தோம்..
நட்பால் இணைவோம் ..
இறையருளால்
http://sivaayasivaa.blogspot.com
சிவயசிவ
தன்னம்பிக்கையூட்டும் அதேசமயத்தில் சமுதாயத்தையும் சாடும் அருமையான கவிதை..
சமூகம் என்பது எப்போதுமே மூன்றாம் மனிதர்களால் நிறைந்த சாக்கடைதான். அவதூறு பேசவும், அடுத்தவர்களைக்குறை சொல்லவும் நாக்கைச்சுழற்சிக்கொண்டு காத்திருக்கும் நாய்கள் நிறைந்தது. நமக்கான வழியில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் வாழ்க்கைப்பயணத்தை தொடரக்கற்றுக்கொண்டால் இனிமைகள் துணையாகக்கூடும்... நல்ல வரிகளுடன் எளிதாய்ப்புரியும் கவிதை தந்த உங்களுக்கு மனதார வாழ்த்துக்கள்...
அனுபவமே சிறந்த ஆசிரியர்..
சமூக மற்றத்துக்காக கவலைப்படணும், இழி சமூகத்துக்காக ஒருபோதும் அல்ல.
வாழ்த்துகள்
அருமையான வரிகள்!
ஆழமான வரிகள். வலியுடன் நம்பிக்கை தரும் கவிதை.. மாலதி
@Ramaniகருத்து சொல்லுவது சிறந்தது அல்ல ஒரு ஆக்கத்தை புரிந்து கொண்டு அவற்றில் உள்ள நோக்கத்தையும் குறியீட்டையும் புரிந்து சொல்லுகிற இடம்தான் முறையான விமர்சனம் அதை எப்போதுதுமே முறையாக செய்கிறவர் நீங்கள் பாராட்டுகள் .
//தோல்வி காணும்
போது எல்லாம்
எவரும்
ஆறுதால் கூறவுமில்லை.
தட்டிக்கொடுத்து
உற்சாக படுத்தவுமில்லை
இதற்காக
நான் ...
கலங்கியதுமில்லை.//
நச் வரிகள்....
நல்லா எழுதியிருக்கீங்க சூப்பர்
வலியை வார்த்தைகளாக்கி கவிதையை கனமாக்கி முடித்திருக்கிறீர்கள்.. வாழ்த்துக்கள் தோழி...
"வாழ்க்கையுடனான போராட்டத்தில் நானே தலைமை தாங்குகிறேன்... ////
வலி.. வரி...
//இந்த சமூகம்
கற்று கொடுக்காத
போதும்
கட்டைவிரலை
கேட்கிறது .//
பளார் வரிகள்..!
STRONG ONE...
வெற்றி வெகு தூரத்தில் இல்லை...
மனம் இருந்தால் மார்க்கமுண்டு... தன்னம்பிக்கை உள்ள மாலதிக்கும் மார்க்கமுண்டு..
rajehsnedveera
http://maayaulagam-4u.blogspot.com
இந்த சமூகம்
கற்று கொடுக்காத
போதும்
கட்டைவிரலை
கேட்கிறது .
நெருப்பு தெறிக்கும் வார்த்தைகள்
Post a Comment