இராஜஇராஜேஸ்வரி அவர்கள் வழங்கிய விருது

இராஜஇராஜேஸ்வரி  அவர்கள்  வழங்கிய  விருது

Saturday, 20 August 2011

இது தான் மதங்களின் களின் இலட்சணமா? அரசுகளின் இலட்சணமா?

யாழில் சிங்களவன்
அறிவிக்கிறானாம்.

போரின் காரணமாக

வீடிழந்த  மக்கள்
தங்களின் காணிகளில்
புத்த விகாரமைக்க
இடமளித்தால்
ஆறு   இலட்சம்செலவில்
வீடு  கட்டித்தரப்படுமாம் .

இந்தியாவை  ஆள்வோரே

எங்களின்  கைகளைகொண்டே
எங்களின்  கண்களை  குத்துவதா ?
இதற்கா எங்களின்  வரிப்பணம் இரண்டாயிரம்  கோடி 
 


சண்டையில்

தமிழர்களிடமிருந்து
வலிந்து பெறப்பட்ட
இடங்களின் தமிழ
பண்பாட்டு அடியாளங்களை
அழித்து அதேவேகத்தில்
புத்தன் சிலைகள் நடப்படுகின்றனவாம் .

ஏ...
புத்தனே -நீ
கண்களை மூடிக்கொண்டே
கொடுமைகளுக்கு  கூர்தீட்டு கிறாயா?

யாழ் ...

கிளிநொச்சி ...
மாங்குளம்...
கனகராயன் குளம்
வவுனியா ...
எல்லா இடங்களிலும்
புத்தன் புன்னகைத்தபடியே
சிலைகளாய்  ஆக்கிரமிக்கிரானாம்

வீரம்
செறிந்த வன்னி நிலம் -இப்போது
பௌத்த  நிறமாக  மாறுகிறதாம்

.யாழ் பல்கலையும்

தொல்லியல் அமைச்சும்
கந்தரோடையில் ஆய்வு
நிகழ்த்துகிறதாம்
புத்தநடாக உலகிற்கு
அடையாளம்  காட்ட .

இலங்கையில் தமிழர்
நாடாண்டகல்வெட்டுகள்
காணக்கிடக்கிறதே
அதை எப்படி மறைப்பாய் ?

இராணுவப் பாதுகாப்பும்

அரச கட்டளையும்
புத்தனின் சிலைகளை
ஈழம் முழுமைக்கும்
கொண்டு சேர்க்கிறதாம் .

தமிழகத்து
ஆண்மக்களே
உங்களின் ஆண்குறியும்
அறுத்தெறிய படலாம்
ஈழத்தில் பிறக்கும் தமிழ் குழந்தைகள் போல .

கேரளா மூத்தூட் பைனான்சு

வந்து விட்டது  நம்  நிலம்
பறிபோகிறது உன் 
நாடிழக்கலாம்
வீரத்தை
இப்போதே காட்டு
தமிழ் ஈழத்திக்கு
தோள்கொடுக்க பழகு
சிங்களனுக்கு
எதிர்ப்பை காட்டு..
   சோனியாவின்
  மன்மோகன்
அரசுக்கும்  எதிர்ப்பைகாட்டு...

     உலகின் எல்லா மதங்களும் அமைதியையும்  அன்பையும்தான்   போதிப்பதாக கூறு கிறது  ஆனால் தன் கைகளில்  நச்சு  குண்டுகளை அல்லவாவைத்திருக்கிறது .

இஸ்லாம்  நபிகள்  நாயகம்
   கூடாரங்கள்  எப்போதும் தனித்தனியாக பிரிந்தே  இருக்கட்டும். ஆனால் எல்லோருடைய  இதயங்களும்  இணைந்தே  இருக்கட்டும். என்கிறார் .

கிருத்துவ மதமுதல்  பாடல்
      கடவுளுக்கு மகிமையும்  மண்ணில்  சமாதானமும்  மனிதர்கள் மேல்  பிரியமும்  உண்டாவதாக . என்கிறது .

புத்தமதத்தை  பற்றி   சொல்லவே வேண்டாம்.
       சண்டை இல்லாத   உலகத்தை படைக்க வேண்டும்  என்பதுதான்  அதன் முதன்மை குறிக்கோள்  ஆனால் பல இலட்சம்  தமிழர்கள்  படுகொலை புத்த மதத்தின் பேரால்  செய்யப்பட்டது .

இந்து மதம்

அதிகம்  பேச வேண்டாம்  அன்பே  சிவம்  என்கிறது

        இப்படி  உண்மைக்கு நேரான  கொள்கைகளை கொண்ட  இந்த மதங்கள் தான் கொலை கருவிகள் வழங்கியும்  பொருளுதவி  வழங்கியும்  பல்லாயிர தமிழ மக்களை  கொன்றது  இது தான்  மதங்களின்  களின் இலட்சணமா?    அரசுகளின் இலட்சணமா?


உலகின் எங்கோ
ஒரு மூலையில் நடக்கும்
அநியாயத்தைக் கண்டு
உங்கள் மனம் கொதித்தால்
நாம் இருவரும் தோழர்களே...... -சேகுவேரா


அண்ணா ஹசாரேவின் மக்கள்  அறமன்றம் (நீதி) அமைக்க  துணை நிற்ப்போம்   ( ஜன லோக்பால்)

நாகை மீனவர்கள்  தாக்க பட்டமைக்கும்  தொடர்ந்து  தமிழக மீனவர்கள்  தாக்கபடுவதர்க்கும் இந்திய அரசே ! தமிழக  மீனவர்களிடம்  மன்னிப்பு கேள் தமிழக  மீனவர்களுக்கு  சிங்களனுக்கு  கொடுத்ததைபோல   கருவி (ஆயுதம் )கொடு . 

46 comments:

ஆகுலன் said...

கொஞ்சம் பெரிசா தான் இருக்குது வாசித்து விட்டு வாறன்..

நாலு கப் டீ......(கொஞ்சம் குடிச்சு பாருங்கோ)

இராஜராஜேஸ்வரி said...

உலகின் எல்லா மதங்களும் அமைதியையும் அன்பையும்தான் போதிப்பதாக கூறு கிறது ஆனால் தன் கைகளில் நச்சு குண்டுகளை அல்லவாவைத்திருக்கிறது .

உண்மைதான்.

ஆகுலன் said...

ஒவ்வொரு வரியும் உண்மை.....கருத்து இடமட்டுமே என்னால் முடியும் என்ன செய்ய......புத்தன்ஆவது கண்ணை மூடி இருக்குறான் நான் கண்ணை திறந்து கொண்டுதான் இருக்குறேன்....

நாலு கப் டீ......(கொஞ்சம் குடிச்சு பாருங்கோ)

ஆகுலன் said...

மதம் எமது மொழியின் படு குழி.......


நாலு கப் டீ......(கொஞ்சம் குடிச்சு பாருங்கோ)

Ramani said...

வெந்து நொந்து போன
புண்ணாகிப் புரையோகிகிடக்கிற
எம் ஈழ சகோதர சகோதரிகளின்
உள்ள வெளிப்பாடாய்
உணர்ச்சி வெளிப்பாடாய்
அமைந்துள்ள கவிதை
தமிழக தமிழர்களின் மனச்சாட்சியை
வெட்கித் தலைகுனிய வைத்துதான் போகிறது
துரோகத்தை நினைவுறுத்திப்போகும் கவிதை
அருமையிலும் அருமை

கோகுல் said...

தமிழக மீனவர்களுக்கு சிங்களனுக்கு கொடுத்ததைபோல கருவி (ஆயுதம் )கொடு //
இதே போக்கு நீடித்தால் நிச்சயம் தேவைப்படும்!

நற்கீரன் said...

பர்மா, தாய்வான், சீனா, இலங்கை, வியட்நாம் பெளத்தம் எங்கு இருக்கிறதோ, அங்கெலாம் சர்வதிகாரம். யார் சொன்னாம் பெளத்தம் அமைதியின் மதம் என்று, அது ஒரு அடக்குமுறைக் கருவியாகவே எனக்குத் தெரிகிறது.

மகேந்திரன் said...

தமிழ்மணம் 2

தமிழ் உதயம் said...

எப்போதும் மதங்களின் லட்சணமும், அரசுகளின் லட்சணமும் இது தான்.

மகேந்திரன் said...

மனிதனுக்கு மதம் பிடிக்காமல் இருக்கவே
மதம் போதிக்கிறது.....
மதம் பிடித்த மனிதருக்கு
மதம் ஒரு பேதம் தான்

மாலதி said...

@நற்கீரன்உண்மைதான் நாம் சொல்ல வந்தது முதலில் புத்தமதம் தோன்றிய போது கூறி கொண்டார்களே அதைதான் குறிப்பிட்டோம் வருகைக்கு பாராட்டுகள் நன்றி

குணசேகரன்... said...

என்று தணியும் இந்த அவலம்?

வை.கோபாலகிருஷ்ணன் said...

தங்களின் உள்ளக்கொதிப்பு நன்கு இந்தக் கவிதையில் உணரமுடிகிறது.

// உலகின் எல்லா மதங்களும் அமைதியையும் அன்பையும்தான் போதிப்பதாக கூறுகிறது ஆனால் தன் கைகளில் நச்சு குண்டுகளை அல்லவா வைத்திருக்கிறது.//

ஆம். அப்படித்தான் தெரிகிறது.

//உலகின் எங்கோ
ஒரு மூலையில் நடக்கும்
அநியாயத்தைக் கண்டு
உங்கள் மனம் கொதித்தால்
நாம் இருவரும் தோழர்களே...//

மிகவும் நியாயமான அழகான வரிகள்.

மாலதி said...

@குணசேகரன்...தமிழர்கள் எல்லோரும் ஒன்றாக தமிழன் என்ற உணர்வுடன் இடையும் போது பாராட்டுகள் நன்றி

முனைவர்.இரா.குணசீலன் said...

உலகின் எல்லா மதங்களும் அமைதியையும் அன்பையும்தான் போதிப்பதாக கூறு கிறது ஆனால் தன் கைகளில் நச்சு குண்டுகளை அல்லவாவைத்திருக்கிறது .

முற்றிலும் உண்மை!!!!!

ரியாஸ் அஹமது said...

உங்கள் வேதனையும் ஆதங்கமும் மிக மிக நியாமானது தான் ...அது உங்கள் கவிதையில் வரிக்கு வரி சூடாக வெளிப்பட்டு இருக்கிறது ..
இந்த பிரச்சினைக்கு காரணம் மனிதனின் குறுகிய சிந்தன்னையும் அரசியலும் தானே தவிர மதங்கள் அல்ல.

நீங்க சொன்னது சரி ..அனைத்து மதங்களும் அன்பையே, அன்பை மட்டுமே போதிக்கின்றன ஆனால் மனிதனின் கையில் ஆயுதம் ஏன்? அது மனிதனின் தவறு .

காந்தி பனங்கூர் said...

ஓட்டுக்கேட்கும் போது நம்மிடம் பிச்சைக்காரர்களாக கையேந்துகிறார்கள். நாம் போராட்டம் செய்தால் இப்போது நம்மை கைது செய்ய்ய துடிக்கிறார்கள். நம் மக்கள் அங்கு படும் அவஸ்தையை சாதாரண குடிமக்களால் உணர முடிகிறது. ஏசி அறையில் கூத்தடிக்கும் அரசியல்வாதிகளுக்கு புரியவில்லையே நம் வேதனை.முடிந்தால் இந்த வேடியோவை பாருங்கள். இந்திய அரசின் நாடகம் வெளிப்படும். http://www.tamilthai.com/?p=24588

RAMVI said...

தங்கள் ஆதங்கம் புரிகிறது மாலதி.சண்டை இல்லாத உலகம் வேண்டும். இது எப்பொழுது நிறைவேறுமோ தெரியவில்லை.

Rathnavel said...

வேதனையாக இருக்கிறது.

K.s.s.Rajh said...

வணக்கம் அன்புச்ச்கோதரி.உங்கள் கவிதை அருமையாக உள்ளது.
நன்றி.
ஈழத்தில் குருதிக்கறை படிந்த வன்னி மண்ணில் பிறந்த ஒருவனாக.
இது மட்டும்தான் நாங்கள் சொல்ல முடியும் அக்கா வேற என்ன செய்வது.

ஸ்ரீராம். said...

அமைதி அமைதியாகவே இருப்பதுதான் பிரச்னை. அமைதியும், சமாதானமும் எல்லா நாடுகளிலும் பேச்சளவில்தான்.

ரிஷபன் said...

உலகின் எங்கோ
ஒரு மூலையில் நடக்கும்
அநியாயத்தைக் கண்டு
உங்கள் மனம் கொதித்தால்
நாம் இருவரும் தோழர்களே......

நியாயங்கள் தடுமாறும்போது மனசு கொதிக்கிறது.. செய்வதறியாமல் தவிக்கிறது.

Anonymous said...

சகோதரி நீட்டமாக உள்ளது வாசிக்கவில்லை. ஆயினும் துன்பங்கள் தீர வேண்டும். பேதமின்றி நாம் வாழவேண்டும். அதற்கு இறையருள் கிட்டட்டும்.
வேதா. இலங்காதிலகம்.

கவி அழகன் said...

புரச்சி தெறிக்கும் வரிகள்

"கற்றது தமிழ்" துஷ்யந்தன் said...

ஒவ்வொரு வரிகளிலும் அனல் தெறிக்கிறது.
அவசியம் எல்லோரும் படிக்க வேண்டிய பதிவு,

என்னைப்பொறுத்தவரை மதம் என்பது
நமக்கு தேவை இல்லாத ஒன்று...

Anonymous said...

வேதனை..துரோக கவிதை அருமை...

விக்கியுலகம் said...

அழ வைக்கும் புத்தனும்.....அசிங்கப்படுத்தும் அரசியலும் கலந்த கலவையே இதற்க்கு காரணமா....பகிர்வுக்கு நன்றி

பிரணவன் said...

உலகின் எங்கோ
ஒரு மூலையில் நடக்கும்
அநியாயத்தைக் கண்டு
உங்கள் மனம் கொதித்தால்
நாம் இருவரும் தோழர்களே...... -சேகுவேரா
தம்மால் இயன்ற அளவேனும் எதிர்ப்பை காட்டவேண்டும், ஆதங்கம் தான் வருகின்றது. . .

சென்னை பித்தன் said...

ரௌத்திரம் பழகியிருக்கிறீர்கள்!

thequickfox said...

//உலகின் எல்லா மதங்களும் அமைதியையும் அன்பையும்தான் போதிப்பதாக கூறுகிறது ஆனால் தன் கைகளில் நச்சு குண்டுகளை அல்லவா வைத்திருக்கிறது.//
இந்த கருத்து மிகவும் உண்மையானவை.
மற்றவை பிரசார செய்திகளை அடிப்படையாக வைத்தே எழுதப்பட்டுள்ளது. இலங்கையில் தமிழர்கள் பிரதேசங்களில் மட்டுமல்ல சிங்களவர்களின் பிரதேசங்களிலும் இந்து கோவில்கள் உண்டு. அங்கேகேயும் திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன.
லண்டனில் இப்போ தடக்கி விழுந்த இடமெல்லாம் இந்து கோவில்கள் உள்ளன.ஆகையால் கிறிஸ்தவ நிலம் இப்போது இந்து நிறமாக மாறுகிறது என்று சொல்லலாமா?
இலங்கை தமிழர்களின் பண்பாட்டு அடியாளங்களை பற்றிய கலையரசனின் சிறந்த கட்டுரை.
http://kalaiy.blogspot.com/2011/08/blog-post_19.html

Anonymous said...

///யாழ் பல்கலையும்
தொல்லியல் அமைச்சும்
கந்தரோடையில் ஆய்வு
நிகழ்த்துகிறதாம்
புத்தநடாக உலகிற்கு
அடையாளம் காட்ட ./// ஏற்க்கனவே எதிர்பார்த்த ஒன்று தான்...

Anonymous said...

///இலங்கையில் தமிழர்கள் பிரதேசங்களில் மட்டுமல்ல சிங்களவர்களின் பிரதேசங்களிலும் இந்து கோவில்கள் உண்டு. அங்கேகேயும் திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன.
லண்டனில் இப்போ தடக்கி விழுந்த இடமெல்லாம் இந்து கோவில்கள் உள்ளன./// அன்பரே கொழும்பிலும் லண்டனிலும் வலுக்கட்டாயமாக நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு கோவில்கள் கட்டப்படவில்லை , மற்றும்படி சிங்கள மக்கள் அற்ற, தமிழ் மக்கள் பரந்து வாழும் பகுதியில் புத்த கோவில்கள் கட்டுவதன் மூலம் அவர்கள் செய்ய நினைப்பது தங்களுக்கு புரியவில்லையா என்ன ??

தட்டி கேட்க வேண்டியவர்கள் எல்லாம் முதுகில் தட்டி கொடுக்கிறார்கள்..பாருங்கள்...!!

செங்கோவி said...

அநியாயம் தான்..

செங்கோவி said...

அநியாயம் தான்..

காட்டான் said...

தட்டி கேட்க வேண்டியவர்கள் எல்லாம் முதுகில் தட்டி கொடுக்கிறார்கள்..பாருங்கள்...!!

நன்றி மாப்பிள்ள நாங்க எப்பிடி அடிச்சாலும் மாற மாட்டோமா??

அருமையான கவிதை வாழ்த்துக்கள் சகோ..

காட்டான் குழ போட்டான்..

சி.பி.செந்தில்குமார் said...

wonderfull

vidivelli said...

ஆதங்கங்கள் கவிதையில் நிரம்பி வழிகிறது தோழி..
விகாரைகளை அமைத்து கட்டம் கட்டமாக குடியேற்றங்களை நிறுவும் திட்டம் ..
இப்போதாவது புரியுமா...
அந்த சூரியனின் மகிமை..
எங்களுக்குள்ளே புலம்புவோம்..
தட்டிக்கேட்க யாருமில்லாதவர்களானோமே..

அற்புதமான பகிர்வு..
பதிவுக்கு அன்புடன் பாராட்டுக்கள்

சாய்ரோஸ் said...

//தமிழகத்து
ஆண்மக்களே
உங்களின் ஆண்குறியும்
அறுத்தெறிய படலாம்
ஈழத்தில் பிறக்கும் தமிழ் குழந்தைகள் போல...//
உங்கள் கோபம் நியாமானதுதான் தோழி... ஆனால் இவ்வளவு கடுமையான வரிகளை கொஞ்சம் தவிர்த்துக்கொள்ளுங்கள்... வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் அவரவர் பார்வையைச் சார்ந்ததேயொழிய ஒருவரைப் பிறர் சாடல் என்பது பெரிதாய் உபயோகமிருக்கப்போவதில்லை.
தொடருங்கள் உங்கள் தமிழை...

மாலதி said...

@சாய்ரோஸ்கருத்து களுக்கு நன்றிகள் இந்த ஆதங்கம் களுடன் எத்தனை நாட்கள் இருப்பது இங்கே தமிழனின் விலை நிலம் எல்லாம் பரி போகிறது ஈழத்தில் கொடுமைகள் வேறு இப்போதும் தமிழன் விழிக்காவிட்டால் எப்படி அதன்தான் கருத்துகளுக்கு நன்றி

மாலதி said...

@கந்தசாமி.நாம் சொல்ல வேண்டிய பதிலை அதே பாணியில் சொல்லியமைக்கு உளம் கனிந்த பாராட்டுகள் நன்றி

சத்ரியன் said...

’உள்ள’ வெளிப்பாடு உள்ள படியே!

Anonymous said...

சகோதரி மாலதி! உங்கள் வியூ மை கொம்பிலீற் புறொபைஃல்க்கு ஒரு மகிழ்வான முகமுடைய படம் போடுங்களேன் ப்ளீஸ்! பார்க்கும் போது சோகமான தோற்றம் சோர்வைத் தருகிறது. என்ன!.....என்ற எண்ணம் வருகிறதடா! ப்ளீஸ்....cheer up...
வேதா. இலங்காதிலகம்.

மாலதி said...

@kovaikkaviவணக்கம் உங்களின் கருத்துகளை பரிசீலனை செய்ய இயலாத சூழ்நிலையில் உள்ளேன் உண்மையிலேயே தமிழர்களின் மீதும் தமிழ கலைகள் மீதும் மாறாத காதல் கொண்டவள் நான் கடுமையான வறுமையில் தான் இந்த இடுகைகளை கணிப்பொறி நடுவங்களுக்கு சென்று பதிவு செய்கிறேன் என்னுடைய சொந்த நலனிற்காக ஒருபோதும் சிந்திக்கவில்லை இந்த சமூக நலன் கருதியே இத பதிவுகள் அதேபோல தமிழர்களும் ஒட்டுமொத்த தமிழினமும் சிந்திக்க தொடக்கி விட்டால் தமிழீழம் மலந்து விட்டால் என்னுடைய மகிழ்சி புகைபாம் இங்கே அரங்கேறும் அதுவரை என்னுள்ளத்தில் சோகம் குடிகொண்டு இருக்கும் .

மஞ்சுபாஷிணி said...

வேதனை வரிகள் மாலதி....

ஒவ்வொரு வரியும் துடிக்க வைக்கிறது :(

ஒவ்வொருவரின் உள்ளத்தில் எரிமலையே இப்ப இருக்கும்....

அதன் தாக்கம் தான் இப்படி கண்ணீரை கவிதை வரிகளாக நீங்க இங்கே படைத்தது....

அன்பை மட்டுமே கொண்டு வாழும் இடமாக ஈழம் திகழும் மலரும் நம்பிக்கையுடன் நாம்.....

மாலதி said...

அனைவரின் வருகைக்கும் கருத்துகளிற்கும் முறையான வழிகாட்டல்களுக்கும் உளம்கனிந்த பாராட்டுகளும் நன்றிகளும் .

அ. வேல்முருகன் said...

பௌத்தம்
பௌதிக மாற்றமடைந்து
வெகு நாளாயிற்று

புத்தன் பெயரில்
புத்த விகாரைகள்
புதிய மடாதிபதிகள்

அம்பேத்கர் மதம் மாறினார்
ஆனதோ அப்படி இந்தியா
ஆயினும்

ஊன் உழைப்பை
ஊன்றி வளர்த்த நாட்டில்
உட்கார இடமில்லையென்றால்

பிழை திருத்தி
பிரிதொரு போருக்கு
தயாராகுவோம்